பக்கம் எண் :


490திருத்தொண்டர் புராணம்

 

செய்வாரைத் திருமங்கை பிரியாதிருக்கும். சமண் குழியில் வீழ்ந்த என்னையும் நினைந்து எடுத்து ஆட்கொண்டு காத்தீர்! உமக்கு நான் செய்யும் கைமாறு என்ன உள்ளது.

குறிப்பு :- இப்பதிகத்தில் அகப்பொருட் சுவைபட இறைவருடன் நாயகி அசதியாடும் முறையில் பல பாடடுக்கள் காணத்தக்கன. யானை குதிரை இருக்க எருது ஏறுவதென்? (1). வில் தாங்கிய கை அம்மையாருடையது; நாண்வலித்து அம்பு கோத்த கை உம்முடையது; இவ்வாறாக வில் எய்து புரம் எரித்த தெவ்வாறு? (2) - மெல்லியலார் வந்து பலி இடப் பிச்சைகொள்வது மாதிமையோ? (7) - கங்கையைச் சடையுள்ளே கரந்து வைத்தாய்; அக்கள்ளத்தை மெள்ளவுமைநங்கை அறியிற் பொல்லாது (9).

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) "கடகரியும் பரிமாவும்" (சாழல்). - (2) சேவகம் - ஆண்மை; வீரம் செய்தல். - (3) தீ வேள்வி தொழிற்படுத்த - தீயுடன் செய்யும் திருமணத்தினை நீர் செய்யும்படி தூண்டிய. சாம் அன்று உரைக்கத் தருதி - நாயனார் தமக்காகக் கேட்கும் வரங்கள் மிகச் சில. இது அவற்றுள் ஒன்று. (பிறரும இவ்வாறு கேட்கப் பயிலுதல் நலந்தரும்.) - (4) முடியாமை - கேடுறாமல். வழிவழி ஆளாக்கும் வண்ணம் - இறப்பிறவியின் வழியே இனியும் தொடர்ந்து வரும் பிறவிகளிலும். "புழுவாய்ப் பிறக்கினும்" என்ற திருவித்தக் கருத்து. இதுவும் நாயனார் இறைவர்பாற் கேட்கும் மிகச்சில வரங்களுள் ஒன்று. உலகர்க்குக் காட்டிய உபதேசமுமாம். வழிவழி - வம்ச பரம்பரை என்று கொள்வாரு முண்டு. நாயனார் துறவறத்து நின்றராதலின் அது கருத்தன்றென்க. - (5) செந்துவர்வாய் - கருங்கண் - வெண்ணகை - முரண் அணி. திருமங்கை - அருட்சத்தி - இலக்குமி என்பாருமுண்டு. - (6) மனை துறந்து - அல் உண்ணா - சமணர் வழக்குக்கள். எனநினைந்து ஆட்கொண்டு - நாயனார் சரித அகச்சான்று. இச்சை - கைமாறு என்ற பொருளில் வந்தது. - (7) சீர்மலி செல்வம் - அருட்டிரு. சுலவு - சூழ்ந்த. மாதிமை - பெருமை. - (9) தலைவர்பால் மனங்கொண்ட நாயகி அவருடன் அசதியாடிய கூற்றாகச் சொல்லியது. நாயகன் - மணவாளன். - (10) மற்றுச் செய்திலன் - நகைச்சுவைபடக் கூறியது.

III திருச்சிற்றம்பலம்

திருக்குறுந்தொகை

பாணத் தான்மதில் மூன்று மெரித்தவன், பூணத் தானர வாமை பொறுத்தவன்,
காணத் தானினி யான்கட னாகைக்கா, ரோணத் தானென நம்வினை யோயுமே.

1

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- நாகைக்காரோணத்திறைவரைத் தொழ வினைகள் தீரும்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பாணம் - அம்பு. காணத்தான் இனியான் - அழகன் - இனிமை செய்பவன். காண - தரிசித்துப் பெருமைகளைக் காண. என - என்று சொல்ல. - (2) அலம்பிய - சத்தித்த. காண்டலும் என்பது எதுகை நோக்கிக் கண்டலும் என நின்றது. - (4) எல்லி - இரவு. - (5) அனுக்கிய - வருத்திய. மை - விடம். மையைத் துன்புறுத்திய - மாற்றிய - நீலகண்டன். - (6) விலங்கல் மெல்லியல் - மலைமகள். விலங்கல் - மலை. - (7) ஏறு - சிங்க ஏறு. இனங்கொள் கூட்டமாகிய. சிவனோடொப்ப இனம் என்று தம்மை எண்ணித் தருக்கிய என்றலுமாம். இப்பொருட்கு வானவரும் எனச் சிறப்பும்மை தொக்க தென்க. - (8) அந்தமில்புக ழாயிழையார் - மலைமகள். காரைக்காலம்மை, மங்கையர்க் கரசியம்மையார் முதலினோர் என்றலுமாம். "கௌரி நாயக, நின்னை வணங்கிப் பொன்னடி புகழ்ந்து, பெரும்பதம் பிழையா வரம் பல பெற்றோர், இமையா நெடுங்கண் ணுமையா ணங்கையும்......தாருகற் செற்ற