பக்கம் எண் :


452திருத்தொண்டர் புராணம்

 

1532. (வி-ரை.) பரிசு - தன்மை; முன்பாட்டிற் கூறியபடி கேட்டறிந்த அத்தன்மை.

தோணிபுரத்தரசர் - எனத் - திருநாவுக்கரசர் (1532) - பாட, - தாழ்க்கப் - பாடி - இறைஞ்சுதலும் (1533), அருளால் - மணிக்கதவம் - காப்பு நீங்க, நாதர் - உடன்தொழுது விழுந்தார்; ஆர்ப்பும் - ஒலியும் - மிக்கெழுந்தது (1534) என்று இந்த மூன்று பாட்டுக்களையும் கூட்டி முடிக்க.

ஒங்கு வேதம் - இறைவன் திருவாக்கு என்ற பெருமையால் ஒங்கும் வேதம். உரத்த ஒலியில் சத்திக்கும் வேதம் - முதனூலாக மேம்பட்ட வேதம் என்றலுமாம்.

தேங்குதல் - தடைபட்டு நிற்றல். நேர் - நேர்வாயிலின் வழி.

அப்பர் - அப்பரே! பெயரியல்பில் வந்த அண்மை விளி. பிள்ளையார் சீகாழியில் தாம் இட்டு அழைத்த அந்தப் பெயரையே கொண்டு (1447) இங்கும் விளிக்கின்றார். அப்பராதலின் நீர்தாம் முன்னர் கதவு திறக்கப் பாடவேண்டும் என்பது குறிப்பு. ஞானமுண்ட பிள்ளையார் அங்கு உடன் எழுந்தருளி யிருந்தாராதலின் நாயனார் தாமே அதனை முற்படத் துணிந்தாரலர்; அதனை அறிந்தே பிள்ளையாரும் இவ்வாறு நாயனாரை நோக்கி யருளினார் என்பது மேல்வரும் பாட்டில் "பிள்ளையார் உரை செய்தருள அதனாலே" என்று ஆசிரியர் எடுத்துக்காட்டுவதனாலும் துணியப்படும். பிள்ளையார் இவ்வாறு அருளிச்செய் திராவிடில் நாயனார் அவரையே இது செய்தருளும்படி வேண்டி விடுத்திருப்பர் என்பதும் கருத்து.

நீடும் - புகழினாலும் அடிமைத்திறமுடைய அன்பினாலும் நீடும்.

தோணிபுரத்தரசர் - திருநாவுக்கரசர் என இருவரையும் அரசர்கள் என்று ஒப்பக் குறிப்பிட்ட குறிப்புபற்றி முன் (1529) உரைக்கப்பட்டது.

1533. (வி-ரை.) உள் நீர்மை - நாயனர்பால் உள்ளத்திற்கொண்ட தந்தையாக் கண்ட அன்பின் திறம். இது ஆளுடையபிள்ளையார் புராணம் - 271, 493 காட்டுக்களாலும் பிறவற்றாலும் அறியப்படும்.

அதனாலே - பிள்ளையார் தம்பாற்கொண்ட அன்பின் திறத்தால் உரைசெய் தருளியதனை மறுக்கமாடடாமையினாலே.

"பண்ணின் நேரும் மொழியாள்" என்று - இது பதிகத் தொடக்கம். பண் தமிழுக்குச் சிறப்பாயுரியதோர் இசையமைதி. பெண்களின் மிடற்றொலியின் இயல்பா யவைதென்ப. பண் அமைதிகளையும் இலக்கணங்களையும்பற்றி 221-ன் கீழ் உரைத்தவை பார்க்க. பண்ணின்நேர் மொழியாள் - என்றது அத்தல அம்மை பெயருக்கு நாயனார் விரித்த பொருள். அம்மை பெயர் யாழைப்பழித்த மொழியம்மை என்பதனை இக்கருத்தே பற்றி ஆளுடைய நம்பிகள் "யாழைப்பழித் தன்னமொழி மங்கையொரு பங்கன்" என்று தமது தேவாரத்தின் எடுத்த திருப்பாட்டின் வைத்து பாராட்டியிருத்தலும் காண்க.

எடுத்துப்பாட - எடுத்து - தொடங்கி; அம்மையாரின் மொழிநீர்மையைத் தேற்றமாக எடுத்து என்றதும் குறிப்பு.

பயன் துய்ப்பான் - பாட்டினால் நினைவூட்டிக் குறிக்கப்பட்ட பயனாகிய அம்மையாரின் மொழியனது பண்ணின்பத்தை அனுபவிக்க. பயன் துய்ப்பான் - தாழ்க்க, என்று கூட்டுக. யாழைப்பழித்த மொழியாள் என்ற எதிர்மறைப்பொருள் குறித்த பெயரை, யாழைப் பழித்த தாயின், எதனை நேர்வது? எதனைக்கொண்ட - தென்னின், பண்ணின் நேர்வது என்று பண்ணின் நேர் - மொழியாள் என உடன் பாட்டு முகத்தால் விளக்கியது நாயனாரது திருப்பாட்டு அதன்பயன் - அக்குறித்த