கோயில். தண்டலை - தண்டலை நீணெறி. தண்டலைச்சேரி என வழங்கும். மாடக்கோயில்; அரிவாட்டாய நாயனார் வழிபட்ட தலம். வண்டலொடு மணற்கொணரும் - நீர்ச்சிறப்பு. வைகலின் மேல்மாடம் - வைகல் - ஒரு தலம். அதனுள் மேல்புறம் உள்ளது மாடக்கோயில். - (10) அரிச்சந்திரம் - சோழநாட்டில் உள்ள வைப்புத்தலங்களுள் ஒன்று. திருநாட்டியத்தான்குடிக்கு வடமேற்கில் ஒரு நாழிகை யளவில் கற்சாலை வழியில் அரிச்சந்திரா நதியின் தென்கரையில் உள்ளது. பெண்ணையினின்றும் பிரிந்து வேதாரணியத் துறையில் கடலொடு கலக்கும் ஒரு கிளைநதி அரிச்சந்திரா நதி என்று வழங்கப்படும். அம்பர் - திரு இன்னம்பர். ஏமகூடம் - திருஏமகூடமலை. முருகப்பெருமான் சூரனோடு போர் புரிவது கருதித் திருச்செந்தினின்றும் போந்து இலங்கையை நீங்கி வீரமகேந்திரபுரம் என்னும் சூரனூர்க்கு முன்போந்து அங்குப் பாடிவீடு ஒன்று உளதாக்கிப் போர்முகத்தராய் எழுந்தருளியிருந்த இடம் ஏமகூடம் எனப் பெயர் பெற்ற தென்பது கந்தபுராணம் . "ஒர் கோநக ரியற்றியே, நாடு மேம கூடமென்று நாம மொன்று நாட்டினான்" (கந்த. புரா - ஏமகூடப் படலம் - 33). இதுவே கதிர் காமம் என வழங்கப்பெறுவ தென்ப. செந்திலிற் போலவே இங்கு முருகப்பெருமான் எழுந்தருளிச் சிவபெருமானை வழிபட்டமையின் சிவத்தலமாகியது என்பர். - (11) புத்தூர் - திருப்புத்தூர். பாண்டிநாட்டுத் தலம். குறிப்பு :- இப்பதிகத்துள் வைப்புத்தலங்கள் பலவும் வருதல் காண்க. VII திருச்சிற்றம்பலம் | திருத்தாண்டகம் |
| கண்ணவன்காண் கண்ணொளிசேர் காட்சி யான்காண் கந்திருவரும் பாட்டிசையிற் காட்டு கின்ற பண்ணவன்காண் பண்ணவற்றின் றிறலா னான்காண் பழமாகிச் சுவையாகிப் பயக்கின் றான்காண் மண்ணவன்காண் டீயவன்கா ணீரா னான்காண் வந்தலைக்கு மாருதன்காண் மழைமே கஞ்சேர் விண்ணவன்காண் விண்ணவர்க்கு மேலா னான்காண் விண்ணிழி தண்வீழி மிழலை யானே. |
1 மெய்த்தவன்காண் மெய்த்தவத்தி னிற்பார்க் கெல்லாம் விருப்பிலா விருப்புமான வினையர்க் கென்றும் பொய்த்தவன்காண் புத்தன் மறவா தோடி யெறிசல்லி புதுமலர்க ளாக்கி னான்காண் உய்த்தவன்கா ணுயர்கதிக்கே யுள்கி னாரை யுலகனைத்து மொளித்ததளித்திட் டுய்யச் செய்யும் வித்தகன்காண் வித்தகர்தாம் விரும்பி யேத்தும் விண்ணிழி தண்வீழி மிழலை யானே. 8 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- விண்ணிழி தண் வீழிமிழலை யானே, கண்ணும் கண்ணொளியும் காட்சியு மானான்; பண்ணும் பண்ணின் றிறலு மானான்; பழமும் சுவையுமாகிப் பயக்கின்றான்; கரும்புச் சாறுபோல இனிக்கும் ஐந்தெழுத்தாகிய திருநாமத்தையுடையவன்; அடியார் சிந்தையான்; மெய்த்தவர்க்கு மெய்த்தவன்; விருப்பில்லார்க்குப் பொய்த்தவன் சமணிற்றீர்த்து என்னை ஆட்கொண்டான்; சாக்கிய நாயனார் மறவரது எறிந்த கல்லையும் மலராகக் கொண்டவன்; மாலுக்கு ஆழியீந்தவன் - என்றித்திறங்களா லறியப்படுவன். |