| கோட லரவார் சடையிற் கண்டேன் கொக்கி னிதழ்கண்டேன் கொன்றை கண்டேன் வாடற் றலையொன்று கையிற் கண்டேன் வாய்மூ ரடிகளைதான் கண்ட வாறே. |
1 விளைத்த பெரும்பத்தி கூர நின்று மெய்யடியார் தம்மை விரும்பக் கண்டேன் இளைக்குங் கதநாக மேனி கண்டே னென்பின் கலந்திகழ்ந்து தோன்றக் கண்டேன் திளைக்குங் திருமார்பி னீறுகண்டேன் சேணார் மதின்மூன்றும் பொன்ற வன்று வளைத்த வரிசிலையுங் கையிற் கண்டேன் வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே. 4 பொருந்தாத செய்கை பொலியந் கண்டேன் போற்றிசைத்து விண்ணோர் புகழக் கண்டேன் பரிந்தார்க் கருளும் பரிசுங் கண்டேன் பாராகிப் புனலாகி நிற்கை கண்டேன் விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன் மெல்லியலும் விநாயகனுந் தோன்றக் கண்டேன் மருந்தாய்ப் பிணிதீர்க்கு மாறு கண்டேன் வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே. 8 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- வாய்மூர் அடிகளை நான் கண்டவாறு என்? என்னில், அடியார் பாடக் கண்டேன்; பத்தர்கணங் கண்டேன்; விளைத்த பத்திகூர நின்று மெய்யடியார்களை விரும்பும் பரிசு கண்டேன்; உள்க மனம் வைத்த வுணர்வும் கண்டேன் - என்றிவையிவை நான் கண்ட பரிசுகள். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (3) நண்ணிப் பிரியா மழு - இறைவர் கையில் ஏந்திய மழு; தாருகாவனத்து இருடிகள் ஏவியதில் வந்தது; அதனை ஏந்தியபின் பிரிக்காமற் கையில் ஏந்தியுள்ளார். "எறிமழு வோடிள மான்கை யின்றி யிருந்த பிரான்" (புகலியும் வீழிமிழலையும்) என்ற பிள்ளையார் தேவாரம், மழு இறைவர் கையில் நண்ணுதற்கு முன் உள்ள கோல் கூறுதல் காண்க. - (4) விளைத்த....விரும்பக்கண்டேன் - நாயனாரது சரிதத்தில் இப்பகுதி குறிப்பது; அகச்சான்று. - (5) கான்மறையும் - உரல்போன்ற - அகன்ற கூறுடைய. உள்க மனம் வைத்த - நாயனாரது சரிதக் குறிப்பு. - (6) அடி ஆர் - அடியிற்பொலியும். - (8) பொருந்தாத - ஒன்றற்கொன்று பொருந்தாத. எல்லாமா யல்லது மாதலும், உண்மையுமா யின்மையுமாதலும், பிறவும் பிறர் யாவர்பாலும் பொருந்தாத என்றலுமாம். விநாயகனும் - விநாயக மூர்த்தியைச்சொன்ன சில இடங்களுள் இஃது ஒன்று. - (9) மெய் அன்பரானார்க்கு அருள் - இச்சரிதப் பகுதியின் அகச்சான்று. குறிப்பு :- திருவாய்மூர்ப் பதிகங்கள் இரண்டு திருவாய்மூரில் அருளிச் செய்யப்படவில்லை. திருவாய்மூருக்கு அணிமையில் இறைவர் அற்புதப் பொற்கோயில் காட்டி மறைந்தருளிய இடத்தில் அவை பாடப்பெற்றன. பின்னர்த் திருவாய்மூரிற் சென்று "போற்றித் துதிசெய்து" என்ற பதிகங்கள் கிடைத்தில! பாடி - எழுந்து - போக; எழுந்தருள (1542) - திருநாவுக்கரசர் - எய்தப் பெற்றிலரால்; (1543) - புக்கருள - தொடர - வள்ளலார் தாமும் - வந்தணைந்தார்; (1544) - என வயர்ந்து - என (1545), காணாதார் - புகலி மன்னருக்குக் கொடுத்தருளக் - கண்டு காணக் காட்டுதலும் - பாடினார்; (1546), பரமர் - கொண்டு - எழுந்தருள, - அடைந்து - வலசெய்து - தொழுது போற்றித் துதி செய்து - ஒங்க - உடனுறைந்தார் (1547) என்று இந்த ஆறு பாட்டுக்களையும் கூட்டி முடித்துக்கொள்க. |