பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்521

 

1572. (வி-ரை.) நண்ணும் - வேதியரது எதிரில் நண்ணிய - வந்த - என்றும், அவர் நோக்கியவாறு அந்த அருணோக்கம் நண்ணிய என்றும் உரைக்க நின்றது.

திருநாவுக்கரசர் - "மொழி வேந்தர்" (1569), "நாவின்றனி மன்னவர்" (1570), "ஆண்ட அரசு" (1571), அரசு (1571), அரசு (1573) என இப்பகுதி முழுவதினும் வாக்கின் வேந்தர் என்ற இவ்வொரு தன்மையே பற்றி ஆசிரியர் குறித்தருளிய கருத்து அவரது திருவாக்கின் வளங் கருதியே இறைவர் இவ்வாறு தாமே எழுந்தருளி வந்து செய்தனர் என்ற குறிப்பாகும்.

நம்பர் அருள் என்று அறிந்தார் போல் - எண்ண நினையாது - வாங்கி - "இது சிவபிரான் றிவருவள் என்று பொதுமையாலுணர்ந்த தன்றிச் சிறப்பு வகையாலுணராமையின் அறிந்தார் போல் என்றார்" என்பது ஆறுமுகத் தம்பிரானார் உரைக் குறிப்பு. "இப் பொதிசோறு சிவபெருமான் றிருவருள் கூட்டுவிக்கக் கிடைத்த தென்று பொது வகையா லுணர்ந்தாரே யன்றி, அப்பெருமானே பிராமணத் திருவுருவங் கொண்டெழுந்தருளித் திருவருள் புரிந்தாரென்று சிறப்பு வகையா லுணராமையின் எண்ணி நினையாது என்று கூறினார்" என்பது சுப்பராய நாயகர் உரைக் குறிப்பு. "மறையோர் சோறு அளித்தலும், திருப்பைஞ்ஞீலியையடைந்து சுவாமியைத் தரிசித்து உண்ணுவோ மென்ற எண்ணத்தை நினையாமல், இது நம்பருடைய திருவருள்தான் என்றறிந்தவரைப் போல் அவர் எதிரே வாங்கி இனிமையாக உண்டு; நினையாமல் உண்ணும்படி செய்தது அருள் என்க" என்பது இராமநாதச் செட்டியார் உரைக்குறிப்பு. இக்குறிப்புக்களின் பொருத்தங்கள் ஆராயத்தக்கன.

மறையவர் அறிந்தார்போல, "உண்ணும் என்று பொதிசோறளித்தலும், அருள் என்று (கொண்டு), (மேல் மேலும்) எண்ண நினையாது நாவுக்கரசர், வாங்கி அமுது செய்து" என்று கூட்டியுரைத்துக் கொள்க.

அறிந்தார் - முன்னர் அறிமுகம் - பழக்கம் - உடையவர். போல் - போலக் காட்டி. போல் - அளித்தலும் என்க. அருள் என்று நினைத்தலும், அதனால், மேல் ஊன்றி எண்ண நினையாது என்க. அருள் என்று நினைத்தலும், மேல் எண்ணமிட்டறிய நினையாமையுமாகிய நினைப்பும் மறப்புமாகிய இருநிலைகளும் திருவரணோக் கத்தாலாகியன. "நின்னை யெப்போது நினையவொட் டாய்நீ நினையப்புகின், பின்னையப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்றை நாடுவித்தி" (பொது - தனித் - திரு - விருத்தம் - 4) என்ற நாயனார் திருவாக்கின் கருத்தனை இங்கு வைத்துக் காண்க. "நின்வயின், நினைக்குமா நினைக்கப் பெறுத லனைத்தொன்று, நீயேயருளல் வேண்டும்" (கோயினான் - 32) என்ற திருவாக்கும் இங்குக் கருதற்பாலது.

எண்ண - ஊன்றியறிய என்னும் பொருளில் வந்தது. அவ்வாறு ஊன்றியறியப் புகுந்திருப்பின், அவரது ஞான நாட்டத்தில், நின்றவர் இறைவர்தாம் என்ற உண்மை நிலையைக்கண்டிருப்பர் என்பது. "செவ்விய திருவுள்ளத்தோர் தடுமாற்றம் சேரநோக்கி" (அப்பூதி - புரா - 33), "திருத்தொண்ட ருள்ளத்திற் றடுமாற்ற நம்பர்திரு வருளாலே யறிந்தருளி" (1472), "திருஞான சம்பந்தர், புந்தியினில் வேறொன்று நிகழ்ந்திட" (திருஞான - புரா - 934), "தீதணைவில்லை யேனு மென்மனந் தெருளா தின்ன, மாதலா லவரைக் காணவேண்டும்" (ஏயர்கோன் - புரா - 402) என்று காணும் வரலாறுகள் இங்குச் சிந்திக்கற்பாலன.

அருள் என்று - எதிர் வாங்கி - எல்லாம் திருவருள் விளைவேயாகக் கண்டார்; திருவருளாற்கிடைத்த இதனை மறுக்கலாகா தென்று எதிர் வாங்கினார் என்பது. எதிர் வாங்குதலாவது கொடுத்தமைக் கேற்றவாறே வாங்குதல். "மறைமுனிவர் தரும் பொதிசோ, றின்றுநமக் கெதிர்விலக்க லாகாதென் றிசைந்தருளிய"