பக்கம் எண் :


438திருத்தொண்டர் புராணம்

 

உண்டியிற் பட்டினி நோயி லுறக்கத்தி லும்மையைவர்
கொண்டியிற் பட்டு மறக்கினு மென்னைக் குறிக்கோண்மினே.

6

கறுக்கொண் டரக்கன் கயிலையைப் பற்றிய கையுமெய்யும்
நெறுக்கென் றிறச்செற்ற சேவடி யாற்கூற்றை நீறுசெய்தீர்!
வெறிக்கொன் றைமாலை முடியீர்! விரிநீர் மிழலையுளீர்!
இறக்கின்று நும்மை மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே.

10

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- மிழலையுளீராகிய இறைவரே! நான் நும்மை எக்காரணங் கொண்டேனும் மறக்கினும் என்னைக் குறிக்கொண் டருளுதல்வேண்டும் என்று பிரார்த்தித்தது.

பதிகப் பாட்டுக் குறிப்பு :-(1) சொட்டுதல் - மிகுதியும் துளித்தல். சட்ட - முழுதும், "சட்ட வினியுளது சத்தேகாண்" (சிவஞா - போ - 9), "சட்ட நேர்பட" (திருவா). -(2) பந்தமும் வீடும் பரப்புகின்றீர் - "பந்தம் வீடு தரும் பரமன்" (300) உரை பார்க்க. பரப்புகின்றீர் - மறைத்தல் என்ற அருட்டொழிலால் உலகுக்குக் கன்மபலனை ஊட்டுகின்ற வகையால் பந்தம் என்னும் வறுமைக் காலத்தை ஆக்கியும், அதனைப் போக்குகின்ற வகையால் வீடு என்னும் அருட்டொழிலால் படிக்காசு வைத்தும் தொழில் செய்கின்றீர் என்று சரிதக் குறிப்புப்பட உரைத்தலுமாம். பசு - இடபத்தைக் குறிததது. உயிர்கள் என்றலுமாம். வெந்தழல் ஓம்பும் - மறையோர் மிகுந்த பதியாதலின் வேள்வியை விதந்து கூறினார். "அந்தணாளர்....தழலுருவர்" (நேரிசை - 7), பத்திமையால் மேற்பட்ட அந்தணர் வீழி (5) என்பதுமிது. தென்திசைக்கே உந்திடும்போது - இயமன் தமர் கொண்டு போகும்போது. "உயிர்கொண்டு போம்பொழுது" (அங்கமாலை). உந்திடும் - இயமன்றூதரின் கொடுமை. நமன்தமர் கோட்பட்டு (5); கூற்றம் கண்டு (7); நமன்றமர் கொள்ளையிற்பட்டு (9) என்பவையும் இக்கருத்தின. -(3) நீர்...அனல் - ஐம்பெரும் பூதங்கள். கலைப்பொருள் - கலை ஞானங்கட்கெல்லாம் பொருளாவார். விலக்கின்றி நல்கும் - படிக்காசு வைத்த சரிதக்குறிப்பு. எல்லாவுயிரையும் ஒப்பக்காக்கும் என்றலுமாம். மெய்யில்....குலைக்கின்ற - உடலின் அங்கங்கள் பலங்கெட்டொழிகின்ற. -(4) தீத்தொழிலான் - தக்கன். பேய்த்தொழிலாட்டி - பத்திரகாளி. "வேலார்கை வீரியைமுன் படைத்தார் போலும்" (தாண்). வேய்த் தொழிலாளர் - வேய்ங்குழ லூதுபவர். விக்கி - மரண அவத்தை. அஞ்செழுத்தும் ஒத்து - திருவைந்தெழுத்தையும் ஓதுதல். மரணகாலத்துக் காக்கவல்ல - விடாமல் ஓதத்தக்க - அதனையும் என உம்மை உயர்வு சிறப்பு. -(5) அந்தணர் - வீழியந்தணரையும் என மாற்றுக. வேறு - தனியாக. பத்திமையால் மேற்பட்ட அந்தணர் - வீழியின் அந்தணர் சிறப்பு. "மறையோர் திருப்பதி" (1519). நாட்பட்டு வந்து - சைவத்திறத்தினின்றும் பலநாள் வழுவிப் பின்வந்து. பிறந்தேன் - சிவனைப் பேசியதனாற் பிறந்தவனாயினேன். கோட்பட்டு - கொள்ளப்பட்டு. கோள் - கொள்ளல். முதனிலைத் தொழிற் பெயர். பகுதி நீண்டது. -(6) கண்டி - உருத்திராக்க வடம். இறைவர் உருத்திராக்கம் பூண்ட கோலத்தைக் கூறும் அரிய சில இடங்களுள் இஃது ஒன்று பண்டி - உடல். "புழுப்பெய்த பண்டி தன்னை" (தேவா). பண்டியிற் பட்ட பரிகலம் - உடலினின்றும் வெந்து எஞ்சிய மண்டையோடாகிய உண்கலம். உண்டி - பட்டினி - நோய் உறக்கம் - ஐவர்கொண்டி - இவை இறைவனை மறக்கச்செய்யும் உபாதிகள். கொண்டி - கொடுஞ்செயல்; கொள்ளை. நல்லுணர்வைக் கொள்ளை கொள்ளுதலால் ஐவர் கொண்டி என்றார். ஐவர் ஐம்புலன்கள். -(7) தோற்றங்கண்டான் - பிரமன். சீற்றம்....கூற்றம்கண்டு - காலவேதனையுள் அகப்பட்டு. -(8) பிறவிச்சுழி - பிறவியில் வரும் பற்பல சூழல்களுள். -(9) நமன்தமர்தம் கொள்ளை - இயமன் தூதராற் கொள்ளப்படுதல். கொள்ளை கொள் - பகுதி. ஐ - செயப்படுபொருள்