பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்455

 

பிறை - கங்கை - நகுசிரம் முதலாயின ஒவ்வொன்றும் அவரது முழுமுதற்றன்மையை விளக்குவன. பட்டம் - பட்டம்போன்ற பொருள்கள். உருவகம். பட்டம்போன்ற திரிபுண்டரமாகிய திருநீறு என்றலுமாம். "பட்டநெற்றியர்" (பிள் - தே). - (4) விரிகொள் கோவண ஆடை - இறைவரது கோவணம் மறைகள்; அவை அனந்தமாகப் பரந்துள்ளன வாதலின் விரிகொள் என்றார். "தவநிறைந்தநான் மறைப்பொரு ணூள்களாற் சமைந்த, சிவன்விரும்பிய கோவணம்" (540). பெரிய - வேதங்கள் பூசித்துக் காப்பிட்ட பெருமையுடைய. - (5) தொலைவிலா - வேறெப்பரிசினாலும் காப்பு நீக்கமுடியாத. துணை - பிணிப்பு. பிணி நீக்குமே (7) என்பது காண்க. - (6) தாழை - நெய்தற் கருப்பொருள். புறணி - நெய்தற் புறவு சுற்றிடம். ஆர்க்கும் காண்பரியீர் - உமது தேவங்களாற் காட்டும் படிக்கன்றி என்க. நோக்கி - நேர் நோக்கி. - (7) அடியார் வந்திறைஞ்சிட மருங்கு வேறு ஒரு வாயில்வழியா னன்றி நேர்வாயிலாகிய இதன் வழியே வந்து வணங்க (1531). நாயனார் செய்த இவ்விண்ணப்பம் தம்பொருட்டேயன்றி அடியார்களின் பொருட்டா மென்பது. இனி எக்காலத்தும் வந்து வணங்க என்க. 1538. பார்க்க. இந்த - கதவின் முன்பு நின்று பாடியதால் அணிமைச் சுட்டாற் கூறினார். பிணி - பிணிப்பு - காப்பு. நேர்வழி திருக்காப்பிட்டிருப்பதனால் அடியார் உள்ளத்தில் இக்கதவின்பொருட்டு உளதாகும் பிணிபோன்ற வருத்தம் என்பது குறிப்பு. - (8) மாறுஇலா - ஒப்பற்ற. பெரிய வான் கதவம் என்ற கருத்தது. - (10) இப்பாட்டு முன் பதிப்புக்களிளெல்லாம் "ஒதமால் கடலில்" என்று தொடங்கும் இத்தலத்துத் திருக்குறுந்தொகை மற்றொரு பதிகத்தில் 7-வது திருப்பாட்டாகப் பதிக்கப்பட்டுள்ளது. அடிக் குறிப்புப் பார்க்க. - (11) இரக்கமொன்றிலர் - அரக்கனை விரலாலடர்த்தமைக்கும், பதிகம் பாடிப் பத்துப்பாட்டிலும் கதவம் திறக்கும்படி விண்ணப்பம் செய்தும் அருள் செய்யாமைக்கும் பொருந்திய உட்குறிப்புடன் அருளியது. இவ்வுள்ளக் கருத்தினை ஆசிரியர் "எண்ணீர் இரக்கமொன்றில்லீர் என்றுபாடி" (1533) என்றருளினர். சுரக்கும் புன்னைகள் - வழிபோவார்க்கு நிழலும் மணமும் தருவன உமது பதியின் புன்னைகளும். ஆயின் நீர் இரங்காத தென்? என்ற குறிப்பு. சுரக்கும் - அருள் சுரக்கும். "கடலோதமுன் சூழ்ந்து கொண்டணிய, வழிக் கரைப்பொதிப் பொன்னவிழ்ப் பனமலர்ப் புன்னை" (1113) என்ற கருத்தும் காண்க. சரக்க - விரைவாக. திறப்பிம்மினே - முன்னர்த் திறந்தருள் செய்ம்மின் (1) வலி நீக்குமே (2) திறவுமே (6) என்று தன்வினைச் சொல்லாற் கூறினார். இங்கு இறுதியாகத் திறப்பிம்மின் என்ற பிறவினை முடிபாற் கூறுகின்றார். நீரே செய்தருளா விடினும் உமது எண்ணிறந்த கணங்களுள் ஒருவரால் இதனைச் செய்து வைப்பீர் என்ற கருத்து.

குறிப்பு :- இப்பதிகத்தில் முன்பதிப்புக்காரர்களெல்லாம் எடுகளிற்கண்டவாறு 10 பாட்டுக்களே பதித்தனர். "அரக்கனை விரலால்" என்றது அவற்றுள் பத்தாவதாகிய இறுதிப் பாட்டாகக்கொண்டனர். ஆனால், இது திருக்கடைக் காப்பு என்று ஆசிரியர் கூறியதனோடு, பதிகத்தின் பதினொன்றாவது பாட்டு என்றும் பின்னர்க் காட்டுவர். "பாடியவப் பதிகப்பாட்டான பத்தும் பாடனிரம் பியபின்னும் பைம்பொன் வாயிற், சேடுயர்பொற் கதவுதிருக் காப்பு நீங்காச் செய்கையினான் வாகீசர் சிந்தை நொந்து, நீடுதிருக் கடைக்காப்பி லரிதுவேண்டி நின்றெடுக்கத் திருக்கவு நீங்கிக் காட்ட" (திருஞான - புரா - 582) என்றதனால் இப்பதிகம் பதினொரு பாட்டுக்கொண்ட தென்பது துணிபு. "விண்ணுளார்" என்ற பாட்டு இப்பதிக கருத்தினையே கொண்டது. முன் பதிப்புக்களில் அதனை "ஒதமால் கடல்" (குறுந்தொகை) என்ற பதிகத்தில் 7-வது பாட்டாகக் கொண்டுவந்தனர், அதன் சொற் பொருள் இடம் முதலிய அமைதிகளாலும், ஆசிரியது குறிப்பாலும் இபபதிகத்துச் சேர்ந்ததென்று துணிந்து சைவ சித்தாந்த