பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்497

 

இரங்கி வழிபடுவோர். - (10) ஆர்த்த - மதியாது கொதித்து அடாது சொல்லி ஆரவாரித்த. அலறுவித்தார் - அப்போதே அலறும்படி செய்தவர்.

1559. (வி-ரை.) பழையாறை எய்த அகனிற் செல்பொழுதில் - பழையாறைத் தலத்தருகு வந்து சார அதனுள் செல்லும்போது; எய்த - எய்தி என்று செய என்னும் எச்சத்தைச் செய்து என்ற எச்சமாக்கி உரைப்பதுமொன்று.

மையில் - அழியும் தன்மையுள்ள தெய்வத்தைக் கடவுளென்று கொள்ளும் மயக்கம். "செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று, பத்தி செய்மனப் பாறைகட்கு" (அப் - தேவா); "அழியும் பொருளை வட்டித்திங் கழிந்தோம் என்பார்" (தணடி - புரா - 22). தம்மாற்றலால் மறைக்க முடியாத பொருளை மறைப்போ மென்ற மையல் என்பதுமாம்.

வடதளி - பழையாறை வடதளி - தனித் தலம். பழையாறை இதற்குத் தென்மேற்குப் பாகத்தில் 1 நாழிகை யளவிலும், பழையாறை மேற்றளி அதினின்று வடமேற்காக 2 நாழிகையளவிலும் அடையத்தக்கன. அமர்நீதிநாயனார் புராணத் திறுதியில் பக்கம் 688-ல் தலவிசேடக் குறிப்புக்கள் பார்க்க.

கண்ட ஆற்றால்...எனக் கேட்டு - கண்ட ஆற்றால் - தமது திருவுள்ளக் குறிப்பினிற் கண்டபடியே. எனக் கேட்டு - என்று அருகு நின்றார்களும் சொல்லக் கேட்டு. நாயனார் தொழுதருளக் கண்டு பக்கத்திருந்தவர்கள் சொல்லக் கேட்டு
என்றுரைப்பாருமுண்டு.

சிவனாரைக் கைகள் கூப்பித் தொழுகருள - தூலலிங்கமாகிய விமானத்தைச் சிவனாகவே கண்டு நாயனார் கைகூப்பித் தொழுதனர் என்க. சிவனாரை - விமானமாகிய தூலலிங்கத்தை.

அமணர்கள் தம் பொய்கொள் விமானம் என - அமணர்கள் உண்மையை மறைத்து அதனைத் தம் பள்ளியாகக் காட்டிய பொய்ம்மையை மேற்கொண்டு காட்டும் விமானம் இது என்று அங்கிருந்தோர் சொல்ல.

பொறாத - சமணர் செய்த தீமையைப் பொறுக்கலாற்றாத. புழுங்குதல் - மனம் வெதும்புதல்.

294

1560. (வி-ரை.) அந்த விமானம் தனக்கு அருகா - அந்த - அவ்வாறு அமணர்தம் பொய்கொண்ட.

அருகா - அருகாக. கடைக்குறை - அகலவும் இயலாது அணுகவும் இயலாது அருகே இருந்தனர். சிவனாரது இடமாதலின் உட்புகுந்து நோ தொழாது அகலமாட்டார்; அமணர் பள்ளியாகப் புனைந்திருத்தலின் அணுகி உட்புகவும் மாட்டார்; ஆதலின் அருகாக ஆங்கே ஓரிடத்திருந்தனர் என்க.

இடத்தின் பாங்கு எய்தி - பாங்கு - பக்கம். செம்மை பெற என்ற குறிப்புப்பட நின்றது.

கழல் உன்னி - அமணர் திறத்தினை அழிக்கவேண்டிக் கழலை உன்னிய திறத்தினை மேற்கூறுவார். "திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்" என்றபடி திருவடியை நினைத்துத் தாம் வேண்டுவதனைக் கேட்டுக்கொண்டணர்.

"மந்த அமணர்...பாற்றும்" என்று - இது திருவடியினை எண்ணி நாயனார் செய்து கொண்ட வேண்டுகோள். "வஞ்சம் ஒழித்தருளி. அமணர் திறம்பாற்றும்" - வஞ்சனையை ஒழிப்பதற்காக அமணர் திறத்தை அழிக்க வேண்டினாரே யன்றி மற்றில்லை. அமணர்கள் வஞ்சித்துச் சிவன் கோயிலை மறைத்தல் செய்யாதிருந்தாராயின் நாயனார்க்கு அமணர்களைப்பற்றிய சிந்தனை யெழுந்திராது.