பக்கம் எண் :


510திருத்தொண்டர் புராணம்

 

1571.

அங்க ணிருந்த மறையவர்பா லாண்ட வரசு மெழுந்தருள
வெங்கண் விடைவே தியர்நோக்கி, "மிகவும் வழிவந் திளைத்திருந்தீ
ரிங்கென் பாலே பொதிசோறுண்; டிதனை யுண்டு, தண்ணீரிப்
பொங்கு குளத்திற் குடித்திளைப்புப் போக்கிப் போவீர்" எனப் புகன்றார்;


11572.

 நண்ணுந் திருநா வுக்கரசர் நம்ப ரருளென், றறிந்தார்போல்
'உண்ணு'மென்று திருமறைமோ ருரைத்துப் பொதிசோ றளித்தலுமே,
 எண்ண நினையா தெதிர்வாங்கி, யினிதா வமுது செய், தினிய
 தண்ணீரமுது செய்தருளித், தூய்மை செய்து, தளர்வொழிந்தார்.

1567. (இ-ள்.) சிலந்திக்கு.....பலபாடி - திருவானைக்காவில் சிலந்திக்கு அருள்செய்த பெருமானுடைய திருவடிகளை வணங்கிச் செஞ்சொன்மாலைத் திருப்பதிகங்கள் பலவற்றையும் பாடி; இலங்கு...பின் - விளங்கும் சடையினையுடைய சிவபெருமான் எழுந்தருளிய திருவெறும்பியூர் மலையினையும் பணிந்து திருப்பதிகம் பாடிய பின்னர்; மலர்ந்த....நண்ணினார் - விரிந்த சோதியையுடைய திருச்சிராப்பள்ளி மலையினையும், திருக்கற்குடி மலையினையும், நலம் கொள்ளும் செல்வத் திருப்பராய்த்துறையினையும் தொழும்பொருட்டுச் சேர்ந்தாராகி.

302

1568. (இ-ள்.) வெளிப்படை. மற்று அந்தத்தலங்கள் முதலாக அருகாக உள்ள பிற தலங்களையும் தொழுது, அழகு பொருந்த அமைந்த கைத்திருப்பணிகளைச் செய்து, திருப்பதிகம் கொண்டு துதித்துப் பொருந்திய திருவருளினால் காவிரியாற்றைக் கடந்து ஏறிச்சென்று. திரிபுரங்கள் எரியும்படி அழித்த சிவபெருமான் எழுந்தருளிய திருப்பைஞ்ஞீலியைச் சென்று சேர்கின்ற நாயனார்,

1569. (இ-ள்.) வெளிப்படை. வழியிலே செல்லும்போது மிகவும் இளைப்பையடைந்து, வருத்தமுற நிர்வேட்கையுடனே அழிவு செய்யும் பசிவந்து சேர்ந்தும் அதற்கு மனம் அலையாமலே, வாகீசரும் முன்னோக்கி எழுந்தருள, மணமுடைய சோலைகளையுடைய திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளிய நெற்றியில் பொருந்திய கண்ணினையுடைய பெருமானார் தமது தொண்டருடைய வருத்தத்தை நீக்குவாராய்,

304

1570. (இ-ள்.) விண்ணின்மேல்....தாம் - ஆகாயத்தில் பறக்கும் அன்னமும், மண்கிளைக்கும் ஒப்பற்ற பன்றியுமாகிய பிரம விட்டுணுக்களால் காண அரியவராகிய அப்பெருமான்தாமே; காவும்....சமைத்து - ஒரு சோலையும் ஒரு குளத்தினையும் உண்டாக்கி; காட்டி வழி....அந்தணராய் - வழிகாட்டிப் போகும் கருத்துடையராகிப் பொருந்தும் திருநீற்றினையுடைய ஓர் அந்தணராகி; விரும்பும்....இருந்தார் - விரும்பும் பொதி சோற்றையும் உடன்கொண்டு, திருநாவுக்கரசர் வரும்வழி எதிரில் பொருந்தி வீற்றிருந்தனராக,

305

1571. (இ-ள்.) அங்கண்.....எழுந்தருள - அவ்வாறு அங்கு இருந்த அந்தணரிடத்து ஆளுடைய அரசுகளும் எழுந்தருள; வெங்கண் விடை வேதியர் நோக்கி; வெவ்விய கண்ணையுடைய விடையினை மேல்கொண்ட வேதியர் அவரை நோக்கி; "வழிவந்து மிகவும் இளைத்திருந்தீர்!" - "வழிவந்த வருத்தத்தினால் நீர் மிகவும் இளைப்படைந்தீர்" ; "இங்கு.....போவீர்" எனப் புகன்றார் - "இங்கு என்னிடத்தில் பொதி சோறுண்டு; இதனை உண்டும், இந்தப் பொங்கு குளத்தில் தண்ணீர் குடித்தும் இளைப்பை மாற்றிக்கொண்டு போவீராக" என்று சொன்னாராகவே,

1572. (இ-ள்.) நண்ணும் திருநாவுக்கரசர் - வந்துசேர்ந்த திருநாவுக்கரசரும்; நம்பர் அருள் என்று - அது இறைவரது திருவருள் என்று கொண்டு; அறிந்தார்போல் உண்ணும் என்று....அளித்தலுமே - முன்னர் அறிமுகமுடையாரைப் போலக் காட்டி "உண்பீராக" என்று சொல்லி வேதியர் பொதி சோற்றினை அளித்தவுடனே; எண்ண நினையாது - மேல் ஏதும் எண்ணமிட்டறிய நினையாதவராகி; எதிர்வாங்கி...தளர்வு ஒழிந்தார் - முன்னே
ஏற்றுக்கொண்டு