| நஞ்சைத் தமக்கமுதா வுண்ட நம்பர் நாகேச் சரத்துள்ளார் நாரை யூரார் வெஞ்சொற் சமண்சிறையி லென்னை மீட்டார் வீழி மிழலையே மேவி னாரே. |
8 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- கயிலாயமலை, புலியூர்ச் சிற்றம்பலம், காளத்தி, அண்ணாமலை, கச்சிமேற்றளி, ஆரூர், பேரூர் முதலாகிய தலங்களில் வெளிப்பட்டு எழுந்தருளியிருக்கும் இறைவர், மாதுயரந் தீர்த்தென்னை யுய்யக்கொண்டு வெஞ்சொற் சமண சிறையினின்றும் என்னை மீட்டார்; அவர் வீழிமிழலையே மேவினார். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) தந்தமாதனம் - ஒருமலை. நெய்தலும் குறிஞ்சியும் மயங்கிய திணைப்பகுதி. தேவார வைப்புத்தலங்களுள் ஒன்று. வீரவாகு தேவர் சூரபதுமன்பால் தூது சென்றபோது, கந்தமாதன மலையில் ஒரு பேருருவம் எடுத்து நின்று, சூரனகரையும் பிறவற்றையும் நோக்கினார் என்றும், அவவாறு அவர் நிற்றலை ஆற்றாது அம்மலை கீழ் ஆழ்ந்து பின் அவர் எழுக என்று வழங்கிய அருளால் மீண்டும் முன்போல் மேல் எழுந்ததென்றும் வரும் வரலாறுகள் கந்தபுராணத்துட் (வீரவாகு கந்தமானஞ் செல்படலம் - கடல்பாய் படலம்) காண்க. இது பாண்டி நாட்டில் உள்ளதாக் கணிக்கப்படும். திருச்செந்தூர் - தனுக்கோடி - கடற்கரைகளில் நீர்மூழ்குவோர் இம்மலையின் சார்புபற்றிச் சங்கற்பம் செய்து மூழ்கும் வழக்குக் காண்க. (2) கேதிசரம் - ஈழநாட்டுப் பாடல் பெற்ற தலம். மாதுயரந்தீர்த்தென்னை யுய்யக் கொண்டார் - நாயனார் சரித அகச்சான்று. - (3) அளப்பூர் - தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று. சோழ நாட்டிலுள்ளது? "ஆரூ ரத்தா வையாற் றமுதே யளப்பூ ரம்மானே" (நப்பி - ஊர்த்தொகை). அந்தணர்கள் மாடக்கோயில் உண்ணுழிகையார் - வைப்புத்தலங்களுள் ஒன்றாயும் மறையோர் பதியாயும் மாடக்கோயிலாகவும் உள்ளது போலும்? பெண்ணாகடம் - தலம்; தூங்கானைமாடம் - அதன் கோயில். போரவூர் - வைப்புத் தலங்களுள் ஒன்று. "பேரூர் பிரமபுரம் பேரா வூரும்" (க்ஷேத்திரக் கோவைத் திருத்தாண்டகம் - 1). - (4) பண்காட்டும் - இசையினால் பண்களை வழிபாடிக் காட்டுதல்போல் ஊதும். வெண்கோட்டுக் கருங்களிறு - முரண்அணி. - (5) புலியூர்ச்சிற்றம்பலம் - தில்லையம்பலம் - ஸ்ரீநடராசர். - (6) பெரும்புலியூர் - திருவையாற்றுக்கு வடமேற்கில் 1 நாழிகையளவில் உள்ளது. வியாக்கிரபாத முனிவர் பூசித்த ஐந்து தலங்களுள் ஒன்று. விரும்பினார் - சுவாமி பெயர். "பிரியாரே" (ஆளுடையபிள்ளையார் தேவா). பெரும்பற்றப்புலியூர் மூலட்டானத்தார் - தில்லை திருமூலநாதர். - (7) மாகாளம் - அம்பர் மாகாளம். மாகாளேச்சுரம் என்றொரு வைப்புத்தலமு முண்டு என்ப. காபாலி - மயிலைக் காபாலீச்சுவரர். - (8) பேரூர் - மேலைச்சிதம்பரம் எனப்பெறும். மேல்கொங்குநாட்டில் உள்ளது. "மீகொங்கி லணிகாஞ்சி வாய்ப், பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தே பெற்ற மன்றே" (நம்பி - கோயில் - 10). [மீ - மேற்கு; காஞ்சி - நதி.] கச்சியப்ப முனிவர் இத் தலபுராணம் பாடியுள்ளார். தஞ்சைத் தளிக்குளம் - தஞ்சைப் பெரிய கோயிலின் வடபுறம் சிவகங்கை என்றும் வழங்கும் தீர்த்தக் குளத்தில் நடுவுள் உள்ள பழங்கோயில். இப்போது கிலமாயுள்ளது. வைப்புத்தலங்களுள் ஒன்று. பெரிய கோயிலுக்கு முற்பட்டது. தக்களூர் - வைப்புத்தலங்களுள் ஒன்று. சாந்தை - சாத்தமங்கை என்பது சாந்தை என மருவி வழங்குவது. அய்வந்தி - அத்தலக்கோயில். வெஞ்சொற் சமண் சிறையில் என்னை மீட்டார் - நாயனார் சரித அகச்சான்று. - (9) கொண்டல் - வைப்புத்தலங்களுள் ஒன்று, கோவலூர் வீரட்டம் - தலப் பெயரும் கோயிற் பெயரும். பெருங்கோயில் - மாடந் |