பக்கம் எண் :


414திருத்தொண்டர் புராணம்

 

துறை. 3வது பாட்டு மிக்கருத்து. -(3) பூசல் - பிணக்கம். -(4) தலைவன் - அகப்பொருட்சுவைக் குறிப்பு. புன்னைக் கானல் - புன்னை வனம் என்றது தலப்பெயர். புன்னை - தலமரம். "புன்னைப் பொழிற் புகலூ ரண்ணல்" "புன்னை" 9வது பாட்டு இக்கருத்து. (திருவிருத்தம்). என்னுள் ஆக - என் மனத்துள் ஆக்கமுண்டாம்படி. "பாண்டியற்காகவே" (தேவா); "துஞ்சும் போதாக வந்து" (தேவா); "அலமந்த போதாக அஞ்சேல் என்று" (தேவா). -(5) எழுத்தஞ்சும் எண்ணி நாமங்கள ஏத்தி - எண்ணி - மனத்தால்; ஏத்தி - வாயினால்; எழுந்தஞ்சே நாமங்களாம். கண் - அகக்கண புறக்கண் இரண்டுங் குறித்தது.-(6) புண்டரீகம் - இதய தாமரை. "காரணபங்கய மைந்து" என்றபடி ஏனை ஆதாரத் தாமரைகளுமாம். (7) தலை காணல் - இயல்பறிதல். தலைநிற்றல் - நிலை அறிந்து வழிபடுதல். தத்துவன் - தத்துவங்களின் வழி அருள் புரிபவன். "பேணு தத்துவங்களென்னும் பெருகு சோபான மேறி ஆணையாஞ் சிவத்தைச் சார அணைபவர்" (752). - (8) களிறு அஞ்சு - ஐம்புலன். -(9) பொன் - கடல் - பொன்னிறம் - கடல் நிறம் குறித்தன ஆகுபெயர். -(10) ஊரினின்றும் புறப்பட்டு ஊரைத் தொழுது செல்லுதல் குறிப்பு. பொத்தினான் சேமஞ் செய்தான்.

1511. (வி-ரை.) திருநீலநக்கடிகள்.....ஏக - திருநீலநக்கரும் சிறுத்தொண்டரும் பிள்ளையாரையும் அரசுகளையும் கண்டு வணங்கி உடனிருக்க எழுந்தருளிய செய்தி. 1507லும், ஏனை அடியார்கள் எழுந்தருளியது 1508லும் உரைக்கப்பட்டன. முருகனார் இவர்களைத் தமது திருமடத்தில் வைத்து உபசரித்தனர்.

பெருநீர்மை யடியார்கள் - "பாங்கில் வரும் சீரடியார்" (1508). பெருநீர்மையாவது அடிமைத் திறத்தின் சால்பினால் மிக்கிருத்தல்.

பிறரும் - ஏனை உலகவர்கள். இவர்கள் அடியாரின் வேறாயினார். சிறப்பின்மை பற்றிக் கடையில் வைத்துப் பிறர் என்றார்.

விடைகொண்டு ஏக - பிள்ளையாரையும் அரசுகளையும் நகர்ப்புறத்து வெகுதூரம் வழிவிட்டு அவர்களது அருள்விடை பெற்றுக்கொண்டு திரும்ப. ஏக - தத்தம் பதிகளுக்குச் செல்ல. நிற்க என்னாது ஏக என்றதனால் பிரியலாற்றாது நெடுந்தூரம் பின்பற்றி உடன் வந்தனர் என்பது கருதப்படும்.

ஒருநீர்மை மனத்து - சிவபெருமான் கழல்களில் இரண்டுபடாது ஒன்றுபட்டு நின்ற மனமுடைய. வெய்ய நீற்றறையி னுள்ளிருந்தபோது "ஈச னெந்தையிணையடி நீழலே" எனவும், கல்லினோடு பிணைத்துக் கடலினக்ததே புக நூக்கப் பட்ட போது "நற்றுணை யாவது நமச்சி வாயவே" எனவும், கடலினின்று கரையேறியபோது "சித்த மொருக்கிச் சிவாயநமவென்று", "உன்கழலே நினையுங் கருத்துடையேன்" எனவும், கூறித், திருவடிப்பற்றில் உறைத்து ஒன்றுபட்டு நிற்பது அரசுகளது திருமனம். "ஒன்றி யிருந்து நினைமின்க ளுந்தமக் கூனமில்லை" என்று இந்நிலையை உருகுக்கு அவர் உபதேசித்தருளினர். "கைச்சிறு மறியவன் கழலாற் பேணாக் கருத்துடை ஞானசம்பந்தன்" (அச்சிறுபாக்கம் - குறிஞ்சி - 11), "கொன்றையா னடியலாற் பேணா வெம்பிரான் சம்பந்தன்" (திருத்தொண்டத் தொகை - 5) முதலியவை பிள்ளையாரது ஒரு நீர்மை மனத்தின் உறுதியினை விளக்குவன.

உடைய என்பதனை அரசு என்பதுடனும் கூட்டுக. உடைய - ஆளுடைய. சிவ பெருமானால் ஆளாகக்கொள்ளப்பட்ட. எங்களை ஆளாக உடைய என்றலுமாம்.

பிள்ளையாருடன் அரசும் - உடன் என்பது எண்ணும்மைப பொருளில் வந்தது.

தலவிசேடம் :- திருவம்பர் - காவிரியின் வடகரை 45வது தலமாகிய திருஇன்னம்பர் என்ற தலத்தினின்றும் வேறு பிரித்துணரற்பாலது. அம்பர்ப் பெருந்திருக்கோயில் என வழங்கப்பெறுவது. கோச்செங்கணார் செய்த மாடக்கோயில்களுள் ஒன்று. பிள்ளையார் பதிகம் காண்க. இப்பதியில் அம்பர்மாகாளம் என்பது தனிக்கோயில். இவை காவிரிக்குத் தென்கரை 54-வது, 55-வது தலங்கள், இத்தலத்திற்கு நாயனார் பதிகம் கிடைத்திலது!