பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்465

 

1546.

 மாட நீடு திருப்புகலி மன்ன ரவர்க்கு மாலயனும்
 நேடி யின்னங் காணதார் நேரே காட்சி கொடுத்தருள,
 ஆடல் கண்டு பணிந்தேத்தி, யரசுங் காணக் காட்டுதலும்,
"பாட வடியா" ரென்றெடுத்துப் பரமர் தம்மைப் பாடியானர்;

281

1547.

பாடுந் தமிழ்மா லைகள்கொண்டு பரமர் தாமு மெழுந்தருள,
நீடுந் திருவாய் மூரடைந்து நிலவுங் கோயில் வலஞ்செய்து,
சூடும் பிறையார் பெருந்தொண்டர் தொழுது போற்றித்துதிசெய்து
நாடுங் காதல் வளர்ந்தோங்க நயந்தந் நகரி லுடனுரைந்தார்.

282

1542. (இ-ள்.) போதம் நிகழ - அறிதுயில் நிலையினின்றும் சாக்கிரத்தை அடைய; "வா என்று போனார் அது என்கொல்" எனப்பாடி - "என்னை அங்கேவா என்று போனார்; அது என் கொலோ?" என்ற கருத்துடைய திருக்குறுந் தொகைப் பதிகம் பாடி; "ஈது....போவேன்" என்று எழுந்து - "இதுவே எமது பெருமானுடைய அருளிப்பா டாகுமாயின் அந்தக் கட்டளையின்படியேயானும் போவேன்" என்று துணிந்து எழுந்து; வேத வனத்தை....போக - திருமறைக் காட்டினின்றும் புறப்பட்டு அகல விரைவாக (நாயனார்) போக; ஆதிமூர்த்தி...அவ்வேடத்தால் - ஆதி முதல்வராகிய இறைவர் தாம் முன்பு காட்டிய அந்த வேடத்துடனே; அவர் முன்னே - நாயனார் முன்பு; எழுந்தருள - எழுந்தருளிப்போக,

277

1543. (இ-ள்.) சீரார்...திருநாவுக்கரசர் - சிறப்புடைய அந்தத் திருப்பதியினின்றும் எழுந்து புறப்பட்டுச் செல்லும் திருநாவுக்கரசர்; ஆரா அன்பின்....போல் - அடங்காத அன்பினால் நிறைந்த அமுதம் கையிற் கிடைக்கப்பெற்றும் வாயின்கண் உண்ணக் கிடைக்காத வாறுபோல; நீரார் சடையார் எழுந்தருள - கங்கை பொருந்திய சடையினையுடைய பெருமான் முன்னே எழுந்தருள; நெடிது பின்பு செல்லும் அவர் - நெடுந்தூரம் பின்னே தொடர்ந்து செல்கின்றவர்; பேராளரை...அணையப் பெறுவார் - பெருமையையுடைய அவரை முன்னே தொடர்ந்து விரைந்து அணைய முயல்வாராகவும்; எய்தப் பெற்றிலர் - கிடைக்கப் பெறவில்லை; (ஆல் - அசை).

278

1544. (இ-ள்.) அன்ன வண்ணம்....புக்கருள - (இறைவர்) அவ்வாறு எழுந்தருளிப் பக்கத்தில் காட்சி கொடுப்பார்போலப் பொன் மயமாகிய திருக்கோயில் ஒன்றை அவர் முன்பு தோற்றுவித்து அதனுள்ளே புகுந்தருள; துன்னும்.....தொடர - அணுகவரும் அத்திருத்தொண்டராகிய நாயனார் விரைவாக அவரைத் தொடர; போந்தபடி - இவ்வாறு நாயனார் போந்தபடியினை; மன்னும்...வந்து அணைந்தார் - நிலைபெற்ற சீகாழியின் வள்ளலாராகிய பிள்ளையாரும் கேட்டு அங்குவந்து அணைந்தனர்.

279

1545. (இ-ள்.) அழைத்துக்கொடு போந்து...அயர்ந்துஎன்னை - வாவென்று அழைத்துக்கொண்டு வந்து, அணிமையிற் கூட வருவார்போலக் காட்டி மறைந்தருளினார் என்று வருந்தி; செவ்வி அறியாதே பிழைத்தக் கதவம் திறப்பித்தேனுக்கே - தேவரீரது செவ்வியை அறியாமல் பிழைசெய்து வலிந்து கதவம் திறப்பித்த எனக்கு; உழை - பக்கத்திலிருந்து; தாம் ஒளித்தாலே அல்லால் - தேவரீர் ஒளித்தருளலாமே யன்றி; தொண்டு உறைக்கப் பாடி - திருத்தொண்டின் உறைப்பு விளங்கப் பாடி; (கதவம்) அடைப்பித்த தழைத்த மொழியார் உப்பாலார் - அந்தக் கதவத்தினை அடைப்பித்த தழைத்த தன்மையுடைய மொழியினையுடைய பிள்ளையார் உப்பாலின் உள்ளார்; தாம் இங்கு மறைவது எப்பால்? - தேவரீர் இனி மறைந்தருளுவது எவ்வாறு?; என - என்று பாட;

280