யின்றி நின்று கையில் இடுசோறு உண்ணுதலும் அமண குருமார்களின் இழிவழக்குக்களுளொன்று.. கள்ளர் - காமமாதிகளை உள்வைத்துப் புறம்பொழுகுவோர். கடிந்த - சினந்து நீக்கிய. அமணே - நக்க உருவத்துடன். கருப்பு ஊறல் - கரும்புச் சாறு. - (6) சாதி - தொழில்பற்றி குறிப்பு. முன் குலம் (2) என்றதுமிது. இதனையே "சாதி யமணர்" (1565) என்று எடுத்தாண்டனர் ஆசிரியர். கெடுமாசெய்த கெடுத்த - அழித்த. ஆ - ஆறு என்பதன் கடைக்குறை. - (7) திரள் - திரை கவளம் - திணிக்கும் - திரளாக உருட்டி அலைபோல ஒன்றன்மே லொன்றாகக் கொள்ளும் உணவுக் கவளங்களை வாயினுள் வலியப் பெய்துகொள்ளும். சமண குருமார் இழிவழிக்கு. பிரட்டர் - வஞ்சகர். பிரித்த - வஞ்சனையாற் குழுமிய அவரை அகலப் போக்கிய. தெருட்டர் - தம் உண்மையை உலகுக்கு அறிவித்தவர். - (8) ஒது இனத்து எழத்து அஞ்சு - ஒக வேண்டியதாகிய திருவைந்தெழுந்து. வேது - பேதம் செய்வது, பிணங்குவது. - (9) வாய் - வாய்த்த சிவனுக்கு ஆளாந் தன்மையில் உயிர்களைச் செலுத்தும் சிறப்புத் தன்மை வாய்த்த. இருந்தமிழ் - பெருமையுடைய தமிழ். பெருமையாவது வேறெம் மொழிக்கு மில்லாத சிறப்புத்தன்மை. "ஞாள மளந்த மேன்மைத் தெய்வத் தமிழ்" (970) என்றதும், ஆண்டுரைத் தவையும், பிறவும் காண்க. தமிழே - ஏகாரம் தேற்றம். ஆளுறா ஆயிரம் சமணும் அழிவாக்கினான் - ஆளுறா - என்றதனால் ஆட்படு நெறியில் வாராமையால் என்று அழிவாக்கினமைக்குக் காரணங் காட்டும் வகையால் உடம்பொடு புணர்த்தி ஒதினார். தமிழை நாயனார் சிவனுக்கு ஆளுறும் தமிழ் என்றும், அவ்வாறு ஆளுறாத் தமிழ் என்றும் இரண்டு கூறாகப்படுத்தி, ஆட்படு நெறியில் வாராத தமிழ் அழிந்து படுதற்பாலதே யன்றிப் பேணற்பாலதன்று என்ற குறிப்புப்பட அருளினார். சமணர்கள் தமிழ்க்கலை வல்லவர்களே யாயினும், ஆட்படு நெறியின் வாராமை மட்டுமன்றி, அந்நன்னெறியி னின்றும் பிணங்கி மாறுபட்டு அதனை அடைக்கும் வழியினின்றதோடு, அந்நெறி நிற்பார்க்கு இடையூறும் செய்தனர்; ஆதலின் வெறும் இருந் தமிழர் என்ற அம்மட்டே கொண்டு அவர் பேணத்தக்கவரல்லர் என்றதெல்லாம் இங்குக் கருதத் தக்கன. தமிழ் மொழி என்ற அம்மட்டிற் பெருமை பேணும் ஆராய்ச்சியாளர் இதனைத் தெளிதல் நலந்தரும்,. ஆயிரம் சமண் - அந்தப் பள்ளியில் அமைந்த ஆயிரவராகிய சமணக் குருமார் கூட்டம். - (10) திருத்தன் - திருத்தம் செய்வோன். இங்கு இறைவர் திருத்திச் செய்த திருஅருளின் குறிப்பு. தல விசேடம் :- பழையாறை வடதளி - பழையாறை - பழையாறையினின்றும் வடகிழக்காக 1 சாழிகையளவில் உள்ள தனித் தலம். இதன் வடமேற்கே 2 நாழிகையளவில் உள்ள ஆறைமேற்றளி என்பது மற்றொரு தனித்தலம். அமர்நீதி நாயனார் புராணத்திறுதியில் தலவிசேடம் பார்க்க. 1566. (வி-ரை.) பொன்னியினில் இரண்டு கரையும்....இடங்கள் - பழையாறை வடதளியினின்றும் காவிரியாறு வருமவழியே திவானைக்கா வரையும் மேற்கு நோக்கிச் சொன்றால் அதன் இருகரையிலும் பல சிவதலங்கள் உள்ளன அவை யெல்லாம் ஈண்டுக் கருதத் தக்கன. அவையாவன - திருப்பட்டீச்சரம், ஆறை மேற்றளி, திருவலஞ்சுழி, திருப்பூந்துருத்தி, திருக்கண்டியூர், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, தென்குடி திட்டை, திருப்புள்ளமங்கை, திருச்சக்கரப்பள்ளி, திருவையாறு, திருநெய்த்தானம், திருஆலம்பொழில், திருப்பெரும்புலியூர், திருமழபாடி, திருப்பழுவூர், திருக்கானூர், திரு அன்பிலாலந்துறை, திருப்பாற்றுறை முதலியன. |