யுறங்குகின் றேனுக்கு" (குறுந்தொகை - வாய்மூர்) என்பது நாயனார் திருவாக்கிற் காணும் அகச்சான்று. துன்னி - இங்குத் துன்னி என்றது அறிதுயிலில் அகக்காட்சிக்குப் புலனாயினமை குறித்தது. துன்னுதல் - பொருந்துதல். சொற்பனத்தில் வந்து என்றுரைப்பாருமுண்டு. நாயனார் சாக்கிரத்தினின்றும் நீங்காமையால் அவ்வுரை பொருந்தாமையறிக. அவர்க்கு - காட்சி கொடுத்தது என்பது சொல்லெச்சம். தொடரவா - நாம் முன்செல்ல நீ எம்மைத் தொடர்ந்து வருவாயாக, தொடர - நீ எம்மைத் தொடரவும், அது கேட்டுப் பிள்ளையார் தொடர, அவர்க்கு நாம் நேரே காட்சி கொடுக்க அவர் கண்டு காட்ட நீயும்காண இவ்வாறு அருளிப்பாடுகள் தொடர, அதனால் கண்டு காட்ட நீயும்காண இவ்வாறு அருளிப்பாடுகள் தொடர, அதனால் நீ பிழையென்று கவன்ற செய்தி பிழையன்றாம்படி கண்டு தொடர என்று இவ்வாறு வரும் பின்னிகழ்ச்சிக் குறிப்புக்கள் எல்லாம் பெறவைத்தமை காண்க. பிள்ளையார் இறைவரது காட்சி முன்னர்க் கண்டு அரசும் காணக்காட்டிய (1546) அதனால் அரசுகள் தாம் கருதியபடி திறப்பித்தமை பிழையன்றாம்படி கண்டது யாங்ஙனமெனின்? இறைவர் இக்காட்சியை முன்னர்ப் பிள்ளையாருக்குக் காட்டத் தாம் கண்டனர்; அவ்வாறே இறைவர் தமது செவ்வியை முன்னர்ப் பிள்ளையாருக்கு அறிவிக்க, அவர் அறிந்து கதவந் திறக்கப் பாடுக என்று தமக்கு அருளத், தாம் அதன்படிப் பாடினர்; ஆதலின் தாம் பாடியதும் செவ்வியறிந்ததேயாம் என்பது. வாய்மூரில் இருப்போம் - இருப்போம் - இருப்போமாகிய எம்மை என்று வினைப் பெயராகவும், நாம் இங்கு நின்றும் உன் முன்னே சென்று வாய்மூரில் இனி இருக்கச் செல்வேம் என்று எதிர்கால வினைமுற்றாகவும் உரைக்க நின்றது. "தன்னை வாய்மூர்த் தலைவனா மாசொல்லி, யென்ன வாவென்று போனார்" என்ற தேவார அகச்சான்று காண்க. 276 1542. | போத நிகழ"வா வென்று போனா ரதென்கொ" லெனப்பாடி "யிதெம் பெருமா னருளாகி லியானும் போவே" னென்றெழுந்து வேத வனத்தைப் புறப்பாட்டு விரைந்து போக, வவர்முன்னே, யாதி மூர்த்தி முன்காட்டு மவ்வே டத்தா லெழுந்தருள, |
277 1543. | சீரார் பதியி னின்றெழுந்து செல்லுந் திருநா வுக்கரசர், ஆரா லன்பி லாரமுத முண்ண வெய்தா வாறேபோல் நீரார் சடையா ரெழுந்தருள நெடிது பின்பு செல்லுமவர் பேரா ளரைமுன்றொடர்ந்தணையப்பெறுவாரெய்தப்பெற்றிலரால்; |
278 1544. | அன்ன வண்ண மெழுந்தருளி யணித்தே காட்சி கொடுப்பார்போற் பொன்னின்கோயி லொன்றெதிரே காட்டி யதனுட் புக்கருளத் துன்னுந் தொண்ட ரம்மருங்கு விரைந்து தொடரப், போந்தபடி மன்னும் புகலி வள்ளலார் தாமுங் கேட்டு வந்தணைந்தார், |
279 1545. | "அழைத்துக் கொடுபோந் தணியார்போற் காட்டி மறைந்தா"ரென வயர்ந்து "பிழைத்துச் செவ்வி யறியாதே திறப்பித் தேனுக் கேயல்லால் உழைத்தா மொளித்தாற் கதவந்தொண்டுறைக்கப்பாடியடைப்பித்த தழைத்த மொழியா ருப்பாலார்; தாமிங்கெப்பான் மறைவ?" தென, |
|