| பண்டங் கறுத்ததொர் கையுடை யான்படைத் தான்றலையை யுண்டங் கறுத்தது மூரொடு நாடவை தானறியும் கண்டங் கறுத்த மிடறுடை யான்கண்டி யூரிருந்த தொண்டர் பிரானைக்கண் டீரண்ட வாணர் தொழுகின்றதே. |
3 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- மால் பிரமன் அறியாத தகைமையினான், ஆதிபுராணன், தழல்போலுருவன், படைத்தான் றலையை யறுத்தவன், யானையுரித்த பிரான், காலனை அட்டவன், காமனைச சுட்டவன், புரமெரித்தவன் என்றித் தகைமைகளா லறியப்படும் இறைவர் கண்டியூரில் எழுந்தருளியுள்ளார்; அவரை அண்டவாணர் தொழுகின்றனர். அவர் அடியேனை ஆட்கொண்டவர்; (ஆதலின்) தீவினை மாய்ந்தன; நோய்கள் மங்கின; பாவம் தேய்ந்தன. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) கானவன் - வேட உருவத்தோடு வந்தவன். - (3) இத்தலம் பிரமன் தலையைக் கிள்ளிய வீரம் நிகழ்ந்த இடம். சிவபெருமானது வீரங்கள் நிகழ்ந்த தலங்கள் எட்டனுள் ஒன்று. கண்டியூர் வீரட்டம் என்பது இக்கோயில் "பூமன் சிரங் கண்டி". படைத்தான் - உலகு படைக்கும் பிரமன்; ஊரொடு நாடவை தான் அறியும் - உலகறிந்த செய்தி. தான் - அசை. - (4) கொடியு முற்று அவ்விடையேறி - கொடியாக ஏந்திய அந்த விடையினையே ஏறி. கடிய முற்று அவ்வினை - என்க. தொண்டர் இல்லை - தொண்டர்க்கு இணையில்லை. - (6) போர் - போர்வல்ல. பனை - பனைபோன்ற கையுடைய. - (7) கட்டு அவை - கட்டப்பட்ட மூன்று மதில் சூழ் நகரங்களாகிய புரங்கள். - (8) பொதியும் - முடிக்கும். தலவிசேடம் :- திருக்கண்டியூர் - காவிரிக்குத் தென்கரையில் 12-வது தலம். அட்டவீரட்டங்களுள் ஒன்று. திருவையாறுள்ளிட்ட சத்தத் தானங்களுள் ஒன்று. பிரமன் சிரந்தடித்த வீரம் நிகழ்ந்த இடம். ஆளுடைய பிள்ளையார் பதிகம் 6-வது பாட்டும், மேற்குறித்தபடி நாயனார் பதிகத்து 3-ம் பாட்டும் இதனை எடுத்துப் போற்றுவன. சதாநந்தர் பூசித்த தலம். அடியார்களை நோக்கிச் சிவனருளின வண்ணங்கள் கேட்டு மகிழ்ந்த வினைவுரையாகப் ("அருத்த னைத்திற மடியர் பான்மிகக் கேட்டு கந்த வினாவுரை") பதிகம்பாடி ஆளுடைய பிள்ளையார் சிவபரத்துவத்தை உலகுக்கு அறிவுறுத்திய தலம். மேற்கு நோக்கிய சந்நிதி. சூரிய பூசை நிகழும் தலங்களுள் ஒன்று. சுவாமி - வீரட்டேசுவரர்; அம்மை - மங்களநாயகி; பதிகம் - 2. இது தஞ்சாவூர் நிலையத்தினின்றும் திருவையாற்றுப் பாதையில் கற்சாலை வழி 6 நாழிகையளவில் அடையத் தக்கது. மேலைத்திருக்காட்டுப்பள்ளி திருச்சிற்றம்பலம் | திருக்குறுந்தொகை |
| மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை வீர்க்கெலாங், கேட்டுப் பள்ளிகண் டீர்கெடு வீரிது வோட்டுப் பள்ளிவிட் டோட லுறாமுனங் காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே. மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே, நாட்டுப் பொய்யெலாம் பேசிடு நாணிலீர்! கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே, காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே. |
திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- செல்வம் - மனை - வாழ்க்கை - யாக்கை - முதலிய எவையும் அழிந்துபடும்; அழியும் பொருள்களைத் தேடிப் பொய்யெலாம் பேசி அலை |