ஆன - சிவாகமங்களில் விதிக்கலான. வழிபாட்டு அர்ச்சனை - உலகம் நல்வழிப் படுதற்காகச் செய்யும் பூசை. பரார்த்த பூசை என்ப. நிபந்தம் - திருமஞ்சனம் திருவமுது முதலிய கட்டளைப் படித்தரங்கள். அமைத்து இறைஞ்ச - "நம்மை அரசு கும்பிடுவான் - அமணர் தம்மை நீக்கிப் போக்கு" (1562) என்று இறைவர் அருளினாராதலின். அரசுகள் கும்பிடுவதன் பொருட்டு அவ்வாறே அமணர்களைப் போக்கியும், ஈசர்க்கு விமானம் ஆக்கியும், வழிபாட் டர்ச்சனைக்கு நிபந்தம் அமைத்தும் அரசன் அதனை அரசுகளுக்கு அறிவிக்கு மாற்றால் அவரை இறைஞ்ச என்பதாம். முன் பாட்டில் "தொண்டர் தம்மை அடிவணங்கி" (1563) என்றது அரசுகளது பெருமை அறிந்தவுடன் அரசன் அபராதத் தீர்வின் பொருட்டுச் செய்த உரிமை வணக்கம். இப்போது இறைஞ்சியது கும்பிட எழுந்தருள்க என்று விண்ணப்பிக்குமாற்றாற் செய்த சிறப்பு வணக்கம். ஞான அரசு - ஞான நிறைந்த - ஞானத்தின் - ஞானம் காட்டும் - என்று பலவாறும் உறைக்க நின்றது. புக்கு - முன்னரும் சிவாலயமேயாயினும் அமணர் தமது பள்ளியாக்கித் தொக்கிருந்தபடியால் பக்கு வணங்கத்தகாமை என்பது குறிப்பு. "நன்றறியா ரமண்பள்ளி நண்ணுகிலேன்" (1323) என்று திலகவதியம்மையார் .கூறியது இங்கு நினைவுகூர்தற் பாலது. இறைஞ்சி - தாம் எண்ணியிருந்தவாறே இறைவரது வண்ணமும் வடிவும் நேரிற் கண்களாற் கண்டு வணங்கி. போற்றுவார் - போற்றுவாராகி; முற்றெச்சம்; போற்றுவார் - விளம்பி என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க. நிரம்ப எல்லாம் - என்பதும் பாடம். 299 1565. (வி-ரை.) "தலையின்.....ஒண்ணுமோ" - இது பதிகத்தின் முதற்குறிப்பும் கருத்துமாம் என்பதனை ஆசிரியர் என்னும் - வாய்மைக் குறுந்தொகைகள் என்றறிவிக்கின்றார். தலையின் மயிரைப்ாறித்து உண்ணும் சாதி - தலைமயிர் பறித்தல் - நின்றுண்ணுதல் முதலியவை அமண குருமார் வழக்கு. சாதி என்ற என்பது இங்கு, அவ்வாறு செய்யும் செய்கையுடைய தொகுதி - குமார் - என்ற பொருளில் வந்தது. "அமண் சாதியை" - என்ற இத்தலத் தேவாரங் காண்க. சாதி - குலம் - என்று கொண்டு முற்காலச் சமணரிடம் சாதிவேற்றுமையில்லை என்றும், இடைக்காலச் சமணரிடம் அது புகுந்துகொண்டதென்றும் இங்கு விசேடவுரை காண்பாரு முண்டு. அது பொருந்தாமை அறிக. சாதி என்ற சொல் கேட்டமாத்திரையில் அதை வெறுப்பதும், அதனுள் சாதிவேற்றுமையும் தீமையுமே காண்பது சில ஆராய்ச்சியாளரின் இயல்பாயிற்று. மயிரைப் பழித்துண்ணும் சாதி யமணர் - என்றது "பறிக்கும் சமண் கையர்" என்ற தேவாரத்திற்கு இங்கு ஆசிரியர் கண்ட வுரை. மறைத்தாலும் நிலையிலாதார் நிலைமையினால் மறைக்க ஒண்ணுமோ? என்றது "உள் நிலையினான் மறைத்தால் மறைக்கொண்ணுமே" என்ற தேவாரத் திற்கு விரிவுரையாம். தேவாரத்துக்கேற்ப, "மறைத்தாலுண் ணிலையிலாதார் நிலைமையினால்" என்று பாடமிருக்கலாமென்று தோன்றுகிறது. நிலையிலர்தார் - உண்மை நிலையில்லாத வஞ்சகர் - பொய்யர். நிலைமையினால் - தமது பொய்ந் நிலைமையின் துணைகொண்டு. என்னும் - என்ற கருத்துடைய. குறுந்தொகைகள் - பதிகப் பாட்டுக்கள் ஒவ்வொன்றும் குறுந்தொகைப் பாட்டுக்கள். குறுந்தொகை என்பது யாப்பமைதி. |