ஞானபோனகர்க்குப் பாவுக்கு ஆயிரம் செம்பொன்னும் அளித்த திறம் - சிவபாதவிருதயர் யாகம் செய்வதற்காக ஆளுடைய பிள்ளையார்க்கு ஆயிரம் பொன்கொண்ட உலவாக்கிழி தந்த வரலாறு. "காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க்கம்பொன், ஆயிரங் கொடுப்பர் போலும்" என்ற திருநேரிசைக் குறிப்பு. 1455 - 1456 பாட்டுக்களிற் கூறியபடி முதல்முறை நாயனார் இத்தலத்துப் பணிந்து சென்றதன் பின்னரும், இப்போது இரண்டாவது முறையாக இங்கு எழுந்தருளும் முன்னரும், உள்ள இடைப்பட்ட காலத்தில் ஆளுடைய பிள்ளையார் இங்கு வந்து பொன் உலவாக்கிழி பெற்றனர். ஆதலின் இம்முறையில் அருளிய பதிகத்தினுள் அவ்வருட்செயலை நாயனார் குறித்துப் போற்றினிர். (திருஞான - புரா - 417 முதல் 430 வரை பாட்டுக்கள் பார்க்க. பணிகின்றார் - நிகழ்கால முற்றெச்சம். பணிகின்றார் - செல்பொழுதின் என்று வரும் பாட்டுடன் கூட்டுக. பிறவும் - திருவிடைமருதூர் - திருநாகேச்சுரம் - திருக்குடந்தை - திருவலஞ்சுழி முதலாயின. 293 திருவாவடுதுறை V திருச்சிற்றம்பலம் | திருநேரிசை |
| மாயிரு ஞால மெல்லா மலரடி வணங்கும் போலும் பாயிருங் கங்கை யாளைப் படர்சடை வைப்பர் போலுங் காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க் கம்பொன் னாயிரங் கொடுப்பர் போலு மாவடு துறைய னாரே. |
1 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- ஆவடுதுறையிறைவர் அருட்பெருமைகளாவன; ஞால மெல்லாம் அவர் மலரடி வணங்கும்; கழமலவூரர்க்கு ஆயிரம் பொன் கொடுப்பர்; அடைந்தவர்க்கன்பர்; கலந் துலந் தலந்து பாடும் அற்றவர்க் கன்பர்; தொழுதெந் தாடிப்பாடித் தோத்திரம் பலவும் சொல்லி அழும் அவர்க் கன்பர்; வேட்கையாற் பரவும் தொண்டர் அடிமையை அளப்பர்; துக்கமா மூடர் தம்மைத் துயரினில் வீழ்ப்பார்; அடைவர் இடர்கள் தீர்த்து இன்பங்கள் கொடுப்பர்; என்பனவாதியா யறியப்படுவன. பதிகப்பாட்டுக் குறிப்பு :- (1) மா - இரு - ஒருபொருட் பன்மொழி. யகரவுடம்படுமெய் ஆகார முன்னும் சிறுபான்மை வரும் என்பது "மாயிருள் துமிய" (சிஞானபோதம் - பாயிரம்) என்றவிடத்துக் காண்க. மாய் - அழியுந்தன்மையுடைய என்றலுமாம். கழுமலவூரர் - ஆளுடைய பிள்ளையார். அம்பொன் ஆயிரம் - ஆயிரம் பொன் கொண்டதொரு உலவாக்கிழி. - (3) அற்றவர் - பிற பற்றுக்க ளெல்லர்ம் அறத் தம்மையே அடைந்தவர். "அற்றவர் கற்ற சிவன்" (தேவா). - (5) பொடி - திருநீறு. அடிமையை அளப்பர் - அளப்பார்போன்று, பொருள் முதலியவை முட்டுப்படினும் செல்லும் அளவினை உலகுக்குக் காட்டு மாறு அருட்செயல்களைச் செய்தல். நாயன்மார் சரிதம் பலவும் காண்க. - (5) வக்கரன் - ஓர் அசுரன். திருமாலால் வதைக்கப்பட்டவன். - (8) நந்தி - மாகாளர் - என்பார் - நடுவுடையார்கள் - சிவாகம விதிப்படிச் சிவபூசையமைப்பில் மேற்குத்துவாரக் காவலர்கள் நந்திமுதல் மாகாளர் வரை உள்ள எழுவர். நடுவுடையார்கள் - நந்திக்கும் மாகாளர்க்கும் இடையில் உள்ளார். இவர்கள் யமுனை, இலக்குமி, சரச்சுவதி, கணபதி, கங்கை என்பார்; நிற்பச் சிந்தியாதே யொழிந்தார் - இவர்களது காவலை எண்ணாதார் என்றும், இவர்கள் காவலாக வைத்து நினைத்துப் பூசை செய்யாதொழிந்தார் என்றும் உரைக்க நின்றது. - (9) தீனர் - |