இறைஞ்சி - வழிபாடு முடிந்து புறம்போது பணிதல் குறித்தது. அரிதில் புறத்து அணைந்தார் - திருமுன்பி னின்றும் நீங்கலரிய நிலைமையால் நீங்கிக் கோயிற் புறத்து எழுந்தருளினர். 270 II திருச்சிற்றம்பலம் | திருக்குறுந்தொகை |
| ஒத மால்கடல் பாவி யுலகெலா, மாத ரார்வலஞ் செய்மறைக் காடரோ, காதல் செய்து கருதப் படுமவர், பாத மேத்தப் பறையும் பாவமே. 1 பூக்குந் தாழை புறணி யருகெலாம்; ஆக்கந் தானுடை மாமறைக் காடரோ, ஆர்க்குங் காண்பரி யீரடி யார்தம்மை, நோக்கிக் காண்பது நும்பணி செய்யிலே. அட்ட மாமலர் சூடி யடம்பொடு, வட்டப் புன்சடை மாமறைக் காடரோ நட்ட மாடியு நான்மறை பாடியும், இட்ட மாக விருக்கு மிடமிதே. |
3 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- மறைக்காடரோ! உம்மை அடியார் நோக்கிக் காண்பது நும்பணி செய்யிலே; பிறர் ஆர்க்கும் காண்பரியீர்; நீர் இட்டமாக இருக்கும் இடம் இது; கங்கையைச் சென்னியில் வைத்து அங்கையில் அனலேந்துதல் உமக்கு அழகிதே. பதிகப் பாட்டக் குறிப்பு :- (1) ஒதமால் கடல் பரவி - கடற் கரையினாற் பரந்து சூழப்பட்டு. காதல் செய்து கருதப்படுமவர் - விருப்ப மிக்க அடியார். - (2) தம்மை - உம்மையுடனாந்தம்மை அடியார் காண்பது என்க. - (3) சின்னவேடம். - கூறிட்ட வேடம் (4) அடம்பு - மலர். கொடி வகையுள் ஒன்று. (5) பைதல் - இளையது. கவர்புன்சடை - நுனியளந்த சிறுசடை. பிறைபாம்புடன் வைப்பதே - பகைமையுடைய பொருள்களை உடன் வைத்தல் அழகிதா? தக்காத?. வினா அன்று என மறுதலை குறித்தது. - (6) துஞ்சும் போதும் - உறங்கும் போதினும். உம்மை சிறப்பு. வஞ்சு - வஞ்சம். ரூடலை. -(7) (சைவ சித்தாந்தப் பதிப்பு). ஏனைப் பதிப்புக்களில் இஃது 8-வது பாட்டாக உள்ளது. திருவினார் செல்வம் - திரு - முத்தித் திரு; ஆர் - பொருந்திய; திருவின் ஆர் - பிறிதினியைபு நீக்கிய விசேடணம். மங்கை ஒர் பாகமாய் - மங்கை ஒரு பாகமாகியும். உம்மை தொக்கது. ஒரு பாகத்துத் தேவி யிருப்பவும் கங்கையைச் சென்னி வைத்தல் தக்கதோ என்பது குறிப்பு. - (8) கங்கை செஞ்சடை வைப்பதும் - அங்கையில் அனல் ஏந்தலும் அழகிதே - ஒன்றற்கொன்று பகையாகிய நீரினையும் தீயினையும் ஒப்பத் தாங்குதல் தக்கதா? ஏகாரம் வினா. எதிர்மறைக் குறிப்பு. மங்கைக்கு மறைவாகச் சடையுள் கங்கையை வைத்தும் அவ்வொழுக்க மில்லார்போலக் கையில் தீ ஏந்துதல் என்ற குறிப்புப்பட நின்றது. 5, 6, 7, 8 திருப்பாட்டுக்கள் அகப்பொருட் சுவைபட அமைந்தன. "இரங்கல் நறு நய்தல்" என்றபடி தனித்திருந்த தலைவி பிரிவு ஆற்றாமையின் இரங்கிக் கூறியது போலக் கூறியன. நெய்தற்குரிய உரிப்பொருள்பட நின்றன. குறிப்பு :- மறைக்காடரோ! - நும் - இடம் இதே - முதலிய குறிப்புக்களால் இப்பதிகம் கதவம் திறப்பின் திருமுன்பு பாடப்பட்ட தென்று கருதப்படும். 1536. | புறம்பு நின்று வாகீசர், புனித ரருளா லிக்கதவந் திறந்து மடைத்துஞ் செல்லுநெறி திருந்த மலையா டிருமுலையிற் |
|