பக்கம் எண் :


532திருத்தொண்டர் புராணம்

 

(6) மரங்களேறி மலர் பறித்து இட்டிலர் - பூசைக்காகும் பூக்கள் தாமே பறித்துக் கொணர்தற்பாலன. பறித்துத் திருவடியில் இட்டு. மரங்கள் ஏறி - கடினமாகப் பறிக்கத் தக்க கோட்டுப் பூக்களைச் சொல்லியபடியால் இனம்பற்றி ஏனைய கொடிப்பூ முதலிய மூன்றும் உடன்கொள்க. (240). நிரம்ப நீர் சுமந்து ஆட்டி - குறைவில்லாது நிரம்பிய நீரினால் திருமஞ்சனம் ஆட்டுதல் வேண்டும். "நிறையநீரமைய வாட்டி" (தேவா) "யதேஸ்ட ஜலம் அபிஷிச்ய" (பத்ததி). - (7) அட்டமாங்கங் கிடந்து அடி வீழ்தல் - எட்டு அங்கங்களும் நிலம்தோய வீழ்ந்து வணங்குதல். அட்டாங்க நமக்காரம் என்பர். (272). - (8) வெந்த நீறு - திருநீறும் - கண்டிகையும் சிவசாதனங்கள் சரியையாதி சிவநெறி நிற்பார்க்கு இன்றியமையாது வேண்டப்படுவன. "கண்டி பூண்டு" (10) - அந்தம் - மேலும் கீழும் முடியுமிடம். "அளவு" (9) என்பதுமிது. இளவெழுந்த...பிணைத்து - குவளை மாலை புனையும் வகை. சரியைப் பணியாளர் இதனைக் குறிக்கொள்வாராக - (10) சங்கம் விம்ம வாய் வைத்திலர் - விம்ம - ஓசை மிக. வாய் வைத்தல் - ஊதுதல் - "கோடுவாய் வைத்து" (முருகு); "விருப்போடு வெண்சங்க மூதல் வூரும்" (தேவா - தாண்). கெண்டி - வலிந்து தேடி. - (11) செங்கணானும்..காண்கிலார் - தல வரலாறு. "இங்குற்றேன்" என்று - தேடிக் கண்டிலா இறைவர் தமதருளாற்றாமே வெளிப்படுதல் குறிப்பு. இலிங்கம் - சிவக்குறி. அருவுருவத் திருமேனி.

குறிப்பு :- திருவல கிடுதல் - திருமெழுக் கிடுதல் - நீர் சுமந்து ஆட்டுதல் - மலர் பறித்துப் புனைதல் - அடி வீழ்ந்து புகழ்தல் முதலிய சரியைத் தொழிகளையே இங்கு எடுத்துக் கூறினார், சிவனைக் காணும் நெறி நிற்பார் புகும் முதற்படி அதுவே யாதலின். "சுத்த சைவத்துக் குயிரதே" என்பது திருமூலர் திருமந்திரம் (5. 25). இதனைத் தாசமார்க்கம் என்று கூறுவர். இதனைத் "தாத மார்க்கஞ் சாற்றில்" (சித்தி - 8. 19) என்ற திருவிருத்தத்தால் ஞான சாத்திரம் விரிப்பது காண்க. இந்நெறியில் முற்படாதார் சிவநெறி புகுதல் இயலாதென்க. இப்பதிகம் பொதுப்பதிகமென்று வகுத்திருப்பினும் இத்தலத்தில் அருளப்பட்ட தென்று கருத இடமிருத்தலின் இங்குத் தரப்பட்டது.

1579.

பணியார் வேணிச் சிவபெருமான் பாதம் போற்றிப் பணிசெயுநாண்
மணியார் கண்டத் தெம்பெருமான் மண்மேன் மகிழு மிடமெங்குந்
தணியாக் காத லுடன்சென்று வணங்கித் தக்க பணிசெய்வார்
அணியார் தொண்டைத் திருநாட்டி லருளா லணைவா ராயினார்,

314

1580.

காதல் செய்யுங் கருத்தினுடன் காடு மலையுங் கான்யாறுஞ்
சூத மலிதண் பணைப்பதிகள் பலவுங் கடந்து, சொல்லினுக்கு
நாதர் போந்து, பெருந்தொண்டை நன்னா டெய்தி, முன்னாகச்
சீத மலர்மென் சோலைசூழ் திருவோத் தூரிற் சென்றடைந்தார்.

315

1579. (இ-ள்.) வெளிப்படை. பாம்புகளை அணிந்த சடையினையுடைய சிவபெருமானது பாதங்களைப் போற்றித் திருப்பணிகள் செய்த இருக்கும் நாளில், திருநீலகண்டராகிய எமது இறைவர் இப்பூவுலகில் மகிழ்ந்து எழுந்தருளியிருக்கும் தலங்கள் எங்கும் தணியாத காதலுடனே சென்று வணங்கி ஏற்ற திருப்பணிகளைச் செய்வாராகிய நாயனார், அழகிய திருத்தொண்டை நாட்டில் திருவருள் செலுத்த அணைவாராகி,

314