மயங்காது அவரை வணங்கிட வினை மாயும்; துயரம் தீரும் அவரை அடைதலே கருமமாவது. அவர் கல்வியும் ஞானமும் கலைப்பொருளும் ஆவர். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) கருவனாகி முளைத்தவன் - இத்தலத்துச் சுவாமி பெயர் முளை; (கன்றாப்பூர் நடுதறி என்பதுபோல); அதன் பொருள் விரித்தவாறு, உலகங்கள் யாவும் முளைத்தற்குக் காரணமானவர். "கானூர் முளை" (2, 3, 4); "கானூர் முளைத்தவன்" (7-8); கானூர் முளைத்த கரும்பினை" (பாபநாசப்பதிகம் 2); "முளைத்த கரும்பு" என்ற கருத்தை நம்பிகள் "கானூர்க் கட்டியே" என்றருளினர். (ஊர்த் தொகை - 5). - (2) புண்டரீகப் பொதும்பில் ஒதுங்கியே - புண்டரீகம் - சிவன் பாதமலர். "முக்கணான் பாத நீழல் உள்ளிடை மறைந்து நின்று" (பொது நேரிசை). பொதும்பு - நிழற்காடு. - (3) வாயம் - அன்பு. - (4) நாயனார் சரித அகச்சான்று. - (5) அடைதலே கருமம் என்று பிரிநிலை ஏகாரம் பிரித்துக் கூட்டுக. தலவிசேடம் :- திருக்கானூர் - காவிரிக்கு வடகரையில் 56-வது தலம். அம்மை இங்குச் சிவயோகத்தில் அமர்ந்தபோது இறைவர் அழற்பிழம்பாகக் காட்சிதந்தருளினர் என்பர். சுவாமி - செம்மேனிநாதர்; முளைநாதர்; அம்மை - சிவயோகநாயகி; பதிகம் - 2. இது பூதலூர் என்ற இருப்பப்பாதை நிலையத்தினின்றும் வடக்கே கற்சாலை வழி 5 நாழிகை யளவில் உள்ள திருக்காட்டுப்பள்ளியினின்றும் வடக்கே விஷ்ணுபேட்டை மட்சாலை வழியில் 2 நாழிகை யளவில் அடையத்தக்கது. திருஅன்பிலாலந்துறை திருச்சிற்றம்பலம் | திருக்குறுந்தொகை |
| வானஞ் சேர்மதி சூடிய மைந்தனை, நீநெஞ் சேகெடு வாய்நினை கிற்கிலை யானஞ் சாடியை யன்பிலா லந்துறைக், கோனெஞ் செல்வனைக் கூறிட கிற்றியே. வெள்ள முள்ள விரிசடை நந்தியைக், கள்ள முள்ள மனத்தவர் காண்கிலார்; அள்ள லார்வய லன்பிலா லந்துறை, யுள்ள வாறறி யார்சில ரூமரே. |
6 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- நெஞ்சே! அன்பிலாலந்துறை இறைவரைக் கூறு; அவரை நினைந்தார் அறிந்தார்களே அறியார் சிலர் ஊமர்; அவரை ஏத்துவார் மெய்யர்; அவர் நம்மை அறிவர்; அவரை வலங்கொள்வாரை வானோர் வலங்கொள்வர். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (3) அள்ளூறிய அன்பு - உள்நிறைந்து மிசை ஊற்றெடுத்து வழியும் அன்பு. - (6) வெள்ளம் - கங்கை. - (8) நுணங்கு நூல் - முப்புரி நூல்; நுண்ணிய உண்ைமையைக் கொண்ட வேதம் என்றலுமாம். - (10) மலங்க வருந்த. வலங் கொள்வாரை வானோர் வலங்கொள்வர் - "தொழுத பின்னைத், தொழப் படுந் தேவர்தம் மாற்றொழுவிக்குந்தன் றொண்டரையே" (திருவா). தலவிசேடம் :- திருஅன்பிலாலந்துறை - காவிரிக்கு வடகரையில் 57-வது தலம். அன்பின் என்று வழங்கப்படும். பிரமதேவர், வாகீசமுனிவர்; முதலியோர் பூசித்த தலம். சுவாமி - சத்தியவாகீசர்; அம்மை - சௌந்தரிய நாயகி; பதிகம் - 2. பூதலூர் என்ற இருப்புப்பாதை நிலயத்தின் வழி திருக்காட்டுப் பள்ளியிலிருந்து மேற்கே காவிரியின் வடகரை மட்சாலை வழி 5 நாழிகை யளவில் உள்ள கோயிலடியினின்றும் கொள்ளிடத்தைப் பரிசினாற் கடந்து வடகரையில் மட்சாலையில் 2 நாழிகையில் இதனை அடைவது ஒருவழி; லால்குடி நிலையத்தினின்றும் வடக்கில் கற்சாலை வழி 5 நாழிகையளவில் அடைவது மற்றொரு வழி. |