பக்கம் எண் :


488திருத்தொண்டர் புராணம்

 

பில் எலியாயிருந்தது; அது இங்குத் திருவிளக்கில் நெய்யுண்ணப் புக்கபோது மூக்கைச் சுடர் கூட்டிடக் கனன்று தூண்ட, மங்கியிருந்த விளக்கைத் தூண்டிவிட்டது; நினையாமற் செய்ததாயினும் அச்சிவபுண்ணியப்பலனால் மறுபிறவியில் மூவுலகாளும் மாவலிச்சக்கரவர்த்தியாய்ப் பிறந்தது என்ற வரலாறு அப்பர் சுவாமிகளது திருக்குறுக்கைத் திருநேரிசையுட் போற்றப்பட்ட பெருமையுடைய தலம். இமயமலையில் பார்வதியம்மையார் திருமணத்தின்போது வடபால் தாழ்ந்து தென்பால் உயர, அதனைச் சமன் செய்வதற்காகத் தெற்கில்போந்த அகத்திய முனிவருக்குச் சிவபெருமான் தந்த வரத்தின்படி மணவாளக் கோலங்காட்டிய பழம்பதி. மணவாளக்கோலம் திருமூலத்தானத்துள் இலிங்க மூர்த்திக்குப் பின்புறம் காணலாம். ஆதிராமர்இங்குச் சேர்ந்து பின் சேதுக்கரைகட்டி இராவணனை வதைத்துப் பின் அப்பழி நீங்கப் பூசித்த தலமாதலின் இது ஆதிசேது என்றும் கோடிக்கரை என்றும் சொல்லப்பெறும். பிந்திய இராமர் வழிபட்டு இராவணனை வதைத்த வீரகத்திப்பழி நீங்கப்பெற்ற தலம் என்பர். பிரமதேவர் இங்குப் பூசித்து வேதோபதேசம் பெற்றதுடன் சிருட்டி வல்லமையும் பெற்றனர். விசுவாமித்திரர் பூசித்துப் பிரமஇருடித் தன்மை பெற்றனர். இத்தலத்துள்ள மணிகர்ணிகைத் தீர்த்தத்தினுள் மூழ்கிக் கங்கை புனிதமாயினள்; அவ்வாறே இங்குத் தேவ பூடணத் தீர்த்தத்தினுள் மூழ்கிக் காவிரி புனிதம் பெற்றனள். வேதங்கள் பூசித்துத் திருக்காப்பிட்டபடி அடைத்தேயிருந்த கதவினைத் திருநாவுக்கரசு நாயனார் தேவாரம் பாடித் திறப்பித்தனர்; திருஞானசம்பந்த நாயனார் தேவாரம் அருளிச்செய்து அதனை அடைக்கச் செய்தருளினர்; அதுமுதல் திறக்கவும் அடைக்கவும் வழங்கி வருகிற நிகழ்ச்சியினால் நாயன்மார்களது தேவாரங்களும் தமிழ் வேதங்கள் எனப்பட்டு இறைவன் வாக்காகிய வேதங்களோடொத்த சிறப்புடையன என்று விளங்கிய தலம். இவ்வரலாறுகள் அவ்வந் நாயன்மார் புராணங்களுள்ளும் தேவாரங்களுள்ளும் காண்க. சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான்பெருமாணாயனாரும் ஒருங்கே எழுந்தருளித் தரிசித்தனர். அம்மை பெயருடன் சுந்தரமூர்த்திகளது தேவாரம் தொடங்குதல் குறிப்பிடத்தக்கது. முசுகுந்தர் தாபித்த விடங்கத்தலம் ஏழனுள் இதுவும் ஒன்று. மூவர் பாடலும் பெற்ற பெருமையுடையது.

சுவாமி - மறைக்காட்டு - மணாளர்; வேதாரண்யேசுவரர்; அம்மை - யாழைப் பழித்த மொழி - மொழியம்மை; தீர்த்தம் - வேத தீர்த்தம் - கடற்றுறை - முதலியன; மரம் - வன்னி; விடங்கர் - புவனவிடங்கர்; நடனம் - அம்ச நடனம். பதிகம் 10.

திருத்துறைப்பூண்டி - வேதாரணியம் இருப்புப்பாதைத் தொடர்ச்சியில் வேதாரணயம் என்ற நிலயத்தினின்றும்  நாழிகை அளவில் அடையத்தக்கது.

நாகைக்காரோணம் - பிறவும்

இதிற்குறித்த பிறவும் என்றதனாற் கருதப்பட்ட இடைப்பட்ட திருநெல்லிக் காவல் - திருநாட்டியத்தான்குடி - திருநன்னிலம் முதலியவைகட்கு நாயனார் பதிகங்கள் கிடைத்தில ! திருவாரூர்ப் பதிகங்கள் முன்னரே குறிக்கப்பட்டன.

திருநாகைக்காரோணம்

I திருச்சிற்றம்பலம்

திருநேரிசை

மனைவிதாய் தந்தை மக்கண் மற்றுள சுற்ற மென்னும்
வினையுளே விழுந்த ழுந்தி வேதனைக் கிடமா காதே
கனையுமா கடல்சூழ் நாகை மன்னுகா ரோணத் தானை
நினையுமா வல்லீ ராகி லுய்யலா நெஞ்சி னீரே.

1