பக்கம் எண் :


454திருத்தொண்டர் புராணம்

 

நாதர் அருளால் கதவம் திறப்பதும், தனித்தனியாகப், பிள்ளையார் - அப்பர் - இறைவர் என்ற மூவர் செயல்களாயினும், தொடர்ந்து நிகழ்ந்தமையால் இந்த மூன்று பாட்டுக்களும் அவ்வச் செயல்களைத் தனித்தனி கூறினும் தொடர்ந்து முடிக்க வைத்த தெய்வக் கவிநலம் கண்டு களிக்க. இத்தொடர்ச்சியின் வினைமுடிபின் நீட்டிப்புப் பதிகம் பாடி முடியும் வரை கதவம் நீங்கத்தாழ்த்த கால நீட்டிப்புக் கியைய நிற்பதாகிய சொல்லும் பொருளும் ஒத்தியையும் அமைதியும் கண்டுகொள்க.

269

திருமறைக்காடு

I திருச்சிற்றம்பலம்

திருக்குறுந்தொகை

பண்ணி னேர்மொழி யாளுமை பங்கரோ,
மண்ணி னார்வலஞ் செய்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்,
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.

1

வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தரோ, அந்த மில்லி யணிமறைக் காடரோ,
வெந்தை நீயடி யார்வந் திறைஞ்சிட, விந்த மாக்கத வம்பிணி நீக்குமே.

7

அரக்க னைவிர லாலடர்த் திட்டநீ, ரிரக்க மொன்றி ரெம்பெரு மானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ, சரக்க விக்கத வந்திறப் பிம்மினே.

11

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- பண்ணினேர்மொழியாள் பங்கரே! கண்ணினால் உம்மை நாங்கள் நேரே வந்து காணவும், அடியார் வந்து இறைஞ்சவும் இந்த கதவின் பெரும் பிணிப்பை நீக்கித் திறப்பித் தருள்செய்மின்!

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பண்ணின் நேர் மொழியாள் உமை - இதன்பயன் துய்த்ததனால் இறைவர் கதவந் திறத்தலைத் தாழ்த்தனர் என்று ஆசிரியர் அறிவிக்கின்றனர். பங்கரோ! - ஒகாரம் விளிவேற்றுமை உருபு. இப்பதிக முழுதும் இவ்வாறே காண்க. கண்ணாற் கண்டு விளிக்க இயலாதவண்ணம் கதவம் காப்பிடப்பட்டிருந்தமையின் சேய்மை விளியாக ஒகாரத்தால் விளித்தார். ஏகாரம் அண்மை விளியுருபாய் வருவது பொதுவிதி. கண்ணினால் - அகக்கண்ணினாற் கண்டுகொண்டிருப்பினும் புறக்கண்ணினாலும், நோக்கிக் காண (6) என்பது மிது. காண - நேர்வாயிலிற் காண. திண்ணமாக - வலிமை - பொருந்த; திறம்பட. திறமும் வலிமையுமாவது மறைகளின் மறைகளின் மந்திரக் காப்பினைத் திறத்தல்; மேல் திறமும் வலிமையுமாவது மறைகளின் மந்திரக் காப்பினைத் திறத்தல். மேல் வரும் திருப்பாட்டுக்களில் நீண்ட மாக்கதவின் வலி (2); பெரிய வான் கதவம் (4); தொலைவிலாக் கதவம் (5); மாக்கதவம் (7) மாறிலாக் கதவம் வலி (8) என்பனவும் இக்கருத்து. - (2) முகிலின் முறிக்கண்டர் - முகிலின் கொழுந்துபோலும் அழகிய கண்டத்தை உடையவர். முறி - தளிர் - கொழுந்து. "முறிமேனி" (குறள்). "இலையே முறியே - தளிரே தோடே" (தொல் - பொ - மரபி - 37); ஆண்டுகொண்ட நீரே - எங்களை ஆளாகக்கொண்டமையால் நிர்தாமே. ஏகாரம் - தேற்றம். பிரிநிலையுமாம். அருள் செய்து - இடும் - அதன் வலி நீக்கும் எனப் பிரித்து முடிக்க. அருள்செய்து - இரங்கி. - (3) சுவண்டர் - சிறப்பு இடையாளமாக உடையவர். சுவண்டு - அடையாளம். சுவடு என்பது சுவண்டு என வந்தது போலும்? "சுடலைவெண் பொடியணி சுவண்டர்" (பிள்ளையார் தேவா - தெங்கூர் - 6); "சுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே" (நம்பிகள் தேவா). 4-வது 9-வது திருப்பாட்டுக்களிலும் இவ்வாறே கொள்க. சட்ட - "செப்பமுணர்த்தி நிற்பதோர் அகரவீற் றிடைச்சொல்; அது சட்டமென இழிவழக்கின் மகரவீறாய் மரீயிற்று" (சிவஞானபோதச் சிற்றுரை - 9 - 2). பட்டம் - தாமே தலைவர் என்ற அடையாளம், இறைவரது சென்னியில் வைத்திருக்கும்.