கருவெலா மாயவன்" (பிள் - தேவா - தென்குடித்திட்டை - 3). ஓசையாகி வருவான் - நாதமாய் விரிந்து வெளிப்படுபவன். பரம்பைக்குடி - ஊரும், ஆலம் பொழில் கோயிலும் போலும். - (3) உருமூன்று - சிவன் சதாசிவன் மகேசன்; தடத்த வடிவு மூன்று. உணர்வின் கண் ஒன்று - தத்துவ நிலை எண்ணும்போது முதற் கடவுளாகிய ஒருவன். ஓங்கார மெய்ப்பொருள் - பிரணவத்தால் குறிக்கப்படுபவன். கருஈன்ற எம் களவு - பிறவிக்குக் காரணமாகிய உயிர்களது ஆணவ வலிமை. அள்ளூறுதல் - உள்ளிருந்து மிக ஊறி வெளிப்படுதல். திரு - முத்தித்திரு. - (4) வாரம் - அன்பு. - (6) விரிந்தான் - குவிந்தான் - உலகத் தோற்றமும் ஒடுக்கமும். "விரிந்தனை; குவிந்தனை; விழுங்குயி ருமிழ்ந்தனை" (பிள் - தேவா - புறம்பயம - இந்தளம் - 3). பிறப்போடு இறப்பாகி - பிறப்பும் இறப்பும் அருளும் தலைவனாகி. பலவாய்ப் பெருகுதலாலும், இறப்புக்குக் காரணமாய் வருதலாலும் வியன் பிறப்பு என்றார். "தோற்ற முண்டேல் மரண முண்டு" (நம்பி - தேவா) - (7) அழுக்கின் - அழுக்கினின்றும்; புகுவான் - (தன்பாற்) புகும்பொருட்டு; புகுவான் - வானீற்று வினையெச்சம்; அழுக்கு - மலம். சோதித்தல் - தூய்மை செய்தல். "அத்துவா சோதனை", "புறம்புறந் திரிந்த செல்வமே" (திருவா) சொல்லாதான் - அருளாதவன், "வஞ்சன்" (4); செல்லாத நெறி - அருள்பெறாத ஏனையோர் செல்ல மாட்டாச் சிவநெறி. "செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானை." - (9) பொய்யிலான் - பொய்யாது உறுதியாக அருள்பவன். தலவிசேடம் :- திருவாலம்பொழில் - காவிரிக்குத் தென்கரை 10-வது தலம். வசுக்கள் பூசித்து வழிபட்ட தலம். மேற்கு நோக்கிய சந்நிதி. சுவாமி - ஆத்மநார்; அம்மை - ஞானாம்பிகை; தீர்த்தம் - காவிரி; மரம் - ஆல்; பதிகம் - 1. தஞ்சாவூர் நிலையத்தினின்றும் வடக்கே கற்சாலைவழி 6 நாழிகை யளவில் உள்ளது திருக்கண்டியூர் வீரட்டம்; அதினின்றும் மேற்கே மட்சாலைவழி இரண்டு நாழிகையளவில் திருப்பூந்துருத்தியை யடைந்து, அங்கிருந்து மேற்கே ஒரு நாழிகை யளவில் இதனை அடையலாம்.1 திருக்கானூர் திருச்சிற்றம்பலம் | திருக்குறுந்தொகை |
| திருவி னாதனுஞ் செம்மலர் மேலுறை, யுருவ னாயுல கத்தி னுயிர்க்கெலாங், கருவ னாகி முளைத்தவன். கானூரிம், பரம னாய பரஞ்சுடர் காணமினே. 1 தாயத் தார்தமர் நன்னிதி யென்னுமிம், மாயத் தேகிடந் திட்டு மயங்கிடேல்; காயத் தேயுளன் கானூர் முளையினை, வாயத் தால்வணங் கீர்வினை மாயுமே. 3 குறியி னின்றுண்டு கூறையி லாச்சமண், நெறியை விட்டு நிறைகழல் பற்றினேன்; அறிய லுற்றிரேற் கானூர் முளையவன், செறிவு செய்திட் டிருப்பதென்சிந்தையே. |
திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- கானூரிறைவா உலகத்தினுயிர்க்கெலாங் கருவனாகி முளைத்தவர்; சமணைவிட்டு அவர் கழல் பற்றினேன்; அவர் இருப்பது என்சிந்தை; பொத்தலாக்கையாகிய உடலையும், பெண்டிர் மக்கள் முதலிய உயிர்ச்சார்புகளையும் நன்னிதி முதலிய பொருட்சார்புகளையும் பொருளெனக் கண்டு 1. | இத்தலத்தருகில் இருந்த வைணவதலத்துக் குழுமிய வைணவர்கள் இங்கு வாகீசரது உழவாரப்பணிக் கிடையூறாகத் தமது பரிகலங்களையிட்டு வந்தனர் என்றும், காவிரி பெருகி அவ்வைணவத்தலத்தைப் பெயர்த்து இப்போது சுந்தரப் பெருமாள் கோயில் உள்ள இடத்தில் இட்டது என்றும் ஒரு கர்ண பரம்பரை வழக்கு உண்டு. |
|