பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்533

 

1580. (இ-ள்.) வெளிப்படை. அன்பு மிகுந்த பணிகள் செய்யும் கருத்தினோடு, காடுகளையும் மலைகளையும் கான்யாறுகளையும் மாஞ்சோலைகள் நிறைந்த குளிர்ந்த வயல்களையுடைய நகரங்கள் பலவற்றையும் கடந்து, திருநாவுக்கரசு நாயனார், சென்று, பெரிய தொண்டை நன்னாட்டினைச் சேர்ந்து, முன்னாகக், குளிர்ந்த மென் மலர்கள் நிறைந்த சோலைகளாற் சூழப்பட்ட திருவோத்தூரினைச் சென்று அடைந்தனர்.

315

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண் டுறைக்க நின்றன.

1579. (வி-ரை.) பணியார் - பணி - பாம்பு; பணிசெய்யும் - பணி திருப்பணிகள்; சொற்பின் வருநிலை. பணிசெய்யும் நாள் - திருவண்ணாமலையில் நாயனார் பலநாள் தங்கிப் பணிகள் செய்தெழுந்தருளியிருந்தனர்.

இடமெங்கும்....சென்று வணங்கி - பணிசெய்வார் - செய்வார் - வினைப்பெயர். செய்வாராகிய நாயனார். இடமெங்கும் - என்றதனால் நடுநாட்டில் அணிமையில் உள்ள பல தலங்களிலும் நாயனார் சென்று வணங்கி வந்தருளினர் என்பதும், இவை திருக்கோவலூர் வீரட்டம், திருமுண்டீச்சுரம், திருவாமாத்தூர் முதலாயின என்பதும் ஈண்டுக் கருதப்படும். ஆளுடைய பிள்ளையார் இங்குச் சிலநாள் வைகியருளியமையும் காண்க. (திருஞான - புரா - 972.)

பணி செய்வார் - அணைவாராயினாரகிச் சென்றடைந்தார் - என மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. அணைவாராயினார் - முற்றெச்சம்.

தக்க - அங்கங்கும் அன்பின் நிறைவுக்கேற்றவாறு.

அணி ஆர் - "தாரணிக்கு, மங்கலமாம் பெருந்தொண்டை வளநாடு" என்றபடி அவ்வணியாவது உலகங்களெல்லா முய்யும்படி அம்மையார் சிவபிரானைப் பூசித்த பெருஞ் செயலின் விளைவாம்.

அருளால் - தமது செயல் என்பதின்றிச் சிவனருள் செலுத்த. தொண்டை நாட்டிற் காளத்தி கண்டு, "தாணுவினை யம்மலைமேற் றாள்பணிந்த குறிப்பினால், பேணுதிருக் கயிலை மலை வீற்றிருந்த பெருங்கோலங், காணுமது காதலித்து"ச் செல்லும் சிவானந்த விளைவுபெறும் அருட் சரிதக் குறிப்பு.

தொண்டைத் திருநாடு - மேல்வரும் பாட்டில் "பெருந் தொண்டை நன்னாடு" என்பதுங் காண்க. 1078 -1082 பாட்டுக்கள் பார்க்க.

தணியாக் காதல் - அடிமை நெறியிற் செல்லச் செல்லக் குறையாமலும் சலியாமலும் மேன்மேல் வளர்ந்து ஒங்கும் ஆசை.

314

IV திருச்சிற்றம்பலம்

திருக்குறுந்தொகை

வட்ட னைமதி சூடியை வானவர், சிட்ட னைத்திரு வண்ணா மலையனை,
யிட்ட னையிகழ்ந் தார்புர மூன்றையு, மட்ட னையடி யேனமறந் துய்வனோ?

1

அரக்க னையல றவ்விர லூன்றிய, திருத்த னைத்திரு வண்ணா மலையனை,
யிரக்க மாயென் னுடலுறு நோய்களைத், துரக்க னைத்தொண்ட னேன்மறந் துய் வனோ?

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- திரு அண்ணாமலையனை அடியேன் மறந்து உய்வனோ? "திருவடி மறப்பிலேன்" என்ற திருநேரிசைக் கருத்தைத் தொடர்ந்து சொல்லி யருளியது. திருவண்ணாமலையினின்றும் பல தலங்களையும் சென்று வணங்கி மீண்டருளும்போது அருளிய கருத்து. "தினைத்தனைப் பொழுதும் மறந்துய்வனோ?" என்ற கோயிற் குறுந்தொகைத் திருப்பதிகக் கருத்தினை ஆசிரியர் உரைத்தவாறு நினைவு கூர்க. (1439).