பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்471

 

தெரிந்து துதித்து அடைந்து மீண்டற்கும் மிதித்தனர். தூண்டிக் கொள்வன் - எனக்கு ஒளியும், வழியும் காட்டி வழிப்படுத்தும் பொருளாகக் கொள்வன்.

குறிப்பு :- இப்பதிக முழுமையும் நாயனாரது சரிதத்தில் இப்பகுதியை விளக்கும் பேராதரவாகிய அகச்சான்றாகும்.

தலவிசேடம் :- திருவாய்மூர் - சூரியன் பூசித்த தலம்; முசுகுந்தர் தாபித்த ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று. இது தென் திருவாய்மூர் என்று வழங்கப்படும். தொண்டை நாட்டில் உள்ள திருவான்மியூரும், நடுநாட்டில் திருநாவுக்கரசு நாயனார் அவதரித்த திருவாமூரும் இதனுடன் பெயரொற்றுமைபற்றி மயங்கி அறியற்பாலனவல்ல. இத்தலத்தைப்பற்றி வாகீசர் ஆளுடைய பிள்ளையார் சரித நிகழ்ச்சிகள் முன் (1541 முதல் 1548 வரை) உரைக்கப்பட்டன. வாகீசர் புராணமும், ஆளுடைய பிள்ளையார் புராணம் 593 - 597 பாட்டுக்களும் பார்க்க. சுவாமி - வாய்மூர்நாதர்; அம்மை - பாலினு நன்மொழியாள்; தீர்த்தம் - சூரிய தீர்த்தம்; மூலத்தானத்துக்குப் பக்கத்தில் வேதாரண்யேசுவரர் எழுந்தருளியுள்ளார்; தியாகர் - நீலவிடங்கர்; நடனம் - கமல நடனம். பதிகம் - 3.

இது திருக்கோளிலினின்றும் தென்கிழக்கே மட்சாலைவழி 3 நாழிகையில் அடையத்தக்கது. திருமறைக் காட்டினின்றும் வடக்கே 15 நாழிகையில் மட்சாலை வழியில் உள்ளது. இதற்கு அணிமையில் தெற்கில் இறைவர் அற்புதப் பொற்கோயில் காட்டி மறைந்த தலம் உள்ளது.

1546. (வி-ரை.) மன்னரவர்க்குக் - காட்சி கொடுத்தருள என்று கூட்டுக; மன்னருக்கு. அவர் - பகுதிப் பொருள் விகுதி.

காணாதார் - காட்சி கொடுத்தருள - முரண் அணிச் சுவைபட வந்தது.

மாலயனும் காணாதார் - மாலும் அயனும் முயன்றும் காண முடியாத அவர் காழி மன்னருக்குத் தாமே காட்சி கொடுக்க என்றது அடியார்க்கருளும் அருளின் எளிமை குறித்தது. உம்மை உயர்வு சிறப்பு. நேரே - விளங்க - தாமாந் தன்மை வாங்க.

ஆடல் - அருட்கூத்து. அருளினியல்பு. திருவிளையாடல் என்றலுமாம்.

கண்டு காணக் காட்டுதலும் - பிள்ளையார் திறக்கப்பாடுக என்றருளிப் பாடியது போலவே, காண்க என்றபோது கண்டனர் என்ற குறிப்பும் காண்க.

அரசும் காண - இறைவர் மறைந்தருளியமையால் முன்னர்க் காணாத அரசுகளும் காணும்படி என உம்மை இறந்தது தழுவியது.

கண்டு - தழைத்த மொழியார் உப்பாலார்; எப்பால் தாம் மறைவது என்று நாயனார் அருளியமையால், அதன் பயனாக, இறைவர் பிள்ளையாருக்குக் காட்சி கொடுத்தருளினர் என்ற உள்ளுறையும் காண்க.

"இவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே" என்ற பதிகத்தினால் பிள்ளையார் அரசுகளுக்குக் காணக் காட்டிய செய்தி யறியப்படும்.

"பாட அடியார்" என்று எடுத்து - பதிகத் தொடக்கம்.

பரமர் - முதன்மையுடையார். "இன்ன தன்மைய ரென்றறி யொண்ணா"தார். அரசுகளும் தாம் அறியமுடியாத திருவுள்ளமுடையார் என்று அயர்ந்த தன்மை குறிப்பு. வரும் பாட்டிலும் இத்தன்மைபற்றியே பரமர் தாமும் என்றார்.

திருவாய்மூர்

II திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

பாட வடியார் பரவக் கண்டேன்
         பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம்
ஆடன் முழவ மதிரக் கண்டேன்
         அங்கை யனல்கண்டேன் கங்கை யாளைக்