பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்419

 

தலப்பெயருடன் சேர்த்து வழங்கப்படுவது. திருக்கடவூர் - பிறிதினியைபு நீக்கிய விசேடணம். மயானம் - பேர்க் காரணம் பற்றித் தலவிசேடம் பார்க்க.

ஏர்மன்னும் இன் இசைப்பா பல - ஏர் - சொல்லும் பொருளுமென் றிரண்டின் சிறப்பு. இன் இரை - சந்தச் சிறப்பு. பா - யாப்புச் சிறப்பு. பா - பதிகம் என்ற பொருளில் வந்தது.

பல - நாயனார் பாடிய பல பதிகங்களுள் திருக்குறுந்தொகைப் பதிகம் ஒன்றே கிடைத்துள்ளது!

கார்மன்னும் கறைக்கண்டர் - கார் - காரின் தன்மை. மன்னுதல் - பொருந்துதல். நிறமும் பயனும் பற்றிய உவமை.

தேர்மன்னு மணிவீதி - தேர்செல்லுதல் வீதிக்கு அழகு. ஒரு நகரத்தில் தேர்வீதிகள் சிறப்புடையது என்ப தின்றுங்காணலாம்.

248

திருக்கடவூர்த் திருமயானம்

திருச்சிற்றம்பலம்

திருக்குறுந்தொகை

குழைகொள்காதினர்கோவணவாடையார்; உழையர்தாங்கடவூரின் மயானத்தார்;
பழய தம்மடி யார்செய்த பாவமும், பிழையுந் தீர்ப்பர் பெருமா னடிகளே.

1

உன்னி வானவ ரோதிய சிந்தையிற், கன்ன றேன்கட வூரின் மயானத்தார்,
தன்னை நோக்கி தொழுதெழு வார்க்கெலாம். பின்னை யென்னார் பெருமானடிகளே.


இறைவ னாரிமை யோர்தொழு பைங்கழல், மறவ னாாகட வூரின் மயானத்தார்
அறவ னாரடி யாரடி யார்தங்கள், பிறவி தீர்ப்பார் பெருமா னடிகளே.

4

அரவு கையின ராதி புராணனார், மரவு சேர்கட வூரின் மயானத்தார்
பாவு வாரிடர் தீர்ப்பர் பணிகொள்வர், பிரமன் மாற்கும் பெருமா னடிகளே.

8

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- கடவூர் மயானத்துப் பெருமானடிகள் அடியார்களது பாவமும் பிழையும் தீர்ப்பர்; பின்னையென்னார்; அடியாரடியார் பிறவி தீர்ப்பர்; ஒத்தொவ்வாதன செய்து உழலும் பித்தர் ஒப்பர்; என்றிவ்வா றெல்லாம் அறியப்படுபவர்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) உழையார் - மான்கன்றை உடையவர். பக்கத் திருப்பவர் என்றலுமாம். பெருமானடிகள் - இத்தலத்துச் சுவாமி பெயர். பொதுவாக இறைவர் பெயருமாம். "புக்குப் பெருமானடி சேவடியிற் பொன்மா மலர் கொண்டு புனைந்து" (தக்கயாக்கப்பரணி - 323.) "இங்குப் பெருமானடி என்றது மகாதேவர் திருநாமம். இதிற் ‘கள்' என்பது தொக்கதென்பாரும், இல்லை யென்பாருமுளர்...பெருமானும் அடிகளும் அவரே" என்ற உரையும் காண்க. மூவர் பதிகங்களிலும் இப்பெயராற் போற்றப்பட்டது காண்க. -(2) பின்னை என்னார் - பின்னை என்னாது அப்போதே அருள் ஈபவர். -(3) ஆலம் உண்டு அமுதே மிகத் தேக்குவர் - தாம்நஞ்சு உண்டு அமரர்க்கு மிகவும் அமுதம் பெருகத் தருவர். தாம் உண்ட நஞ்சமே அமுதமாகப் பெருக்க வைப்பர் என்றலுமாம். "நஞ்செழ...ஆகந்தன்னில் வைத்தமிர்த மாக்குவித்தான்" (மறைக்காடு - பிள்ளையார் - பியந் - காந்.) -(4) மறவனார் - வலியர். மறக்கருணை செய்பவர் என்றலுமாம்; அறவர் - அறக்கருணை செய்பவர். -(5) ஒத்து ஒவ்வாதன செய்து உழல்வார் ஒரு பித்தர் - மெய்ம்மையும் பொய்ம்மையு மாயினார் - சோதியுமா யிருளாயினார் - துன்பமுமா யின்பமாயினார் என்றிவ்வாறு பலவும் மாறுபாடாக நிற்றலின் பித்தர் போன்றவர். எல்லாமா யிருக்குங் கடவுட் டன்மைபற்றி இகழ்ச்சித் துதியாகக் கூறியது. -(7) மயக்குறும் பிணங்கொள் காடர் - எல்லா உலகங்களும் அழிந்து உயிர்களும் மயங்கித் தம்முள் ஒடுங்கும் இடம் காடு எனப்பட்டது.

குறிப்பு :- இப்பதிகத்தில் எட்டுப் பாட்டுக்களே கிடைத்துள்ளன!

தலவிசேடம் :- திருக்கடவூர் மயானம் - இது காவிரிக்குத் தென்கரையில் 48-வது தலம். ஒரு கற்பகத்தில் பிரமனை எரித்து மீள உயிர்ப்பித்துச் சிருட்டி