வல்லமை பெற அருளிய தலமாதலின் மயானம் எனப்பெயர் வழங்குவது. பிரமதேவர் பூசித்தது. இத்தலத்திற்கு அரை நாழிகையளவில் உள்ளது காசித் தீர்த்தம்; அதன் பெருமை முன்னர்த் திருக்கடவூர்த் தலவிசேடத்துள் உரைக்கப்பட்டது. அதில் பங்குனிமதி அசுவினி நாளில் அமிர்தகடேசர் எழுந்தருளித தீர்த்தங்கொடுப்பது சிறப்பு. சுவாமி பெரிய பெருமானடிகள் - பிரமபுரேசர்; அம்மை - அமலக்குய் மின்னம்மை; தீர்த்தம் - காசித்தீர்த்தம்; பதிகம் - 3. இது திருக்கடவூரினின்றும் கிழக்கே மணல்வழி முக்கால நாழிகை யளவில் அடையத்தக்கது. திருப்பதிகங்களால் இத்தலம் மிகச் சிறப்புடையது எனவும், இறைவரும் பேரருளாளர் எனவு மறியப்படும். 1514. | சார்ந்தார் புகலிடத்தைத் தான்றோன்றி மாடத்துக் கூர்ந்தார்வ முறப்பணிந்து கோதிறமிழ்த் தொடைபுனைந்து வார்ந்தாடுஞ் சடையார்தம் பதிபலவும் வணங்கியுடன் சேர்ந்தார்க டம்பெருமான் றிருவீழி மிழலையினை. |
249 (இ-ள்.) வெளிப்படை. தம்மை வந்து சார்ந்தவர்களுக்கு அஞ்சலருளிப் புகலாக விளங்கும் சிவபெருமானை அத்தலத்துத் தான்றோன்றிமாடம் என்னும் கோயிலினுள்ளே கண்டு மிகுந்த அன்புபொருந்தப் பணிந்து குற்றமற்ற தமிழ்ப் பதிகக் தொடைசாத்தி அங்குநின்றும் புறப்பட்டு, அசைந்து ஆடும் சடையினையுடைய இறைவர் எழுந்தருளிய பதிகள் மற்றும் பலவற்றையும் சென்று வணங்கிப், பின்பு (நாயன்மா ரிருவரும்) உடனாகத் தமது பெருமானது திருவீழிமிழலையைச் சேர்ந்தார்கள். (வி-ரை.) சார்ந்தார் தம் புகலிடம் - யாவரேயாயினும் வந்தடைந்தால் அபயம் கொடுப்பவர் சிவபெருமான். புகலிடம் - அபயம் தரும் இடமாக உள்ளவர். "மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையிற், கண்ணுதலான் பெருங்கருணை கைக்கொள்ளும்" (திருஞான - புரா - 77). புகல் - அபயம் புகுதல். புகலி என்றது காண்க. தான்தோன்றி மாடம் - திரு ஆக்கூர்க் கோயிலின் பெயர். பதிகத்துக் காண்க. சுவாமி சுயம்புமூர்த்தி யாதலின் தான்தோன்றி எனப்படுவர். தான்தோன்றியினது மாடம் என்க. மாடக்கோயில் ஆதலின் மாடம் - எனப்பட்டது. கூர்ந்த ஆர்வமுற என்க. கூர்தல் - மிகுதல்; கூர்ந்த ஆர்வம் என்பதில் அகரம் விகாரத்தாற் கெட்டுக், கூர்ந்தார்வமென நின்றது. தமிழ்த் தொடை - திருப்பதிகம். தொடை என்றதற் கேற்பப் புனைந்து என்றார். வார்ந்து ஆடும் - வார்தல் - அசைதல். வளர்தல் - நீளுதல் என்றலுமாம். பதிபலவும் - ஆளுடையபிள்ளையார் புராணத்துள் "மிக்க கோயில்கள் பிறவுடன் தொழுதுபோய் மீயச்சூர் பனிந்தேத்திப், பக்கம் பாரிடம் பரவநின் றாடுவார் பாம்புர நகர்சேர்ந்தார்" (537) எனவும், திருப்பாம்புரத்தினின்றும் "இடமற்று முள்ளன போற்றி...திருவீழிமா மிழலையின் மருங்குறச் செல்கின்றார்" (538) எனவும் கூறுகின்றார். திரு ஆக்கூரினின்றும் திருமீயச்சூர் வரும்வரை வணங்கிய பதிகள் கூறப்படவில்லை. திருக்கடவூரினின்றும் வடக்கு நோக்கித் திருவாக்கூருக்கு நாயன்மார்கள் எழுந்தருளியபடியால், அங்குநின்றும் பின்னரும் மேற்குநோக்கிச் செல்லும் சாலை வழியே சென்றிருத்தல் இயல்பு. அவ்வழி சென்றிருந்தால் திருச்செம்பொன்பள்ளி, திருவிளநகர், - திருமயிலாடுதுறை வணங்கித், தெற்கு நோக்கிய சாலைவழியே, திருவழுவூர் வீரட்டானம் வணங்கித் திருமீயச்சூருக்கு எழுந்தருளியிருத்தல் கூடும். ஆனால் தமது இந்த யாத்திரையில் முன் பகுதியில் திருச்செம்பொன்பள்ளி முதலியவற்றை ஆளுடைய பிள்ளையார் வணங்கியமை முன்னர் அறிந்தோம். பின்னரும் வழியில் வணங்குதலில் இழுக்கில்லை. ஆக்கூரினின்றும் மீளவும் திருக்கடவூர் போந்து பொறையாற்றின்வழி மேற்குநோக்கிச் செல்லும் சாலை ஒன்றுளது. அதில் தலங்கள் இல்லை. |