பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்489

 

தெற்றினர் புரங்கள் மூன்றுந் தீயினில் விழவோ ரம்பாற்
செற்றவெஞ் சிலையர் வஞ்சர் சிந்தையுட் சேர்வி லாதார்
கற்றவர் பயிலு நாகைக் காரோணங் கருதி யேத்தப்
பெற்றனர் பிறந்தார் மற்றுப் பிறந்தவர் பிறந்தி லாரே.

9

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- நாகைக்காரோணத் திறைவரை நினைந்தால் உய்யலாம்; நினைபவரே பிறந்தவர்; ஏனையோர் பிறந்தும் பிறவாதவர்; அதாவது இறந்தவரோ டொப்பர்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- கனையும் - கனைக்கும்; ஒலிக்கும். நினையுமா - நினைக்கும் ஆறு - வழி. நெஞ்சினிரே - இகழ்ச்சிக் குறிப்பாகிய பன்மை. உலகரை நோக்கி உரைத்தல் கருதி நெஞ்சினை முன்னிலைப்படுத்தியது. - (2) நினைத்த - நினைந்ததனால். - (3) வேத வித்து - வேதமூலம்; சிவன். உணர்தல் - அவரது இறைமைத் தன்மையினையும் கருணையினையும் அனுபூதிகமாகக் கைவரப்பெறுதல். - (4) மண்தனை இரந்து - மாவலியினிடத்து திருமால் மண் கேட்டது. - (5) இடும்பை - துன்பிற்குக் காரணமான பாசம். - (6) வெம்பனை - கொடிய பனை போன்ற. "பனைக்கை மும்மத வேழம்" (தேவா).- (7) கங்குலும் பகலும் காணப்பெற்று - இரவு பகல் இடையறாது நினைத்தலால் மனத்துட் கண்டு கொண்டு. - (9) தெற்றினர் - பகைவர். கருதி ஏத்த....பிறந்திலார் - "பேசாத நாளெல்லாம் பிறவா நாளே" (தேவா). பிறந்திலார் - செத்தவர் என்ற பொருள் தரக்கூறும் மங்கலவழக்கு. - (10) இறைவரது ஒரு விரல்நுனிக்கு ஆற்றமாட்டாது அழியாவரம் பெற்ற இரவணன் அழிந்தனன்; அவர் இரு தேவிமாருடன் திருமேனி முழுமையும் திருவடியும் மனத்தினுள் தாங்கியதனால், (அழியும் உடல் பெற்ற) அடியாராகிய நாம் அழியாமை பெற்று உய்ந்தோம். இஃது என்ன அற்புதம்! இறைவரது தன்மையை நகைச்சுவைபட எடுத்துக் கூறியது.

II திருச்சிற்றம்பலம்

திருவிருத்தம்

வடிவுடை மாமலை மங்கைபங் கா!கங்கை வார்சடையாள்!
கடிகமழ் சோலை சுலவு கடனாகைக் காரோணனே!
பிடிமத வாரணம் பேணுந் துரகநிற் கப்பெரிய
விடிகுரல் வெள்ளெரு தேறுமி தென்னைகொ லெம்மிறையே!

1

தூமென் மலர்க்கணை கோத்துத்தீ வேள்வி தொழிற்படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த கடனாகைக் காரோண!நின்
நாமம் பரவி நமச்சிவா யவென்னு மஞ்செழுத்துஞ்
சாமன் றுரைக்கத் தருதிகண் டாயெங்கள் சங்கரனே!

3

பழிவழி யோடிய பரவிப் பறிதலைக் குண்டர்தங்கள்
மொழிவழி யோடி முடிவேன் முடியாமைக் காத்துக்கொண்டாய்
கழிவழி யோத முலவு கடனாகைக் காரோண!வென்
வழிவழி யாளாக்கும் வண்ண மருளெங்கள் வானவனே!

4

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- கடல்சூழ் நாகைக்காரோணத்தில் எழுந்தருளிய இறைவரே! நான் இறக்கும் காலத்தில் உமது திருநாமங்களைச் சொல்லி உமது மகாமந்திரமாகிய சீ பஞ்சாக்கரத்தை உரைக்கும் வரத்தைக் கொடுப்பீராக! என் வழிவழி ஆளாக்கும் வண்ணம் அருளுவீராக! நாகைக்காரோணத்தை என்றும் சிந்தை