பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்509

 

வதை விட்டு உலகீர்! நும்உயிர் போகும் முன்னமே காட்டுப்பள்ளியுளான் கழல் சேர்மின்! அவர் உறுதுணையாவர்; அவரை அடைந்தார் வினை நாசமே; ஆதலின் அவரைக் கண்டு உய்ம்மின்!

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) மாட்டுப்பள்ளி - செல்வமுடைய இருக்கைகள். ஓட்டுப்பள்ளி - உடல். - (2) மாடு - செல்வம். - (4) அருத்தம் - செல்வம். - (6) துடும்பல் - இருத்தல். கடம்பன் - முருகப்பெருமான். - உடம்பினார் - இகழ்ச்சி குறித்த பன்மை. - (7) மெய்யின்...மூடுவார் - பெண்கள். - (8) காலையே - உடலில் உயிர் உள்ளபோதே. - (9) இன்றுளார் நாளையில்லை எனும் பொருள் - யாக்கை நிலையாதெனும் பழமொழியின் உண்மை. - (10) கண்ணுளார் - அறிவுடையோர்; கற்றோர். "கற்றவர்கள்" (5).

தலவிசேடம் :- மேலைத்திருக்காட்டுப்பள்ளி - காவிரிக்குத் தென்கரை 9-வது தலம். உறையூரில் அரசாண்ட பராந்தக சோழன் சிவபெருமானுக்குரிய செவ்வந்திப் பூவைத் தனது மனைவிக்கு ஆக்கக் கவர்ந்து வரச்செய்து கொடுக்க, அது சிவாபராதமென்று அஞ்சி மனைவி அதனை அனுபவியாது விடுத்தனள். அரசன் செய்த சிவாபராதத்தினான் மண்மாரி பெய்து நகரம் அழிந்தது. சிவாபராதத்துக் கஞ்சிய மனைவி அதினின்றும் தப்பி வந்தனளாக அவளுக்கு அருளிய தலம். நாயனாரது பதிகத்துட் குறிப்பித்த செல்வம் - மனைவாழ்க்கை - ஆக்கை முதலியவற்றின் நிலையாமை இச்சரிதக் குறிப்புத் தருவன. சுவாமி - தீயாடியப்பர்; அம்மை - வார்கொண்ட முலையாள்; பதிகம் - 2.

பூதலூர் என்னும் இருப்புப்பாதை நிலையத்தினின்றும் வடக்கே கற்சாலை வழி 5 நாழிகையளவில் காவிரியிலிருந்து குடமுருட்டியாறு பிரியும் இடத்தில், குடமுருட்டியாற்றுக்குத் தென்கரையில் உள்ளது. குறிப்பு :- காவிரிக்கு வடகரையில் 12-வது தலமாகத் திருவெண்காட்டின் மேற்கில் 1 நாழிகையில் உள்ள கீழைத் திருக்காட்டுப் பள்ளியினின்றும் இது பிரித்தரியத் தக்கது.

1567.

சிலந்திக் கருளுங் கழல்வணங்கிச் செஞ்சொன் மாலை பலபாடி
யிலங்கு சடையா ரெறும்பியூர் மலையு மிறைஞ்சிப் பாடியபின்
மலர்ந்த சோதித் திருச்சிராப் பள்ளி மலையுங், கற்குடியும்
நலங்கொள் செல்வத் திருப்பராய்த் துறையுந் தொழுவா னண்ணினார்,


1568.

மற்றப் பதிகண் முதலான மருங்குள் ளனவுங் கைதொழுது,
பொற்புற் றமைந்த திருப்பணிகள் செய்து பதிகங் கொடுபோற்றி,
யுற்ற வருளாற் காவிரியை யேறி பொன்னார் புரமெரியச்
செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீ லியினைச் சென்று சேர்கின்றார்,


1569.

வழிபோம் பொழுது மிகவிளைத்து வருத்த முற,நீர் வேட்கையொடும்
அழிவாம் பசிவந் தணைந்திடவு மதற்குச் சித்த மலையாதே
மொழிவேந் தருமுன் னெழுந்தருள, முருகார் சோலைப் பைஞ்ஞீலி
விழியேந் தியநெற் றியினார்தந தொண்டர் வருத்த மீட்பாராய்.

304

1570.

காவங் குளமு முன்சமைத்துக் காட்டி வழிபோங் கருத்தினால்
மேவுந் திருநீற் றந்தணராய் விரும்பும் பொதிசோ றுங்கொண்டு
நாவின் றனிமன் னவர்க்கெதிரே நண்ணியிருந்தார்; விண்ணின்மேற்
றாவும் புள்ளு மண்கிழிக்குந் தனியே னமுங்காண் பரியவர்தாம்,