பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்437

 

பதிகக் குறிப்பு :- வீழிமிழலையுள் விகிர்தனாதே வேதத்தின் பொருளர் அடியார்க்கென்றும் அமுதர்; பொய்யர்க்கு என்றும் விருந்தினர்; விறகிடைத்தீயர்; எந்தையு மெந்தை தந்தை தந்தையுமாவர்; வெந்தழலுருவர்; வித்தினின் முளையர் என்றிவ்வாறுள்ள பல தன்மைகளாலும் மறியப்படுபவர்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :-(1) ஓசைக் கேள்வியர் - ஓசையைக் கேட்டு அருள்பவர். வேதத்தின் பொருளர் - வேதத்திற் கூறப்படும் பரம்பொருளா யுள்ளவர். -(2) காலையில் - காலை எழும் ஞாயிறுபோல. காலையில் - கங்குலில் - இரண்டினும் இல் - உவம உருபுகள். காலை - காலையில் முளைக்கும் செஞ்ஞாயிறு; ஆகுபெயர். கங்குலில் - என்றதும் அவ்வாறே. கங்குல் - நடுயாமம் - இருள் குறித்து. மாலையில் - இல் - ஏழனுருபு. -(3) நெருநல் - நேற்றைய நாள்; இறந்த காலம். இன்று நிகழ்காலம். நாளர் - வருநாளர்; எதிர்காலம். மூன்று காலமுமாவர் என்க. இருவர் - அரிஅயன் . பொருந்துதல் - உள்ளிருந்து இயக்கி அவ்வவர் தொழில்களைச் செய்வித்தல்; விருந்தினர் - அறியப்படாதவர். புதியர். -(4) நிலையிலா ஊர் மூன்று - பரந்துசெல்லும் திரிபுரம். அழியும் என்றலுமாம் விலையிலா - மதிப்பற்ற. -(5) மொட்டின் மலர்வுழி வாசத் தேனர் - முகையில் முன்னர் மறைந்து நின்று பின்னர் மலரும்போது வெளிப்படும் மணமும் தேனும்போலப் பக்குவகாலத்தில் உயிர்களால் அறிந்து பலவாற்றாலும் அனுபவிக்கப்படுபவர். கறவிடைப் பாலின் நெய்யர் கரும்பினிற் கட்டியாளர் - பாலின் நெய்யும் கரும்பிற் சுவையும் போல்பவர். "கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போல" (திருவா). விறகிடைத்தீயர் - "விறகிற் றீயினன்(தேவா). இவை இறைவன் உயிரோடு அத்துவிதமாய்க் கலந்து நிற்கு நிலையும், சிவசாதனத்தால் வெளிப்படு நிலையும் குறித்தன. -(6) எண் அகத்து இல்லையல்லர் - உளரல்லர் - எண்ணுதற்குப் பொருளாக அடங்கும் தன்மையர் அல்லர் எனவும் கூடாதவர்; எண்ணுள் அடங்குவாரென்று கூறவும் இயலாதவர்; காற்றில் இருவர்; மண் அகத்து ஐவர்; நீரில் நால்வர்; தீயில் மூவர்; விண் அகத்து ஒருவர் - நிலம் முதலிய பூதங்களில் முறையே ஐந்து முதலாகிய குணங்களாய் நின்றவர். "பாரிடை யைந்தாய்ப் பரந்தாய் போற்றி, நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி, தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி, வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி, வெளியிடை யொன்றாய் விளைந்தாய் போற்றி" (திருவாசகம் - போற்றித் திருதகவல் 137 - 141), "மண்ணதனி லைந்தைமா நீரினான்கை வயங்கெரியின் மூன்றைமா ருதத்தி ரண்டை, விண்ணதனி லொன்றை" (தாண்ட - கற்குடி 3) .-(7) எந்தையு மெந்தை தந்தை தந்தையு மாய வீசர் - "எம்பிரா னெந்தை தந்தை தந்தையெங் கூட்ட மெல்லாந், தம்பிரா னீரே யென்று வழிவழி சார்ந்து வாழு, மிம்பரின்மிக்க வாழ்க்கை" (ஏயர் - கோ - புரா 392). ஆன்நெய்யால் வேட்கும் வெம்தழல் உருவர் - பசுநெய்யினால் ஆகுதி செய்யும் சிவயாகத்தீயின் உருவாயிருந்து அருச்சனை யேற்று அருள்பவர். வேம் - விருப்பந்தரும். -(8) இத்தலத்தில்திருமால் சக்கரம் பெற வேண்டிச் சிவபெருமானை நோக்கித் தவஞ்செய்து கண்ணைத் தோண்டி அருச்சித்த வரலாறு. ஆற்றல் - செய்தற்கரிய வல்லமை குறித்தது. இழிச்சும் கோயில் - விண்ணுலகினின்றும் கொணர்ந்த விமானம். -(9) பறைத்தல் - போக்குதல். வித்தினின் முளையர் - உயிர்க்குயிராயவர்.

III திருச்சிற்றம்பலம்

திருவிருத்தம்

வான்சொட்டச் சொட்டநின் றட்டும் வளர்மதி யோடயலே
தேன்சொட்டச் சொட்டநின் றட்டுந் திருக்கொன்றை சென்னிவைத்தீர்!
மான்பெட்டை நோக்கி மணாளீர்! மணிநீா மிழலையுளீர்!
நான்சட்ட நும்மை மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே!

1

கண்டியிற் பட்ட கழுத்துடை யீர்!கரி காட்டிலிட்ட
பண்டியிற் பட்ட பரிகலத் தீா!பதி வீழிகொண்டீர்!