பக்கம் எண் :


458திருத்தொண்டர் புராணம்

 

 கறந்த ஞானங் குழைத்தமுது செய்த புகலிக கவுணியரை,
"நிறைந்த கதவ மடைக்கும்வகை நீரும் பாடி யரூளு"மென,

271

1537.

சண்பை யாளுந் தமிழ்விரகர் தாமுந், திருநா வுக்கரசர்
பண்பின் மொழிந்த வுரைகொண்டு, பதிகம் பாடு மவ்வளவிற்,
கண்பொற் பமைந்த நுதற்காள கண்ட ரருளாற் கடிதுடனே
திண்பொற் கதவந் திருக்காப்புச் செய்த தெடுத்த திருப்பாட்டில்.

272

1536. (இ-ள்.) புறம்பு நின்று - முன்பாட்டிற் கூறியபடி திருவாயிற்புறத்து அணைந்து நின்று; வாகீசர் - திருநாவுக்கரசர்; புனிதர் அருளால் இக்கதவம் திறந்தும் அடைத்தும் செல்லும் நெறி திருந்த - இறைவரது திருவருளினாலே இந்தக் கதவம் திறந்தும் அடைந்தும் வழங்கும் நெறியில் திருந்துக! என்று திருவுள்ளங் கொண்டு; மலையாள் திருமுலையில் கறந்த ஞானம் குழைத்து அமுது செய்த புகலிக் கவுணியரை - பார்வதியம்யைாரது திருமுலையிற் கறந்தருளிய பாலிற் சிவஞானங் குழைத்து அமுதுண்ட சீகாழியில் அவதரித்த கவுணியராகிய பிள்ளையாரை நோக்கி; "நிறைந்த கதவம் அடைக்கும் வகை நீரும் பாடி அருளும்" என - "அருளால் நிறைந்த இக்கதவம் அடைக்கும் வகையினை நீரும் பாடியருளுக" என்று சொல்ல,

281

1537. (இ-ள்.) சண்பை...பாடுமவ்வளவில் - சீகாழித் தலைவராகிய தமிழ் விரகராகிய ஆளுடைய பிள்ளையாரும், திருநாவுக்கரசர் அப்பண்பினால் மொழிந்தருளிய உரையினால், அவ்வாறே பதிகம் பாடும் அந்த அளவில்; கண் பொற்பு...அருளால் - கண்ணினது அழகு அமைந்த நுதலினையுடைய திருநீலகண்டருடைய திருவருளினால்; கடிது - உடனே மிக்க விரைவாக; எடுத்த திருப்பாட்டில் - பதிகம் தொடங்கிய முதற் றிருப்பாட்டிலே; திண்பொற் கதவம் திருக்காப்புச் செய்தது - திண்ணிய அழகிய கதவம் திருக்காப்பிட்டது.

272

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1536. (வி-ரை.) புனிதர் அருளால் இக்கதவம் திறத்தும் அடைந்தும் செல்லும் நெறி திருந்த - இது நாயனார் திருவுள்ளத்திற் கருதியது. திருந்த - திருந்துக என்று எண்ணி. என்று எண்ணி என்பது இசை எச்சம்.

திறந்தும் அடைத்தும் செல்லும் நெறி - முன்பு அடைத்தது அடைத்தபடியே இருந்ததுபோல, இப்போது திறந்தது திறந்தபடியே இருந்துவிடாமல் வழங்கும் வழக்கம். செல்லும் - வழங்கும்.

நெறி - நெறி கருதற்பொருட்டு என்று உரைத்துக்கொண்டு, திருந்த என்பதனை அமுதுசெய்த என்பதனுடன் கூட்டி உலகு திருந்த அமுதுண்ட என்று கூட்டி உரைத்தலுமாம்.

மலையாள் - இமயமலையரசனுக்கு மகளானவர். பார்வதி

கறந்த ஞானங் குழைத்து - பால் என்றது தொக்கிநின்றது. கறந்த - கறந்த பாலில் என்க. ஞானம் - சிவஞானம்.

ஞானம் குழைத்தமுது செய்த - சிவஞானமுண்டருளிய திறத்தால் அந்த ஞானத் திருவாக்கு இறைவரது வாக்காகிய மறைகள் திருக்காப்பிட்டமை போலச் செயல்புரிய வல்லதாம் என்ற உட்குறிப்புப்பெற இத்தன்மையாற் கூறினார்.

கவுணியர் - கவுணியர் குலத்து உதித்தவர்.

அடைக்கும்வகை நீரும் பாடி அருளும் - நீரும் - நீர் பணிக்க அடியேன் திறக்கப் வாடியதுபோல நீரும் என உம்மை இறந்தது தழுவியது. பாடி அருளும் - வாகீசர்