பக்கம் எண் :


484திருத்தொண்டர் புராணம்

 

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1555. (வி-ரை.) விடைகொண்டு - விடைபெற்றுக்கொண்டு.

போற்றிசைத்து - திருப்பதிகங்கள் பாடி. பேணுதல் - இயன்ற திருப்பணிகள் எல்லாம் செய்து விரும்பி வீற்றிருத்தல். பெயர்வார் - அங்குநின்றும் பெயர்ந்து செல்வாராகி. அமர் - விரும்பி வெளிப்பட வீற்றிருக்கும்; தாணு - சிவபெருமான்.

பெயர்வார் - நினைக்கின்றார் (1555), அருள்பெற்று - அகன்று போய் - என பணிந்து - பாடி - வந்து அடைந்தார் (1556) என்று முடிக்க.

நினைக்கின்றார் - நினைந்து. முற்றெச்சம்

போற்றிசைத்தல் - ஒரு சொன்னீர்மைத்தாய்ப் போற்றுதல் என்ற பொருளில் வந்தது.

மீண்டுஞ் சார நினைக்கின்றார் - முன் பலகாலம் பிள்ளையாருடனே தங்கி அருள் பெற்ற தன்மையால் இங்கு அவரைப் பிரிந்த உடனே அங்குச் சென்று தொழ நினைந்தார் என்க. மீண்டும் - என்ற குறிப்புமது. மேல்வரும் பாட்டில் "மீண்டும் செல்வன்" என்றதும் இக்கருத்து.

290

1556. (வி-ரை.) சோலை - நெய்த நிலத்துக்குரிய புன்னை கைதை முதலிய சோலைகள். "மன்றல் விரவு மலர்ப்புன்னை மணஞ்சூழ் சோலை" (1529)

சோதி - இயல்பாய் ஒளி விடுவதாயும், ஏனை ஒளிகட்கெல்லாம் ஒளிதருவ தாயும் உள்ள பேரொளி. "சோதியுட்சோதி", "சோதியே சுடரே சூழொளி விளக்கே."

அருள் பெற்று - அருள்விடை பெற்றுக்கொண்டு.

"வேலைவிடம்.....செல்வன்" என - காரோணம் - பிறவும் பணிந்து - பாடி - வந்து - என்றது அணியனவாகிய அத்தலங்களிற் சென்று பணிந்த காலத்தெல்லாம் வீழிமிழலை செல்வேன் என்பது மனத்துட்கொண்டே சென்றருளினர் என்றதாம். திருவாரூரினின்றும் திருப்புகலூர் தொழ நினைந்து சென்றவர் பிற பதியும் பணிந்து போந்ததும் (1495), பிறவும் காண்க. என - என்று நினைந்த வண்ணமே.

ஞாலம் நிகழ்ந்த - உலகத்தில் விளங்கிய. நிகழ்தல் - பெருமை பிறங்குதல்.

நாகைக்காரோணமும் - பிறவும் என்க. உம்மை தொக்கது. பிறவும் - முன் அணைந்தனவும் பிறவும் என்க. முன் அணையாத தலமாதலின் நாகைக்காரோணத்தைப் பெயராற் சுட்டி, அது முதலிய பிறவும் என்றார்.

பிற - திருநெல்லிக்காவல், திருநாட்டியத்தான்குடி, திருவாரூர், நன்னிலம் முதலியன. நாயனாரது கருத்துத் திருவீழிமிழலை மீண்டு சென்று கும்பிடுதலாதலின் இடையில் நேர்ந்த தலங்களை வழிபட்டுச் சென்றமை தொகுத்துக் கூறினார்.

சாலும்மொழி வண் தமிழ்பாடி - அங்கங்கும் திருப்பதிகங்களை அருளிச் செய்து துதித்து.

291

திருமறைக்காடு

III திருச்சிற்றம்பலம்

திருநேரிசை

இந்திர னோடு தேவ ரிருடிக ளேத்து கின்ற
சுந்தர மானார் போலுந் துதிக்கலாஞ் சோதி போலுஞ்
சந்திர னோடு கங்கை யரவையுஞ் சடையுள் வைத்து
மந்திர மானார் போலு மாமறைக் காட னாரே,

1