பக்கம் எண் :


476திருத்தொண்டர் புராணம்

 

1554.

என்று கூற "வெல்லையிலா நீறு போற்று மிருவரையுஞ்
தீமா யையினை யானேபோய்ச் சிதைத்து வருகின்றே"னென்ன
வாமா றெல்லா முரைத்தவரை மறுக்க மாட்டா தரசிருப்பத்,
தாமா தரவாற் றமிழ்நாட்டிற் போனார் ஞானத் தலைவனார்.

289

1550. (இ-ள்.) வந்து...எய்தி - (அவ்வாறு போதவிட்டார்) வந்து சிவபெருமானது திருமறைக்காட்டிற் பிள்ளையாரது திருமடத்திற் சேர்ந்து; மன்னு...அறிவித்து - நிலைபெற்ற சீகாழி அந்தணர் பெருமானாகிய பிள்ளையாருக்குத் தாம் வந்த செய்தியை அறிவித்து (விடுக்கப்பெற்று); அவர்....வணங்க - அவர் திருமுன்பு சேர்ந்து அவரது திருவடிகளை வணங்க; சிந்தை...வினவ - அவர் திருவுள்ள மகிழ்ந்து தீதில்லாமையை விசாரிக்க; "தீங்கும் உள ஆமோ...நினைவார்க்கு" என உரைப்பார் - இந்த உலகம் உய்யத் திருவவதாரம் செய்த "தேவரீருடைய திருவடிகளை நினைப்பவர்களுக்குத் தீங்கும் உண்டாகுமோ?" என்று தொடங்கிச் சொல்வார்களாகி,

285

1551. (இ-ள்.) சைவ நெறி...கேட்டே - "தேவங்களிற் கூறப்பட்ட சைவ நெறியானது உலகில் அழியாது விளங்கி நிற்கவும், (அதனை யடையாமல்), குற்றம் பொருந்திய அவநெறியினைத் தவநெறியென்று எடுத்துக்கூறும் பொய்ம்மையில் வல்ல அமணர்களுடைய கொடுஞ் செய்கைகளைப் பொறுக்க லாற்றாதவர்களாயினோம்" என்று சொல்லக் கேட்டே; "அவ் வன் தொழிலோர்...திருமறையோர் - அந்த வன்றொழிலோர்களுடைய கொடுஞ் செயல்களை மாற்றி ஆதிசைவநெறி விளங்க வேண்டுமென்று தெய்வ நீற்றின் துணையை நினைந்துகொண்டு சிறப்புடைய சீகாழித் திருமறையோராகிய பிள்ளை அங்குச் செல்லத் துணிந்தாராக.

286

1552. (இ-ள்.) ஆயபொழுது - ஆகிய அப்போது; திருநாவுக்கரசு - வாகீசர்; புகலி ஆண் தகைக்கு - சீகாழியின் ஆண்டகையாராகிய பிள்ளையாரிடம்; "காயம் மாசு...யான்" என்றார் - உடம்பில் அழுக்கைக் கழுவாமல் பெருக்கிக்கொண்டே திரியும் தீயோராகிய அமணர்கள் கொடுமை செய்யும் வஞ்சனைகளில் மிகவும் வல்லவர்கள்; அவர்கள் எனக்கு முன்னாளிற் செய்த தீய தொழில்களும் பலவாகும்; ஐயோ! பிள்ளாய்! தேவரீர் அங்குச் செல்ல அடியேன் இசைய மாட்டேன்" என்று அருளிச் செய்தார்"

287

1553. (இ-ள்.) என்று கூற - திருநாவுக்கரசு இவ்வாறு சொல்ல; உடைய பிள்ளையார் - ஆளுடைய பிள்ளையார்; எல்லையிலா நீறு.....கருத்துடையேன் - அளவில்லாத திருநீற்றினைப் போற்றுகின்ற அவ்விரு பெருமக்களையும் அங்குச் சென்று காணவேண்டுமென்னும் கருத்தைக் கொண்டிருக்கிறேன்; அங்குத் தீங்கு....அழிவித்து - அங்குத் தீமைகளைச் செய்கின்ற சமணர்களது பொருந்திய நிலைமையை அழிவித்து; சைவநெறி பாரித்து அன்றி - சைவநெறியை வளர்த்தல்லாமல்; ஒன்றும் செய்யேன் - வேறு ஒரு கருமமும் செய்யமாட்டேன்; ஆணை உமது! - உம்முடைய ஆணை! என்றார் - என்றருளிச் செய்தாராய்;

288

1554. (இ-ள்.) போம் ஆ துணிந்து - பிள்ளையார் அங்குச் செல்லும் நிலையினைத் துணிந்து; "நீர் அங்குப் போதப் போதா" - நீரும் அங்கு உடன்வருதல் வேண்டா; "அவ்வமணர்.....வருகின்றேன்" - அந்த அமணர்களுடைய தீய வஞ்சனைகளையெல்லாம் யானே அழிவித்து வருகின்றேன்; என்ன ஆம் ஆறு எல்லாம் உரைத்தவரை - என்று கூறி, மேல் ஆவனவாகிய செயல்களையெல்லாம் துணிந்து கூறிய அந்தப் பிள்ளையாரை; மறுக்கமாட்டாது - மறுக்கமாட்டாதவராகி; அரசு இருப்ப - திருநாவுக்கரசு நாயனார் அங்குத்தங்க; ஞானத் தலைவனார் - சிவஞானத்