பக்கம் எண் :


470திருத்தொண்டர் புராணம்

 

பாடிப் பெற்ற பரிசில் பழங்காசு,
வாட வாட்டந் தவிர்ப்பா ரவரைப்போல்
தேடிக் கொண்டு திருவாய்மூர்க் கேயெனா,
ஒடிப் போந்திங் கொளித்தவா றென்கொலோ?

7

திறக்கப் பாடிய வென்னினுஞ் செந்தமிழ்,
உறைப்புப் பாடி யடைப்பித்தா ருந்நின்றார்.
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக்கொள் செஞ்சடை யாரிவர் பித்துரே.

8

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- 1540 முதல் 1545 வரை விரித்த சரிதக் குறிப்பு.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) எங்கே - எங்கே என்று; இருந்த இடம் என்பது இருந்திடம் என வந்தது. "இருக்கு மிடந்தேடி யென்பசிக்கே யன்னம்" (பட்டினத்தார்). அடையாளம். வெண்ணீறு புனைந்த கோலப் பொலிவு. "பொலிவினொடுந் துன்னி" (1541). -(2) உன்னி உன்னி உறங்குகின்றேனுக்கு. "உன்னித் துயிலும் பொழுதின்கண்" (1541); "மருவும் உணர்விற்றுயில் கொண்டார்" (1540). உன்னி யுன்னி அடுக்குப் பலமுறையும் நினைத்துக்கொண்டே யிருந்தமை குறித்தது. தேவாரத்தினுள் உன்னி யுன்னி என்று இருமுறை அடுக்கியருளியமையின் அதுபற்றி விரிநூலினும் மேற்காட்டியவாறு இருமுறை "மருவும் உணர்விற்றுயில்", "உன்னித் துயில்" என்று விரித்தார். "உள்கி உள்கி" (5) என்றதுமது. தன்னை வாய்முர்த் தலைவனா மா சொல்லி என்னை வாவென்று - இதனை "வாய்மூரி லிருப்போம் தொடரவா" என்று என விரித்தனர் ஆசிரியர். -(3) தஞ்சே - தஞ்சமாக - அடைக்கலமாக - அடைய; ஒட்டந்தேன் - ஓடினேன். - (4) ஒக்கவே ஒட்டந்தேன் - அவரோடொப்ப நானும் விரைவாக ஓடினேன். - (5) உள்கி உள்கி - உன்னி உன்னி - (2). கள்ளியார் - கள்ளர். - (6) யாதே செய்து மியாமலோ நீ யெனல், ஆதே யேயும் - யாதே செய்து - பாதகத்தைச் செய்திடினும்; யாமலோம் நீ எனில் - "உலகினி லென்செயலெல்லா முன்விதியே நீயே யுண்ணின்றுஞ் செய்வித்துஞ் செய்கின்றா யென்றும், நிலவுவதோர் செயலெனக் கின் றுன்செயலே யென்று நினை"யின் என்றபடி. ஆதே - அதே என்று சுட்டு முதனீண்டது. பாடிப்பெற்ற......போல் - பிள்ளையாருக்குத் திருவீழிமிழலையில் வாசிபெறும் காசளித்த வரலாறு குறிப்பது போலும். பழங்காசு - பழமையானதால் வாசிபடும் காசு - பழங்காசு - தந்தமையால் உண்டாயின வாட்டத்தைத் தவிர்ப்பார்ப்போல. "பாடலங் காரப் பரிசில் காசருளி" (திருவிசைப்பா) ஓடிப் போந்து - "விரைந்துபோக அவர்முன்னே.....எழுந்தருள" (1542) - "எழுந்தருள நெடிது பின்பு செல்லுமவர்" (1543), ஒளித்தவாறு - "அதனுட்புக்கருள" (1544). - (8) இப்பாட்டு முழுதும் - 1545-ல் விரித்த சரிதத்திற்கு அகச்சான்று. என்னினும் - திறப்பித்தேனுக்கே யல்லால். உறைக்கச் செந்தமிழ் பாடி - என்க. உறைக்க - திருத்தொண்டின் உறைப்பு விளங்க. செந்தமிழ் - "தழைத்த மொழியார்" (1545). உந்நின்றார் - உங்கு நிற்கின்றார். பக்கம். மறைக்க வல்லரோ - "எப்பால் மறைவது" (1545). பித்தரே! - மறைத்தல் இயலாத காரியம். அதனில் முயல்வதனால் இவர் பித்தர் என்றபடி. இயல்பாலும் பித்தர் என்றது குறிப்பு. - (9) பொய்க்கு - பொய்யுடையேனாகிய எனக்கும். பொய்யினேன் என்றதனைப் பொய் என்ற துபசாரம். இழிவு சிறப்பு உம்மை தொக்கது. பொற்கோயில் புக்கதும் - "பொன்னின் கோயில் ஒன்றெதிரே காட்டி" (1544). - (10) மீண்டற்கும் - மீளுதற்கும். முன்னர்ப் பிழை செய்து பின்னர்த்