| குலங்கெடுத்துக் கோணிக்க வல்லான் றன்னைக் குலவரையன் மடப்பாவை யிடப்பா லானை மலங்கெடுத்து மாதீர்த்த மாட்டிக் கொண்ட மறையவனைப் பிறைதவழ்செஞ் சடையி னானைச் சலங்கெடுத்துத் தயாமுல தன்ம மென்னுந் தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க் கெல்லாம் நலங்கொடுக்கு நம்பியை நள்ளாற் றானை நானடியே னினைக்கப்பெற் றுய்ந்த வாறே. |
6 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- முழுமுதலாகிய இறைவர் திருநள்ளாற்றில் விளக்கமாக வீற்றிருந்தருள்கின்றார்; அவர் நம்பி; அவரை அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறு தான் என்னே! அற்புதம்! பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) ஆதிக்கண்ணான் - பிரமதேவன் - முதலிற் படைக்கப்பட்டவன். ஆதிக்கண்ணானது முகங்களுள் ஒன்று. "யோகரஹ்மாணம் விததாதிபூர்வம்" (எவன் முதற்கட் பிரமாவைப் படைக்கின்றானோ), "யோவைவேதாஞ்ச பிரஹிணோதிதஸ்மை" (எவன் அப்பிரமனுக்கு வேதங்களைக் கொடுக்கின்றானோ) என்பது சுவேதாசுவதாரம். "சங்கற்பத்தில் "அத்யப்ரஹ்மண :" ஆதிக்கட்டோன்றிய பிரமனுடைய என்பதும் காண்க. (இவை ஸ்ரீமத் முத்துக் குமாரத் தம்பிரான் சுவாமிகள் உதவிய குறிப்புக்கள்.) அல்லாத சொல் - ஐம்முகனாகியஇறைவனோடொப்பத் தானும் ஐம்முகவன் என்ற சொல். கைவாள் - கை - ஆகுபெயர். நகமாகிய வாள். திருவடி - பெரியோன். "வாகீசத் திருவடி" (1374). செல்ல - உயிர்கள் செல்வதற்கு. சிவலோக நெறி - சிவனுலகம் புகும் நெறி. சரியையாதி சிவநெறி நான்கு. நாதி - நாதன். இகர விகுதி ஆளி என்பது போல நாதனாந் தன்மையுடையவன் என்ற பொருள் குறித்தது. ஆறே! - ஏகாரம். என்ன அற்புதம் என்று வியப்புப் பொருளில் வந்தது. -(2) ஆ! ஆ! - இரக்கக் குறிப்பு. சங்கத்த முத்து - சங்கு ஈன்ற முத்து.-(3) அடலரவம் - ஆதிசேடன். மரணி - பிரமசாரி; மார்க்கண்டர். நடலரவம் - துன்பம்.-(4) விடு தோடு - தொங்கும் தோடு. ஒளிவிடும் தோடு எனினுமாம். "வானி, னகலா மீனி னவிர் வன விமைப்ப" (முருகு). சுட்டங்கம் - உலகம் சுட்ட ஊழியில் எஞ்சிய நீறு. -(5) சிலந்தி - திருவானைக்காவில் பூசித்துப் பின் கோச்செங்கட் சோழராக வந்தவர். கலந்தார் - தாமென்றும் அவனென்றும் பிரித்துக் காணாதபடி தியான உறைப்பினாற் கலந்தவர்.-(6) குலம் - பசுக்கள் என்ற குலம். கோள் - பாசம். பாசத்(கட்டு)தினாற் கொள்ளப்பட்ட போது உயிர்கள் பசுவாகிய குலஞ் சாரும்; கட்டு நீக்கியபோது பதியாகியகுலம் சாருமென்பது ஞானசாத்திரம். மலம் - ஆணவம். மாதீர்த்தம் - தூய்மை செய்யும் தண்ணிய அருள். ஆட்டிக்கொண்ட - ஆட்டி, அதனாற்றூய்மையாக்கித், தம்மிடத்தே கொண்ட. சலம் - கோபம். தயாமூலதன்ம மென்னும் - தன்மங்களுக் கெல்லாம் மூலமாகிய அன்பு என்னும் அறம். தாழ்ந்தோர் - தாழ்வெனுந் தன்மையுள் நின்றோர். தாழ்ந்தோர் - விரும்பியவர் என்றலுமாம். -(7) புகலூரானை - திருப்புகலூரினின்றும் போந்து திருநள்ளாறு தரிசித்து நினைந்து மீண்ட குறிப்பு. தே இரியச் சிதைத்தானை என்று கூட்டுக. தே - தேவர்கள். இனிய - பலபுறமும் சிதைந்து ஓட. அவன் - தக்கன். -(8) காளத்தியானைக் கயிலை மேய் நால்லானை - கயிலையும் காளத்தியும் ஒப்பென்ற குறிப்பு. -(9) முனிவன் - மார்க்கண்டர். குன்றாத - நினைவு குறையாத. அன்றாக - பகைமையாக. சென்றியாது என்றது சென்றது என நின்றது சென்றது. ஒன்று - வேண்டிய அந்த ஒன்று. சிவனே எம்பெருமான் எமது பற்றுச் சிவனேயாம். -(10) உறவாகி |