பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்511

 

இனிமையாக அமுதுசெய்து இனிய நீரையும் அமுது செய்தருளித் தூய்மையும் செய்து தமது தளர்வினை நிங்கினர்.

307

இந்த ஆறு பாட்டுக்களும் ஒரு பொருண்மேலனவாய்த் தொடர்ந்து ஒரு முடிபிற் பொருள் உரைக்க நின்றன.

1567. (வி-ரை.) சிலந்திக்கு அருளும் கழல் - "ஆனைக்காவின் மருங்கு" (1566) என்று இத்தலத்தின் பெயர் குறித்த ஆசிரியர், அங்கு எழுந்தருளிய இறைவர் சிலந்திக்கும் அருள்பவர் என்றார். யானையும் சிலந்தியும் வழிபட்டமையின் இரண்டற்கும் இங்கு இறைவர் பேறளித்தனர். கோச்செங்கட்சோழ நாயனார் புராணம் பார்க்க. "அரணிலா வெளிய நாவல்" (நேரிசை - சாய்க்காடு - 3), "புலர்ந்ததால் பூவு நீரும்" (மேற்படி - நனிபள்ளி - 2). முதலிய பல தேவாரங்களில் சிலந்தி வழிபட்ட சிறப்பை நாயனார், போற்றி யிருத்தலால் சிலந்திக்கருளும் கழல் என்றார். "போற்றமாட்டாச் சிலந்திக்கும்" என உம்மை தொக்கது.

செஞ்சொன்மாலை பல பாடி - இவை பலவற்றுள் திருக்குறுந்தொகைப் பதிகம் ஒன்றும், திருத்தாண்டகப் பதிகங்களிரண்டுமே கிடைத்துள்ளன.

இலங்கு சடையார் - சடை சிவனது சிறப்படையாளமாதலின் இலங்கு என்றார்.

எறும்பியூர்மலை - எறும்புகள் பூசித்த காரணத்தாற் போந்த பெயர்.

மலர்ந்த சோதித் திருச்சிராப்பள்ளி மலை - சோதி மலர்தலாவது எவ்வுலகும் தனது சிவவொளி பரப்பி நலஞ்செய்தல். சிரா - சிரம். சிரம் - தலைமை என்றதும் குறிப்பு.

கற்குடி - திருக்கற்குடி மலை.

நலம்கொள் செல்வத் திருப்பராய்த்துறை - இம்மை உலகங்களிற் காணும் ஏனைச் செல்வங்கள்போல் அழிந்துபடாததும், தீமை கலவாத நன்மையினையே பயப்பிப்பதும் ஆகிய செல்வம்; சிவநெறியாகிய பெருஞ் செல்வம். நாயனார் பதிகப் பாட்டுக் குறிப்புப் பார்க்க.

தொழுவான் - தொழும் பொருட்டு. நண்ணினார் - நண்ணினாராகி; முற்றெச்சம்.

நண்ணினார் - கைதொழுது - திருப்பணிகள்செய்து - போற்றி - ஏறி - சென்று - சேர்கின்றாராய் (1568) - எழுந்தருள (1569) என்று மேல்வரும் பாட்டுக்களுடன் கூட்டி முடிக்க.

302

திருவானைக்கா

I திருச்சிற்றம்பலம்

திருக்குறுந்தொகை

கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்,
தேனைக் காவியுண் ணார்சில தெண்ணர்கள்,
ஆனைக் காவிலம் மானை யணைகிலார்,
ஊனைக் காவி யுழிதர்வ ரூமரே.

1

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- உடல் முதலிய பற்றுக்களுட் பட்டுச் சிலர் ஆனைக்காவில் அண்ணலை அணைகிலார்; உருகி, நைந்து, உள்கி, கைதொழுது, நைஞ்சு உள் குளிர்ந்து, தன்னை அடைந்து தூமலர் தூவிநின்ற, அழுது "ஈசன்" என்பார்க்கெலாம் அவர் அருள் கொடுத்திடுவர்; நெஞ்சமே! குலநலம் சுற்றங்கள் நாசமாவன; ஆதலின் அவற்றை விட்டு அவரை நேசமாகி நினை.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) காவி - மேலிட்டு, விரும்பி; தெண்ணர் - அறிவிலிகள்; - (2) ஊறல் - சிவானந்த அனுபவம்; பதம் அறிந்து பற்றி என்க. - (3) துன்பம் - உடலாலும், துயர் - மனத்தாலும் நுகரப்படுவன. - (4) வினை காவாய் - தீவினைகள் வாராமலும் வரினும் துன்பஞ் செய்யாமலும் காப்பாய்;