பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்495

 

1566. (இ-ள்.) பொங்கி வருகின்ற நீர் நிறைந்த காவிரியின் இரண்டு கரைகளிலும், போர்வல்ல விடையினையுடைய சிவபெருமான் நிலைத்து விளங்கி வீற்றிருக்கும் பல தலங்களிலும் புகுந்து, வணங்கித், தமிழ் மாலைகளையும் சாத்தி, மேற்சென்று, எங்கும் நிறைந்த புகழாளராகிய நாயனார், முடிவில்லாத தொண்டர்கள் பலரும் வந்து எதிர்கொள்ளச், செங்கண் விடையினையுடைய இறைவரது திருவானைக்காவின் மருங்கே சென்று அணைந்தனர்.

301

இந்தப் பத்துப் பாட்டுக்களும் சொற்றொடர்பும் பொருட்டொடர்பும் பெற்று ஒரு முடிவு கொண்டன.

1557. (வி-ரை.) முதல்வர் - இருப்ப - அரியால் - ஆகாயத்தினின்றும் இழித்த - கோயில் என்று கூட்டுக.

இழிந்த - இழிச்சிய என்ற பொருளில் வந்தது. "தன்றவம் பெரிய சலந்தரனுடலந் தடிந்தசக் கரமெனக் கருளென், றன்றரி வழிபட் டிழிச்சிய விமானத் திறையவன்" (புறநீர்மை - பிள்ளையார் - தேவா - 7), "அவன்கொணர்ந் திழிச்சும் கோயில்" (நேரிசை) என்றபடி, இழிச்சிய - கீழே கொண்டு வரப்பட்ட - எனப் பிறவினையாகக் கொள்க. கோயில் கொணர்ந்்து அரிபூசித்தது தல வரலாறு.

வாழி மலர்ந்த - வாழ்வாக விளங்கிய.

பொருள் - இறைவர். தாழும் - விரும்பும். தாழ்தல் - விரும்புதல். தங்குதல் என்றலுமாம்.

தலைநிற்பார் - நிற்பாராகி - மிகவும் மேற்கொள்வாராகி. எதிர்கால முற்றெச்சம்.

நாவுக்கரசர் - வாகீசர் (1561) - தலைநிற்பார் (1557) - கரைபோய் - அணைந்து இறைஞ்சிப் - போற்றிப் போந்து - பணிகின்றார் (1558) - எய்தச் - செல்பொழுதில் - தொழுதருளக் - கேட்டுப் - புழுங்கி (1559) - எய்தி - உன்னி - என்று - பணிந்திருப்பார் (1560) - அமுதுசெய்யாதே - இருந்தார்; அண்ணலாரும் - உணர்ந்து - அருளிச் செய்கின்றார் (1561) - என்று - அறியச் செய்தருளி - என்று அருள்புரிய - அரசனவனும் - அறிவுற்று - எழுந்து - குவித்திறைஞ்சி (1562), இயம்பி - கூட - எய்தி - கண்டு - குறித்து வணங்கி - அறுத்தான்; (1563) மாய்ந்ததற் பின் - ஆக்கி - விளக்கியபின் .- அமைத்து - இறைஞ்ச - அரசும் - புக்கு - இறைஞ்சிப் - போற்றுவார் (1564) - என்னும் - குறுந்தொகைகள் - விளம்பிப் - புறம் போந்து - அமர்ந்தே - தொழ அணைவார் (1565) - புக்கு இறைஞ்சிச் - சாத்திப் - போய் - எதிர் கொள்ளச் - சென்று - அணைந்தார் - (1566) என்று இந்தப் பத்துப் பாட்டுக்களையும் தொடர்ந்து முடிக்க.

292

1558. (வி-ரை.) பூவிற் பொலியும் புனல் பொன்னி - பூ - உலகம். உலகில் விளக்கமுடைய பெருந்தீர்த்தமாகிய என்க. புனல் - பொய்யா தளிக்கும் புனலுடைய. பூ - மலர்கள் என்று கொண்டு, மலர்களை வாரிக்கொண்டு விளங்கும் எனவும், பூ - அழகு என்று கொண்டு அழகுடன் விளங்கும் என்றும் உரைக்க நின்றது. "பூந்தண் பொன்னி யெந்நாளும் பொய்யா தளிக்கும் புனனாட்டு" (1206) என்றதும், பிறவும் காண்க.

கரைபோய் - தென்கரை வழியாகவே மேற்கு நோக்கிப் போய்.

பணிவார் - பிற பதியும் பணியும் காதலிற் றலைநிற்பாராய்ப் போன அவர் அவ்வாறு பல பதிகளிலும் இறைவரைப் பணிவாராகி.

ஆவுக்கு அருளும் - இத்தலத்தில் பசு வடிவத்துடன் அம்மையார் பூசித்து அவ்வடிவம் நீங்கப்பெற்ற வரலாறு குறித்தது.

ஆவடு தண்துறையார் பாதம் அணைந்து - இது நாயனார் இங்கு இரண்டாவது முறையாகத் தரிசித்தது.