பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்531

 

இத்தன்மைப்பற்றி விதந்து கூறினார். "அட்டமூர்த்தி யண்ணாமலை" என்று குறுந்தொகைப் பதிகத்தினுள் வற்புறுத்தி ஓதியும் காண்க. ஒளி உருவம் - சத்தியுருவம். "ஒளியா யோங்கி" (சித்தியார் - 2. 1) என்றது காண்க. இத்தலத்துப் பேரொளி யுருவமாய் மிக்கு நின்றமை குறிப்பு. அரவு உமிழ் மணிகொள் சோதி - அரவின் மணியின் சோதிபோல ஒளிவீசும் திருமேனி என்பது. உமிழ் - நாகங்கள் இரவில் தமது மணிகளை உமிழ்ந்து அவற்றின் ஒளியில் உலாவி இரைதேடி வந்து மீளவும் அந்த மணிகளை உட்கொள்வன என்பது கொள்கை. "ஊருமர வம்மொளிகொண் மாமணி யுமிழ்ந்தவை யுலாவிவரலாற், காரிருள் கடிந்துகன கம்மென விளங்கு காளத்திமலையே" - (பிள். சாதாரி - 7). அரவின் மணியின் சோதியுடன் அணியண்ணாமலையின் இலிங்கத்திருமேனி விளங்குதல் கண்கூடு. - (8) அருச்சுனன் பாசுபதம் பெற்றது. மாபாரத வரலாறு. (9) மாலும்...நின்றாய் - தலவரலாறு. வால் உடை விடை - வால் - வெண்மை. வெள்ளிய இடபம். "நரைவெள்ளே றொன்றுடை யானை" (பிள் - குறிஞ்சி . சிராப் - 1).

III திருச்சிற்றம்பலம்

இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை

புக்க ணைந்து புரிந்தல ரிட்டிலர்; நக்க ணைந்து நறுமலர் கொய்திலர்;
சொக்க ணைந்த சுடரொளி வண்ணனை, மிக்குக் காணலுற் றாரங் கிருவரே.

1

இளவெ ழுந்த விருங்குவ ளைம்மலர், பிளவு செய்து பிணைத்தடி யிட்டிலர்;
களவு செய்தொழிற் காமனைக் காய்ந்தவன், அளவு காணலுற் றாரங் கிருவரே.

9

செங்க ணானும் பிரமனுந் தம்முளே, எங்குத் தேடித் திரிந்தவர் காண்கிலார்;
இங்குற் றேனென் றிலிங்கத்தே தோன்றினான், பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே.

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- சிவனைக் காணுதல் வேண்டினால் சரியையாதி சிவநெறியி னின்றாலல்லதுஇயலாது; அவ்வாறு, ஆப்பி நீரோ டலகுகைக் கொண்டிலர் - பூப்பெய் கூடை புனைந்து சுமந்திலர் - நிரம்ப நீர்சுமந்து நெய்யும் பாலும் கொண்டாட்டி நினைந்திலர் - மலர் இண்டை புனைந்திலர் - அட்டாங்கமாக அடி வீழ்ந்திலர் - கண்டி பூண்டிலர் - சங்கம் வாய்விம்ம ஊதிலராகிய பிரமனும் மாலும் சிவனை மேலும் கீழும் அளவு காணலுற்றுக் காண்கிலார்; இறுதியில் அவர்தம் வணக்கம் புண்ணிய மூர்த்தி, தாமே, "இங்குற்றேன்" என்று இலிங்கத்தில் தோன்றினார்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) நக்கணைந்து - மகிழ்வுடன். சொக்கு - அழகு. சுடரொளி வண்ணன் - அழற்பிழம் புருவாகிய சிவன். "அழனிற வண்ணன்" (410). "எரிவண்ணன்" (8). மிக்கு - மேற் சென்று; தருக்கி. "தருக்கினார் சென்று" (5). இருவர் - அயனும் மாலும். - (2) அலரு நீரும் கொண்டு ஆட்டி - புதிய நீரில் மலர்களை இட்டு அது கொண்டு திருமஞ்சனமாட்டி. திலக மண்டலம் - வட்டமாகிய பொட்டு. செலவு - மேலும் கீழும் செல்லும் அளவு. - (3) ஆப்பி நீரோடு அலகு - திருமெழுக்கும் திருவலகும். காப்புக் கொள்ளி - உலகங்களைக் காவல் கொள்ளபவனாகிய. கொள்ளி - கொள்பவன். "இடுபலி கொள்ளியை" (நம்பி - தேவா.) ஒம்பி என்பது எதுகை நோக்கி ஒப்பி என நின்றது. - (4)) பொய்யும் பொக்கமும் போக்கல் - அகத்தூய்மை. சிவநெறியினுள் அகத்தூய்மையோடு புகல் வேண்டுமென்பது. பொக்கம் - வஞ்சகம். "அகந்தூய்மை வாய்மையாற் காணப் படும்" - குறள். - (5) எருக்கு - வெள்ளெருக்கு மலர். "நீரொடு கூவிளமும் வெள்ளெருக்கும்" (பிள் - தேவா.) இண்டை - மாலை. -