உரைப்பார் - உரைப்பாராகி, முற்றெச்சம். உரைப்பார் - என என்று மேல் வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. உயவருவீர் - தாள் அணைவார்க்கு - என்பனவும் பாடங்கள். 285 1551. (வி-ரை.) "சைவநெறி...பொறுக்ககில்லோம்" என - இது அம்மாந்தர் பின்னும் தொடர்ந்து சொல்லியது. தீதின்மை வினவிய பிள்ளையார்க்கு விடையாகத் தமக்குற்ற தீமையை முதற்கட் கூறுதல் மங்கலமாக அமைவுடைத் தாகாமையின், உமது இருதாள் நினைப்பார்க்கும் தீது உளவாமோ? என்று தொடங்கிப், பின்னர்த் தமக்கு உள்ளதீங்கினைக் கூறினமை "அறிவுடை மாந்தர்" செய்கை என்க. பின்னர்ப் பிள்ளையாரைக் குலச்சிறைநாயனார் வணங்கி எதிர்கொண்டபோதும், அரசியார்க்கும் அவர்க்கும் "திருவருள் பெருகு நன்மைதான் வாலிதே?" என்று பிள்ளையார் வினவியதற்குத், "தேவரீர் இன்றெழுந் தருளப் பெற்றபே றிதனா லெற்றைக்குந் திருவருளுடையோம்" (திருஞான - புரா - 659) என்று மந்திரியார் விடைகூறும் அமைதியினையும் இங்கு நினைவுகூர்க. வைதிக சைவ நெறி - என்று கூட்டுக. நிற்க - நிற்கவும்; இருக்கவும். சழக்கு நெறியைத் தவம் என்னும் - சழக்கு - குற்றம். சமணம் சழக்கு நெறி என்றதனால் வைதிக சைவ நெறி குற்றமற்றது என்பது பெறப்படும். சழக்கு நெறியைத் தவம் என்னும் - என்றது மயிர் பறித்தல், உடலை வாட்டிச் சுடுபாறையிற் கிடத்தல், கொல்லாமையுள் மறைந்து கொலைதுணிதல் முதலிய குற்றங்களையே உயர்ந்த தவம் என்று கொள்கின்ற. செயல் - சமணர் சைவ நெறிக்குச் செய்த கேடுகள். இவை "நீற்று மேனியராயினர் மேலுற்ற, காற்றுக் கொள்ளவு நில்லா வமணர்" (ஆலவாய் - பழம்பஞ்சுரம் - 8) என்பது முதலிய திருவாக்குகளாலும், கண்டு முட்டு, கேட்டு முட்டு என்பன முதலிய அவர்களது கொடிய வழக்குக்களாலும், சைவத்திற்கு அவர்கள் செய்த இடையூறுகளாலும் அறியப்படும். வன் தொழிலோர் அச் செயல் என்க. மாற்றுதல் - போக்குதல். அழித்தல். அவர்களது கொடுமைகளை மாற்றும் அவ்வளவே பிள்ளையார் கருதியதன்றி, அவர்களை அழித்தல் பிள்ளையார் கருத்தன்று. கழுவேறுதலால் அவர்களுள் அடிகண்மார் அழிவெய்தியமை அரசரது ஆணையாமென்க. அதுவும் இறைவர் திருவுளப் பாங்கின்படி நடந்த தென்பது "வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே" என்ற பதிகத்தால் பிள்ளையார் இறைவரது திருவுள்ளம் வினவிய வரலாற்றினா லறியப்படும். அழிக்க என்பதற்குச் சமயச் சார்பினை அழிக்க என்பது பொருள். இவைபற்றிய விரிவுகள் அளுடைய பிள்ளையார் புராணத்துட் காண்க. ஆதி சைவ நெறி - ஆதியாகிய சைவ நெறி என்றும், ஆதியினது சிவநெறி என்றும் உரைக்க நின்றது. பிறநெறிகள் யாவும் இடையே தோன்றியன என்பதும் குறிப்பு. சைவநெறி விளங்க - "மிகுசைவத் துறைவிளங்க", "அடியார்பால் பூதிசாதன விளக்கம் போற்றல்பெறா தொழிய" முதலியவை காண்க. ஒளிகுன்றி நின்ற சைவத்துறையினை விளங்கச்செய்ய. தெய்வ நீறு நினைந்து எழுந்தார் - நீறு - நீற்றின் வலிமையாகிய துணை; சமண்மாறவும் சைவம் விளங்கவும் திருநீறு செய்விக்கும் என்று நினைந்து என்க. இஃது பிள்ளையாரது மனத்துணி பென்பது அரசுகளுக்கு அவர் அருளிய விடையாகிய "வேயுறு தோளி" என்ற பதிகத்தினுள், "புத்தரொ டமணை வாதி லழிவிக்கு மண்ணல் திருநீறு செம்மை திடமே" என்றதனா லறியப்படும். அவர் திருவுள்ளந் |