| தெற்றினர் புரங்கள் மூன்றுந் தீயினில் விழவோ ரம்பாற் செற்றவெஞ் சிலையர் வஞ்சர் சிந்தையுட் சேர்வி லாதார் கற்றவர் பயிலு நாகைக் காரோணங் கருதி யேத்தப் பெற்றனர் பிறந்தார் மற்றுப் பிறந்தவர் பிறந்தி லாரே. |
9 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- நாகைக்காரோணத் திறைவரை நினைந்தால் உய்யலாம்; நினைபவரே பிறந்தவர்; ஏனையோர் பிறந்தும் பிறவாதவர்; அதாவது இறந்தவரோ டொப்பர். பதிகப் பாட்டுக் குறிப்பு :- கனையும் - கனைக்கும்; ஒலிக்கும். நினையுமா - நினைக்கும் ஆறு - வழி. நெஞ்சினிரே - இகழ்ச்சிக் குறிப்பாகிய பன்மை. உலகரை நோக்கி உரைத்தல் கருதி நெஞ்சினை முன்னிலைப்படுத்தியது. - (2) நினைத்த - நினைந்ததனால். - (3) வேத வித்து - வேதமூலம்; சிவன். உணர்தல் - அவரது இறைமைத் தன்மையினையும் கருணையினையும் அனுபூதிகமாகக் கைவரப்பெறுதல். - (4) மண்தனை இரந்து - மாவலியினிடத்து திருமால் மண் கேட்டது. - (5) இடும்பை - துன்பிற்குக் காரணமான பாசம். - (6) வெம்பனை - கொடிய பனை போன்ற. "பனைக்கை மும்மத வேழம்" (தேவா).- (7) கங்குலும் பகலும் காணப்பெற்று - இரவு பகல் இடையறாது நினைத்தலால் மனத்துட் கண்டு கொண்டு. - (9) தெற்றினர் - பகைவர். கருதி ஏத்த....பிறந்திலார் - "பேசாத நாளெல்லாம் பிறவா நாளே" (தேவா). பிறந்திலார் - செத்தவர் என்ற பொருள் தரக்கூறும் மங்கலவழக்கு. - (10) இறைவரது ஒரு விரல்நுனிக்கு ஆற்றமாட்டாது அழியாவரம் பெற்ற இரவணன் அழிந்தனன்; அவர் இரு தேவிமாருடன் திருமேனி முழுமையும் திருவடியும் மனத்தினுள் தாங்கியதனால், (அழியும் உடல் பெற்ற) அடியாராகிய நாம் அழியாமை பெற்று உய்ந்தோம். இஃது என்ன அற்புதம்! இறைவரது தன்மையை நகைச்சுவைபட எடுத்துக் கூறியது. II திருச்சிற்றம்பலம் | திருவிருத்தம் |
| வடிவுடை மாமலை மங்கைபங் கா!கங்கை வார்சடையாள்! கடிகமழ் சோலை சுலவு கடனாகைக் காரோணனே! பிடிமத வாரணம் பேணுந் துரகநிற் கப்பெரிய விடிகுரல் வெள்ளெரு தேறுமி தென்னைகொ லெம்மிறையே! 1 தூமென் மலர்க்கணை கோத்துத்தீ வேள்வி தொழிற்படுத்த காமன் பொடிபடக் காய்ந்த கடனாகைக் காரோண!நின் நாமம் பரவி நமச்சிவா யவென்னு மஞ்செழுத்துஞ் சாமன் றுரைக்கத் தருதிகண் டாயெங்கள் சங்கரனே! 3 பழிவழி யோடிய பரவிப் பறிதலைக் குண்டர்தங்கள் மொழிவழி யோடி முடிவேன் முடியாமைக் காத்துக்கொண்டாய் கழிவழி யோத முலவு கடனாகைக் காரோண!வென் வழிவழி யாளாக்கும் வண்ண மருளெங்கள் வானவனே! |
4 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- கடல்சூழ் நாகைக்காரோணத்தில் எழுந்தருளிய இறைவரே! நான் இறக்கும் காலத்தில் உமது திருநாமங்களைச் சொல்லி உமது மகாமந்திரமாகிய சீ பஞ்சாக்கரத்தை உரைக்கும் வரத்தைக் கொடுப்பீராக! என் வழிவழி ஆளாக்கும் வண்ணம் அருளுவீராக! நாகைக்காரோணத்தை என்றும் சிந்தை |