பக்கம் எண் :


514திருத்தொண்டர் புராணம்

 

நாயகி; தீர்த்தம் - இந்திரதீர்த்தம், சந்திரதீர்த்தம், (கோச் - சோழர் - புரா - 1). காவிரி - முதலியன; தலமரம் . வெண்ணாவல்; பதிகம் - 7.

குறிப்பு :- மேற்குப்பார்த்த சந்நிதி. பெருமக்கள் மூவராலும் பாடப்பெற்ற திருத்தலம். கோச்செங்கட் சோழர் எடுப்பித்த கல் திருப்பணி விமானம் அருமையாகிய சிற்பங்களமைந்தது; இன்றுங் காணவுள்ளது. அம்பிகை சந்நிதி மிக விளக்கம். பஞ்சப் பிரகார உற்சவம் மிகச்சிறந்த திருவிழா. கச்சியப்ப முனிவர் பாடிய இத்தலபுராணம் சிறந்த நூல்.

இது திருச்சிராப்பள்ளிக் கோட்டை என்ற இருப்புப்பாதை நிலையத்தினின்றும் வடக்கே கற்சாலை வழி 3 நாழிகையளவில் அடையத்தக்கது.

திருஎறும்பியூர்

திருச்சிற்றம்பலம்

திருக்குறுந்தொகை

விரும்பி யூறு விடேன்மட நெஞ்சமே!; கரும்பி னூறல்கண் டாய்கலந் தார்க்கவன்;
இரும்பி னூற லறாததோர் வெண்டலை, யெறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.

1

கறும்பி யூர்வன வைந்துள காயத்திற்; றிறம்பி யூர்வன மற்றும் பலவுள;
குறும்பி யூர்வதோர் கூட்டகத் திட்டெனை, யெறும்பி யூரரன் செய்த வியற்கையே.

இன்ப மும்பிறப் பும்மிறப் பின்னொடு, துன்பமும் முடனே வைத்த சோதியான்,
அன்ப னேயா னேயென் றாற்றுவார்க், கின்பனாகு மெறும்பியூ ரீசனே.

8

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- எறும்பியூர் இறைவர் தம்மைக் கலந்தார்க்குக் கரும்பின் ஊறல் போல்பவர்; இவ்வுடலினுள் என்னை இயற்கையில் இட்டுவைத்து இன்பமும் துன்பமும் பிறப்பிறப்பும் உடன் வைத்தார்; உயிர்க்குயிராயவர்; அன்பனே! அரனே! என்று அரற்றுவார்க்கு இன்பஞ் செய்குவர்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) ஊறு விரும்பிவிடேல் - என்க. கேடுகளை விரும்பி வாணாளை வீணாகவிடாதீர். கரும்பின் ஊறல் - கரும்புச் சாறு. கலந்தார் - உள்கலந்தவர். குறிப்பு :- எறும்பியூர்மலை - இந்த எதுகையிற் பல பாசுரங்கள் அருளியமையாலும், இத்தலத் திருத்தாண்டகத்தின் மகுடச் சிறப்பமைதியாலும் இத்தலத்தில் நாயனார் திருவுள்ளத்திற் பதிந்து மேலெழுந்த சிவானந்தானுபலமாகிய குறிப்பு ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கருத இடமுண்டு. - (2) நறுங்குழன்மடவாள் - இத்தல அம்மை பெயர். 10-வது பாட்டும் பார்க்க. - (3) இன்சுவைமருந்து புரிந்த என்க. - (6) கறும்பி - துன்புறத்தி; கறுவஞ்செய்து. திறம்பி - பிறழ்ந்து. - (8) இன்பமும்..உடனே வைத்த - இவ்வுலகில் பிறப்பிறப்பும் இன்பமும் துன்பமும் ஆகிய இரு வினைப்பயனும் உடனேவைத்தவர். வேறுலகங்களில் இன்பமாத்திரமும் துன்பமாத்திரமும் வைத்தவர்; இரு வினைப்பயனும் இவ்வுலகில் ஒருங்கு எய்தும் என்றபடி. இன்பமும் துன்பமும், இறப்பும் பிறப்பும் உடன் வைத்தல் உயிர்கள் தத்தங் கன்மங்களை நுகர்ந்து கழிக்க வேண்டி இறைவன் செய்யும் விளையாடல். இன்பன் - துன்பங்கலவாத இன்பம் - சிவானந்தானுபவம் - தருபவன்.

II திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டே
         னெண்ணோடு பண்ணிறைந்த கலைக ளாய
தன்னையுந்தன் றிறத்தறியாப் பொறியி லேனைத்
         தன்றிறமு மறிவித்து நெறியுங் காட்டி