பதிகக் குறிப்பு :- முன் - ஆனைத்தோல் போர்த்த மூர்த்தி, மூவாத சிந்தை - மனம் - வாக்கு என்றிவற்றைத் தன்னானையாக்கி ஏறினான், இறப்பிலான், பிறப்பிலான், ஓங்காரத்துட்பொருள் என்பன முதலாகிய தன்மைகளா லறியப்படுகின்ற செழுநீர்த்திரளாகிய திருவானைக்காவுள் இறைவனை நான் திளைத்து ஆடினேன். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) மூவாத - மாறுபடாத. ஆனை - ஊர்தி. தன்னானை - மனவாக்கினுள்ளானை; ஆப்பண்ணி - எருதைக் காவல்வைத்து என்பாரு முண்டு. செழுநீர்த்திரள் - நீர் இலிங்கம். - (3) ஓங்காரம் - பிரணவம். காரம் - - சாரியை. - (6) பரசு தரபாணி - பரசு - மழு - வைப் பிடித்த கை. மயானம் மன்னும் நிலையான் - உலக மழிந்தபோதும் தான் அழியாது நிலைத்தவன். - (7) எறிமணியின் ஒசையான் - நாதத்தைத் தோற்றுவிப்பவன். தல விசேடம் :- திருவானைக்கா - காவிரிக்கு வடகரையில் 60-வது தலம். திருவானைக்காவல் என்று வழங்கப்படும். யானை பூசித்துப் பேறுபெற்ற இடமாதலின் இப்பெயர் பெற்றது. இதன் தலமரம் வெண்ணாவல். அதன்கீழ் இறைவர் வெளிப்பட்டு எழுந்தருளியிருத்தலால் இது சம்புகேச்சுரம் (சம்பு - வெண்ணாவல்) எனப்படும். ஐம்பூதத் தலங்களுள் இது அப்புத்தலம். திருத்தாண்டகத்தில் சுவாமியின் பெயர் செழுநீர்த்திரள் என்று இக்காரணம்பற்றிக் கூறியருளியது காண்க. இலிங்கமூலத்தினின்றும் நீர் பெருகி வருவது இன்றுங் காணத்தக்கது. முன்பிறவயில் சிலந்தியாயிருந்த நிலையில், இங்கு இறைவர் திருமேனியில் சருகு விழாதபடி மேற்கட்டிபோல வாய்நூல் வலயமிட்டு வழிபட்டுழி, அதனை யானை அழிக்க, அதனால் யானையின்மேற் பகைமைபூண்டு இறந்தபின், அதுவே கோச்செங்கட் சோழராக முன் பிறவி நினைவுடன்வந்து அவதரித்து, இங்குச் சுவாமிக்கு, யானை உட்புகாதபடி மாடக்கோயில் அதைமத்த எழுபத்தெட்டுக் கோயில்களையும் அக்காரணத்தால் யானை உட்புகாதபடி மாடக் அமைத்து வழிபட்ட வரலாறு அவர் புராணத்துக் காண்க. அவர் இறைவருக்கு அமைத்த எழுபத்தெட்டுக் கோயில்களையும் அக்காரணத்தால் யானை உட்புகாதபடி மாடக் கோயில்களாகவே எடுப்பித்தனர். இது வைணவ ஆழ்வார்கள் பாசுரங்களிலும் போற்றப்பட்டது. உறையூர்ச் சோழர் காவிரியில் நீராடும்போது வீழ்த்திய மணியாரம் இறைவர்க்கு ஆகுக என்று அவர் வேண்ட, அது திருமஞ்சனக் குடத்துட்புக, அதனை இறைவர் அவ்வழியே தமக்கு ஆரமாக ஏற்று அணிந்தருளினர். "தாராமாகிய பொன்னித் தண்டுறையாடி விழுத்து, நீரி னின்றபடி போற்றி நின்மலா கொள்ளென வாங்கே, ஆரங்கொண்ட வெம்மானைக் காவுடை யாதி" என்று இதனைப் போற்றினர் ஆளுடைய நம்பிகள். பாதலம்வரை மிக ஆழ்ந்தும் விண்ணுற வோங்கியுயர்ந்தும் உள்ள இத்தலத்து வெளித் திருமதில், இறைவர் சித்தமூர்த்திகளாக வந்து, கூலியாகத் திருநீற்றைக் கொடுத்து எடுப்பித்த காரணத்தால் திருநீறிட்டான் திருமதில் என்று வழங்கப்பெறும். மதுரையிலும் இதுபோலவே திருமதில் கபாலி மதில் எனப்படுவதும், அதனை ஆளுடையபிள்ளையார் "கபாலிநீள் கடிம்மதிற் கூடலால வாயிலாய்" என்று போற்றுவதும் இங்கு நினைவுகூர்க. திருக்கயிலாயத்தினின்றும் எழுந்தருளி அம்பிகை இங்குத் தவம்செய்து ஞானோப தேசம் பெற்றனர்; ஆதலின் இது ஞானத்தலம் எனவும் வழங்கப்படும். அம்பிக்கைக்கு உபதேசம் செய்தபோது சம்புமுனிவரும் நந்திதேவரும் உடனிருந்து கேட்டனர். சம்புமுனிவர் வரலாறு தலபுராணத்துள்ளது. தலமரமாகிய வெண்ணுவல் ஞானத்தின் குறியாகும். "ஞானச் சார்வாம் வெண்ணாவலுடனே" (கோச் - சோழர் - புரா - 13). இன்றும் அம்பிகை பூசித்ததனை விளக்குத பொருட்டுத் தினமும் அம்பிகை கோயில் அருச்சர் அம்மைபோல வேடந் தரித்துவந்து நண்பகலில் பெருமானைப் பூசிக்கும் காட்சி தரிசிக்க உள்ளது. சம்புமுனிவர், பிரமதேவர், விட்டுணுமூர்த்தி முதலியோர் பூசித்துப் பேறுபெற்ற பெருந்தலம். சுவாமி - நீர்த்திரள்நாதர் - சம்புகேசுவரர்; அம்மையார் - அகிலாண்ட |