இன்னிசை - உறவாகிய (அன்புகொண்ட) இன்னிசை. அகரம் குறைந்தது. உற்ற பிணி - கயிலைமலைக்கீழ்ச் சிக்கிப் பிணிப்புண்ட தன்மை. மதி - கொன்றை - வன்னி - மத்தம் (ஊமத்தம்) - இவை இறைவர் சடையிற் சூடுபவை. "வன்னி கொன்றை மதமத்தம்" (பிள்ளையார் - திருவாஞ்சியம்). தலவிசேடம் :- திருநள்ளாறு - இது காவிரிக்குத் தென்கரை 52-வது தலம். நளன் பூசித்த காரணத்தால் நள்ளாறு எனப் பெயர் வழங்குவது. ஆதிபுரி, தருப்பாரண்ணியம், விடங்கபுரம், நளேச்சுரம் என்று முறையே நான்கு யுகங்களிற் பெயர்பெற்றது. நளன் பூசித்துக் கலி நீங்கப்பெற்ற தலம். ஒரு வேதியனுக்குப் பசுக் கொலைப்பழியும், கலிங்க அரசனுக்குப் பிராமண சாபப்பழியும், நீங்கிய தலம். விட்டுணு, பிரமதேவன், திக்குப்பாலகர். வசுக்கள், காசிபர், அகஸ்தியர், அருச்சுனன், போசன் முதலியோர் பூசித்துப் பேறு பெற்றது. இறைவனருள் வழியே தன்னை வழிபட்டோர்க்கு வரங்கள் அளித்துச் சனி பகவான் கோயில் வாயிலில் விளக்கமாய் வீற்றிருக்கின்றனர். முசுகுந்தர் தாபித்த விடங்கத் தலங்கள் ஏழனுள் ஒன்று. இத்தலத்தில் ஆளுடைய பிள்ளையார் அருளிய "போக மார்த்த பூண்முலை யாள்" என்ற பதிகம் திருவாலவாயில் சமணருடன் நிகழ்ந்த கனல் வாதத்தில் தீயில் வேவாது இருந்து சைவ சமய உண்மையை நிலைநாட்டிய பெருமை யுடையது. சுவாமியின் திருவுருவத்தில் தருப்பைக் கொழுந்து போன்ற அடையாளங்களுடைய தலம். அனல் வாதத்தில் இத்தருப்பதிகம் எழுந்தபோது அத்திருவேட்டினைவைதது அங்கிருந்தபடியே பிள்ளையார் இத்தலத்திற்குப் பதிகம்பாடிப் போற்றினதுடன், பாண்டி நாட்டினின்றும் போதும்போது, அங்குவந்து உள்ளத்துணையா யெழுந்தருளிய அருளினை நினைந்து மீண்டும் இத்தலத்துக் கெழுந்தருளித் "திருவாலவாயும் திருநள்ளாறும்" என்ற பதிகம் பாடிப்போற்றிய தலம். மூவர் பாடலும்பெற்ற பெருமையுடையது. இங்கு வழிப்பட்டோர் கலிநீங்கப் பெற்று நன்மை பெறுவது இன்றும் வெளிப்படையாகக் காணப்படுவது. அம்மை பெயர் பதிகத்துக் காணப்பெறும். சுவாமி - தர்ப்பாரண்யேசுவார்; அம்மை - போகமார்த்த பூண்முலையாள்; தியாகர் - நகவிடங்கர்; நடனம் - உன்மத்த நடனம்; தீர்த்தம் - சிவகங்கை, பிரம தீர்த்தம், நளதீர்த்தம் முதலியன. தலமரம் தருப்பை. பதிகம் 6. பேரளம் - காரைக்கால் இரயில் கிளைப்பாதையில் திருநள்ளாறு என்ற நிலையத்தினின்றும் தெற்கில் மட்சாலை வழி நாழிகை யளவில் இதனை அடையலாம். திருச்சாத்தமங்கை நாயனார் பதிகம் கிடைத்திலது! திருமருகல் திருச்சிற்றம்பலம் | திருக்குறுந்தொகை |
| பெருக லாந்தவம் பேதைமை தீரலாந், திருக லாகிய சிந்தை திருத்தலாம் பருக லாம்பர மாய்தோ ரானந்தம், மருக லானடி வாழ்த்தி வணங்கவே. |
1 | ஓது பைங்கிளிக் கொண்பா லமுதூட்டிப் பாதுகாத்துப் பலபல கற்பித்து மாது தான்மரு கற்பொரு மானுக்குத், தூதுசொல்ல விடத்தான் றொடங்குமே. |
4 | நீடு நெஞ்சு ணினைந்து கண்ணீர்மல்கு, மோடு மாலினோ டொண்கொடி மாதராள் மாட நீண்மரு கற்பெரு மான்வரிற், கூடு நீயென்று கூட லிழைக்குமே. |
8 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- மருகற் பெருமான் அடிவாழ்த்தத், தவம் பெருகலாம்; பேதைமை தீரலாம்; சிந்தைத்திருகல் திருத்தலாம்; பரமானந்தம் பருகலாம்; அவரது திருவேடங் கைதொழ வீடு எளிதாகும்; அவரை நினைப்பார்க்கு நில |