திருநள்ளாறு I திருச்சிற்றம்பலம் | திருக்குறுந்தொகை |
| உள்ளா றாததோர் புண்டரி கத்திரள், தெள்ளா றாச்சிவச் சோதித் திரளினைக் கள்ளா றாதபொற் கொன்றை கமழ்சடை, நள்ளா றாவென நம்வினை நாசமே. |
1 | இலங்கை மன்ன னிருபது தோளிற, மலங்க மால்வரை மேல்விரல் வைத்தவர் நலங்கொணீற்றர்நள்ளாறரை நாடொறும், வலங்கொள்வார்வினையாயினமாயுமே. |
திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- திருநள்ளாற்றில் எழுந்தருளிய இறைவர் சிவச்சோதித் திரள்; காரணக் கலைஞானக் கடவுள்; வஞ்ச நெஞ்சத்தவர்க்கு வழிகொடார்; நைஞ்ச நெஞ்சர்க்கருளுவர் : அவரை வணங்குவார் வினை மாயும். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) உள் ஆறாதது ஓர் புண்டரிகத் திரள் - ஏனைத் தாமரைகள் போல நீர்க் கீழ்ச் சேற்றில் கிழங்கு முதலாகத் தோன்றாது வீசம் முதலாகத் தோன்றி முளைத்த ஒப்பற்ற வெண்டாமரை - "ஊறுமருவி யுயர்வரையுச்சிமேல், ஆறின்றிப் பாயு மருங்குள மொன்றுண்டு; சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப், பூவின்றிச் சூடான் புரிசடை யானே" (8 - 414) என்பது திருமூலர் திருமந்திரம். ஆறாத - ஆறாக - வழியாகக் -கொள்ளாத என்னும் பொருளில் வந்தது. புண்டரிகத் திரள் - தாமரையின் தன்மைகள் எல்லாம் திரட்டித் தன்னுட் கொண்டது. தெள் ஆறாச் சிவச் சோதித் திரள் - தெள் - தெளிந்த - ஞானம். ஞானத்தெளிவு. ஆறா வழியாகக் காணப்படும். தெளிந்த சிவஞானத்தின் வழிக்காணும் சிவமாகிய பேரொளிப் பிழம்பு. -(2) ஆரணம் - வேதங்களின் தொகுதி. காரணக்கடவுள் என்க. காரணம் - நிமித்த காரணன். கலைஞானக் கடவுள் - எல்லாக் கலைஞானங்களையும் தருபவன். கலைஞானங்களுக்குப் பொருளாயுள்ளவன். கடவுள் - கடந்த பொருள்.-(3) அழல் சோரா - அழலினாற் சோர்வடைய.-(4) நலியும் - நலிவிக்கும். நலிந்த - நலிவித்த. இவையிரண்டும் பிறவினைப் பொருளில் வந்தன. வலியும் - பெரிய அருளையேயன்றிப் பெரிய வலிமையினையும் என்று உம்மை இறந்தது தழுவிற்று.-(5) உறவன் - உறவுடையவனாய் - நன்மை செய்பவனாய் நிறைந்து - உயிர்க்குயிராய் நிறைந்து. மறவனாய்ப் பன்றிப் பின்சென்ற மாயமே - ஆளுடைய நம்பிகள் "மறவனை யன்று பன்றிப் பின்சென்ற மாயனை" என்ற இத்தலப் (தக்கேசிப்பண்) பதிகத்து இதனை எடுத்தாண்டமை காண்க. நறவ நாறும் பொழிற்றிரு நள்ளாறன், "நறைவிரிவு நள்ளாறன்" என்பது நம்பிகள் தேவாரம். -(6) செக்கர் அங்கு அழி செஞ்சுடர்ச் சோதி - செவ்வான வொளியினை விஞ்சிய சிவந்த சுடர் போன்ற பேரொளி. நக்கர் - நக்க உருவுடையவர். வக்கரன் - ஒரு அசுரன். மாயன் - விட்டுணு. -(7) விஞ்சை - வித்தை, ஞானம். விஞ்சையிற் செல்வப் பாவை - ஞானத்தாயாகிய சிவ சிற்சித்தி. நஞ்ச - நைந்த. நைதல் - அன்பினால் உருகுதல். நைஞ்ச என்பது நஞ்ச என நின்றது.-(9) பாம்பு அணை - பாம்பாகிய படுக்கை. பூம் பணை - பூவாகிய இருக்கை. புராணன் - பழமை உடையவன். - (10) மலங்க - வருந்த. திருச்சிற்றம்பலம் | திருத்தாண்டகம் |
| ஆதிக்கணான்முகத்திலொன்று சென்றுவல்லாதசொல்லுரைக்கத் தன்கை வாளாற் சேதித்த திருவடியைச் செல்ல நல்ல சிவலோக நெறிவகுத்துக் காட்டு வானை மாதிமைய மாதொருகூ றாயி னானை மாமலர்மே லயனோடு மாலுங் காணா நாதியை நம்பியை நள்ளாற் றானை நானடியே னினைக்கப்பெற் றுய்ந்த வாறே. |
1 |