பக்கம் எண் :


444திருத்தொண்டர் புராணம்

 

பதிகக் குறிப்பு :- அடியேனை ஆளுடைய அடிகள் தாமே வீழிமிழலையமர் செல்வர்; அவர், மானேறுகரமுடைய வரதர்; குமரனையும் மகனாகவுடையவர்; கைவேழமுகத்தவனைப் படைத்தார்; வேலார்கை வீரியை முன் படைத்தார்; அஞ்சடக்கு மடியவர்கட்கணியார்; குண்டரொடு பிரித்தெனையாட் கொண்டார்; இருநான்கு மூர்த்திகளுமானார்; மித்திரவச்சிணவற்கு விருப்பர்; அத்தனொடு மம்மை யெனக்கானார்; என்றித் தன்மைகளாற் போற்றப்படுபவர்.

பதிகப்பாட்டுக் குறிப்பு :- (1) போலும் - காண் - கண்டாய் முதலியன போலத் தோற்றப்பொருள் தந்து நிற்கும் ஓர் இடைச்சொல். ஆளுடைய - ஆளாகவுடைய.- (2) ஒருகால் - ஒருகாலால், ஒருகாலத்து, என்றிருவகையு முரைக்க நின்றது. குமரன் - முருகப்பெருமான். பின் அமுதுணை - பின்னால் அமுதுண்ணும் பொருட்டு.- (3) நேமி அருளிச்செய்தார் - தலசரிதம்.- (4) கைவேழ முகத்தவன் - விநாயகப் பெருமான். தேவாரங்களுள் விநாயகர் வரலாறு கூறும் சிலவிடங்களுள் இஃதொன்று. விநாயக வணக்கம் பழமையானது. வேள்வி மூர்த்தி - எச்சன்.- (5) சுடர் மூன்று - தீயும் ஞாயிறும் திங்களும். சோதி - அவற்றுள்நின்று ஒளியாய் விளக்குபவன்.- (6) வேலார் கை வீரி - வீரபத்திரை. காளி, முன் - தக்கயாக வரலாறு.- (8) குண்டரொடு பிரித்து எனை ஆட்கொண்டார் - நாயனாரது சரித அகச்சான்று. ஓடு - நீக்கப்பொருள்பட ஐந்தனுருபாய் வந்த உருபுமயக்கம். புண்டரிகப் புதுமலர் ஆதனம் - அடியவர்களது இதயவெண்டாமரை. எப்போதும் வாடாதிருத்தலின் புதுமலர் என்றார். புள் அரசு - கருடன். கருடனுக்கு வரந்தந்தமை புராணங்களுட் காண்க.- (9) எத்தனையும் - எந்தச்சிறு அளவிலேனும். எத்தனையும் இனியர் என்று கூட்டி மிகப்பெரிதாய் என்றலுமாம். இருநான்கு மூர்த்தி - அட்டமூர்த்தம். பஞ்சபூதங்களும் ஞாயிறும் திங்களும் ஆன்மாவும் என்றிவற்றைத் தன் திருமேனியாகக் கொண்டவன். மூர்த்தி - திருமேனி (சிவபூசை விதி). மித்திரவச்சிரவணன் - குபேரன். குபேரன் சிவபெருமானது தோழன் என்ப. "நிதிபதி செய்த நிறைதவ நோக்கி, யதுபதி யாக அமர்ந்திருந் தானே" (திருமந்).- (10) ஒருகை எரியது தரித்த என்க. ஒருகையில் தீயை ஏந்திய. வீரி கதிரோர் இருவரை முன் வெகுண்டமை - தக்கயாகத்தில் சூரிய சந்திரர்களைத் தண்டித்த வரலாறு.

1528.

வாய்ந்த மிழலை மாமணியை வணங்கிப் பிரியா விடைகொண்டு
பூந்தண் புனல்சூழ் லாஞ்சியத்தைப் போற்றிப் புனிதற்வாழ்பதிகள்
ஏய்ந்த வன்பி னாலிறைஞ்சி யிசைவண் டமிழ்கள் புனைந்துபோய்ச்
சேர்ந்தார்செல்வத்திருமறைக்காடெல்லையில்லாச்சீர்த்தியினார்.

263

(இ-ள்.) வாய்த்த......விடை கொண்டு - அரிதிற் கிடைக்கப்பெற்ற திருவீழிமிழலையின் பெருமணிபோன்ற இறைவரை வணங்கிப் பிரிய முடியாதபடி விடைபெற்றுக்கொண்டு; பூந்தண்.........போற்றி - அழகிய குளிர்ந்த நீராற் சூழப்பட்ட திருவாஞ்சியத்தைச் சென்று துதித்து; புனிதர்.......போய் - துயராகிய சிவபெருமான் வெளிப்பட நிலைத்து எழுந்தருளிய பிறபதிகளையும் பொருந்திய அன்பினால் சென்று வணங்கி இசையும் வண்மையுமுடைய தமிழ் மாலைகளை சாத்தி மேற்சென்று; எல்லையில்லாச் சீர்த்தியினால் - அளவுற்றச் சிறப்புடைய அவ்விரு பெருமக்களும்; செல்வத் திருமறைக்காடு சேர்ந்தார் - செல்வமுடைய திருமறைக்காட்டினைச் சேர்ந்தனர்;

(வி-ரை.) வாய்ந்த - உலகுக்கு அருள்வாய்ந்த. பிரியாவிடை - பிரியமாட்டா நிலைமையில் பெறும்விடை.