பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்493

 

ஆன வழிபாட் டர்ச்சனைக்கு நிபந்த மெல்லா மமைத்திறைஞ்ச
ஞான வரசும் புக்கிறைஞ்சி நாதர் முன்பு போற்றுவார்.

299

1565.

"தலையின் மயிரைப் பறித்துண்ணுஞ் சாதி யமணர் மறைத்தாலுண்
 ணிலையிலாதார்நிலைமையினான் மறைக்கவொண்ணுமோ? வென்னும்
 விலையில்வாய்மைக்குறுந்தொகைகள்விளம்பிப்புறம்போந்தங்கமர்ந்தே
 யீலைகொள் சூலப் படையார்சே ரிடங்கள் பிறவுந் தொழவணைவார்,


1566.

பொங்கு புனலார் பொன்னியினி லிரண்டு கரையும் பொருவிடையார்
தங்கு மிடங்கள் புக்கிறைஞ்சித், தமிழ்மா லைகளுஞ் சாத்திப்போ,
யெங்கு நிறைந்த புகழாள ரீறி றொண்ட ரெதிர்கொள்ளச்
செங்கண் விடையார் திருவானைக் காவின் மருங்கு சென்றணைந்தார்.

1557. (இ-ள்.) வீழிமிழலைதனைப் பணிந்து - அவ்வாறு திருவீழிமிலையை வந்தடைந்த நாயனார் அத்தலத்தைப் புறத்தே பணிந்து போய்; வேதமுதல்வர்.....போற்றிசைத்து - வேத முதல்வராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுவதற்காகச், சச்சரப்படையை வலக்கையில் ஏந்திய திருமாலினால் விண்ணுலகத்தினின்றும் கீழே இவ்வுலகத்துக்குக் கொண்டுவரப்பட்டு, நிலைபெற விளங்கிய திருக்கோயிலின்கண் நிலைபேறாகப் பொருந்திய பெருமாறைத் துதித்து; தாழும் நாளில்....தலை நிற்பார் - விரும்பி யிருக்கும் காலத்தில் பிற தலங்களையும் பணிய வேண்டுமென்னும் ஆசையின் மிகுந்தவராகி,

292

1558. (இ-ள்.) பூவில்......பணிவார் - உலகில் விளங்கும் நீரையுடைய காவிரியின் கரைவழியே போய்த் தலங்களைப் பணிந்து செல்வார்; பொற்பமைந்த....இறைஞ்சி - அழகமைந்த பசு வுருவுடன் அமைந்த அம்மையாருக்கு அருள் செய்யும் திருவாவடுதுறை யிறைவரது பாதங்களைச் சேர்ந்து வணங்கி; நாவுக்கரசர் - திருநாவுக்கரசர்; ஞானபோனகர்க்கு....போற்றி - திருஞானமுண்டருளிய ஆளுடைய பிள்ளையாருக்கு அவரது பாடலுக்காக அங்கு இறைவர் ஆயிரம் பொன்னும் அளித்த திறத்தினை வைத்துத் துதித்து; போந்து - அங்குநின்றும் புறப்படுச் சென்று; பிறவும் பணிகின்றார் - பிற பதிகளையும் பணிந்து செல்வின்றாராய்,

293

1559. (இ-ள்.) செய்ய...செல் பொழுதில் - சிவந்த சடையினையுடைய சிவபெருமான் எழுந்தருளிய திருப்பழையாறை சார அத்தலுத்துள் செல்கின்ற பொழுதில்; மையல் அமணர்....தொழுதருள - மயக்கமுடைய அமணர்கள் மறைத்த திருப்பழையாறை வடதளிக் கோயிலில் எழுந்தருளிய சிவபெருமானை நாயனார் கைகூப்பித் தொழுதருளிய அளவில்; கண்டவாற்றால் - திருவுள்ளத்துள் அறிந்தபடியினால்; (வினவி), அமணர்கள் தம் பொய்கொள் விமானம் எனக் கேட்டு - அது அமணர்களுடைய வஞ்சனையாற் செய்த விமானம் என்று அங்குள்ளார்பாற் கேட்டு; பொறாத உள்ளம் மிகப் புழுங்கி - பொறுக்கலாற்றாக திருவுள்ளத்து மிகப்புழுக்கத்தை யடைந்து,

294

1560. (இ-ள்.) அந்த விமானம்.....கழல் உன்னி - அவ்வாறறிந்த அந்தப் பொய்கொள் விமானத்தின் அணிமையில் அங்கு ஓரிடத்தின் பக்கமாகச் சேர்ந்து, மணமுடைய இதழ்கள் விரிகின்ற கொன்றை மாலை சூடிய முடியினையுடைய சிவபெருமானுடைய சிவந்த திருவடிகளை நினைத்து; "மந்த அமணர்...பாற்றும்" என்று - அறிவிலிகளாகிய அமணர்கள் வஞ்சனையினால் மறைத்த வஞ்சத்தினை ஒழித்தருளிச், சைவத்திறம் விளங்காது மறைத்த அமணர்களின் திறத்தினை அழிப்பீராக" என்று வேண்டிக்கொண்டு. பணிந்திருப்பார் - பணிந்திருப்பாராகி,

295