பக்கம் எண் :


466திருத்தொண்டர் புராணம்

 

1546. (இ-ள்.) மாட நீடு....கொடுத்தருள - மாடங்கள் நீடிய சீகாழியின் மன்னவராம் பிள்ளையாருக்குத் திருமாலும் பிரமதேவனும் தேடி இன்னமும் காணப்படாதாராகிய சிவபெருமான் வெளிப்பட்டு நேரே காட்சி கொடுத்தருள; ஆடல் கண்டு பணிந்து ஏத்தி - அத் திருக்கூத்தினைப் பிள்ளையார் கண்டு பணிந்து துதித்து; அரசும் காணக் காட்டுதலும் - திருநாவுக்கரசுகளும் காணும்படி காட்டியருளுதலும்; "பாட அடியார்"...பாடினார் - (நாயனார் கண்டு) "பாட அடியார்" என்று தொடங்கிப் பரமசிவனைப் பாடினாராக;

281

1547. (இ-ள்.) பாடும்....எழுந்தருள - அவ்வாறு அவர் பாடிய தமிழ்மாலைகளை ஏற்றுக்கொண்டருளிப் பரமசிவனும் மறைந்தருள; சூடும் பிறையார் பெருந்தொண்டர் - பிறையினைச் சூடும் சிவபெருமானது பெருந்தொண்டராகிய நாயனார்; நீடும் திருவாய்மூர் அடைந்து...வலஞ்செய்து - நீடுகின்ற திருவாய்மூரை அடைந்து நிலவும் திருக்கோயிலை வலஞ்செய்து; தொழுது போற்றித் துதிசெய்தும் - தொழுதும் போற்றியும் துதிசெய்தும்; நாடும் காதல்...உடனுரைந்தார் - நாடும் காதல் வளர்ந்து பெருக விரும்பி அத்திரு நகரில் உடனாக இருந்தருளினர்.

282

இந்த ஆறு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபாய் முடிக்க நின்றன.

1542. (வி-ரை.) போதம் நிகழ - அறிவு விளங்க. முன்னர் அறிதுயிலின் அமர்ந்திருந்தாராதலின் அதனை நீங்கிச் சாக்கிரத்தில் வந்து. முன் கண்டதும் கேட்டதும், கனவுமல்லாது நனவுமல்லாது நின்ற நிலை; இப்போது அது நீங்கிய முழு நனவு நிலை. இதற்கு இவ்வாறன்றி, நான் - போத - செல்லத் - தொடர்ந்து (வா என்று) என்றும், போத நிகழ வா என்று திருப்பதிகம் பாடி என்றும் உரைத்தனர் முன் உரையாசிரியர்கள்; அவை பொருந்தா. வா என்று போனார் என் கொல்? - பதிகக் கருத்தும், சரித அகச்சான்றுமாம். "அங்கே வாவென்று போரை தென்கொலே?" என்பது தேவாரம். எனப்பாடி - என்று பதிகத்தைத் தொடங்கிப் பாடி.

ஈது எம்....போவேன் என்று எழுந்து - இது முன் கண்டதையும் கேட்டதையும் அந்நனவு நிலையில்கொண்டு வைத்து உணர்ந்து நாயனார் துணிந்தது. ஈது அருளாகில் - தாம் முன் கண்டதையும் கேட்டதையும் இறைவனது அருளிப்பாடு என்று துணிந்தனர் என்பதாம்.

ஈது அருள் - ஆகில் - போவேன் - என்க. ஈது அருளிப்பாடே என்று உணர்கின்றேன்; ஆதலின் நானும் அவ்வாறே செல்வேன். ஆகில் - ஆதலின் என்னும் பொருள் தந்து நின்றது. யானும் - பெருமானது அருளுக்கு ஆளாகிய யானும் என உம்மை இறந்தது தழுவியது; பெருமான் என்ற கருத்துமிது.

வேத வனத்தைப் புறப்பட்டு - இரண்டனுருபு நீக்கப்பொருளில் வந்தது, உருபு மயக்கம்.

முன் காட்டும் அவ்வேடத்தால் எழுந்தருள - முன் காட்டும் - முன் அறிதுயிலில் காட்டியருளிய. அவ்வேடமாவது - "பொன்னின் மேனி வெண்ணீறு புனைந்த கோலப் பொலிவு" (1541) என்றபடி அடியார் வேடத்தால் எழுந்தருளிய திருக்கோலம்.

அவர் முன்னே - எழுந்தருள - என்று கூட்டுக. முன்னே செல்ல.

வேத வனத்தைப் புறகிட்டு - என்பதும் பாடம்.

277

1543. (வி-ரை.) நின்று எழுந்து - நின்று - ஐந்தனுருபு. எழுந்து - நீங்கி.

அமுதம் உண்ண எய்தா ஆறே போல் - கையில் கிட்டிய அமுதம் வாய்க்கு எட்டாத அதுவேபோல, "கைக்கெட்டியது வாய்க் கெட்டாது" என்பது பழ