திருவேதிகுடி திருச்சிற்றம்பலம் | திருவிருத்தம் |
| கையது காலெறி நாகங் கனல்விடு சூலமது வெய்யது வேலைநஞ் சுண்ட விரிசடை விண்ணவர்கோன் செய்யினி னீல மணங்கம ழுந்திரு வேதிகுடி யையனை யாரா வமுதினை நாமடைந் தாடுதுமே. |
1 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- திருவேதிகுடி யிறைவர் ஆரா அமுது; அவரை நாம் அடைந்து ஆடுதும். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) கையது...சூலமது - எரி - நாகம் - சூலம் - இவை கையில் ஏந்தியவர். ஆரா அமுது - உண்ணத் தெவிட்டாத அமுது போல்பவர். அமுது - உவமையாகுபெயர். இறைவர் இத்தலத்தில் ஆரா அமுது நாதர் எனப் பெயர் பெறுவர். ஆளுடைய பிள்ளையாரது இத்தலத்துப் பதிகத்துள் "துற்பரிய நஞ்சமுத மாகமு னயின்றவர்" (2) என்றது இக்குறிப்புணர்த்துவது. இப்பெயாரால் இப்பதிக முழுமையும் போற்றுதல் குறிக்க. - (2) பொய்த்தலை - இறந்துபட்ட பிரமன் தலை. பொய் - பொய்த்தன; அழிந்துபட்ட என்ற பொருளில் வந்தது. - (6) எண்ணும் எழுத்தும் குறிப்பும் அறிபவர் தாம் மொழிய - எண் - மனம் நினைத்தல்; எழுத்து - வாய் துதித்தல்; குறி - கை தொழுதல் என்ற குறிப்புடன் நின்றன. "குறிக ளும்மடை யாளமும் கோயிலும்" (தேவா). - (8) அன்பர்களோடு அடைந்து - "அன்பரொடு மரீஇ" (அணைந்தோர் தன்மை - சிவஞான போதம் - 12), "மேவினோ மவனடியா ரடியா ரோடு மேன்மேலுங் குடைந்தாடி யாடு வோமே" (திருவா - சத - 24). - (9) மறைவிரி - மறைகளைத் தோற்றுவித்த. தலவிசேடம் :- திருவேதிகுடி - காவிரிக்குத் தென்கரையில் 14-வது தலம். வேதங்கள் பூசித்த தலங்களுள் ஒன்று என்ப. இங்கு விநாயகர் வேத விநாயகர் எனப் பெறுவர். வேதங்களைத் தோற்றுவித்தலால் வேதி எனப்படும் இறைவரது இடம் என்பதும் பொருளாம். மறைவிரி நாவன் என்றது நாயனார் பதிகம். வேதங்களைத் தோற்றுவித்து ஆன்மாக்களது பிறவி யறுத்தலால் இறைவர் ஆரா அமுதுநாதர் எனப் பெறுவர் என்பது நாயனார் பதிகக் கருத்து. திருவையாறுள்ளிட்ட ஏழு தலங்களுள் ஒன்று. சுவாமி - வேத புரீசுவரர்; ஆராவமுது நாதர்; அம்மை - மங்கையர்க்கரசி; அம்மை பெயர் ஆளுடைய பிள்ளையார் பதிகத்து (2), (6) பாட்டுக்களுட் குறிக்கப்பட்டது. பதிகம்-2. இது திருக்கண்டியூரினின்றும் கிழக்கே மட்சாலை வழி 1 நாழிகை யளவில் அடைத்தக்கது. திருக்கண்டியூர் திருச்சிற்றம்பலம் | திருவிருத்தம் |
| வானவர் தானவர் வைகன் மலர்கொணர்ந் திட்டிறைஞ்சித் தானவர் மால்பிர மன்னறி யாத தகைமையினான் ஆனவ னாதி புராணனன் றோடிய பன்றியெய்த கானவ னைக்கண்டி யூரண்ட வானவர் தொழுகின்றதே. |
1 |