பக்கம் எண் :


538திருத்தொண்டர் புராணம்

 

1583. (வி-ரை.) "ஞாலம்....வரப்பெற்றோம்" என்று - இது காஞ்சி வாழும் அன்பர்கள் மனத்தில் எண்ணியது. "விரைந்தாளும் நல்குரவே" (தேவா) என்றும், "ஒறுத்தா லொன்றும் போதுமே" (திருவாசகம்) என்று, வரும் திருவாக்குக்களாலறியப்படுகின்றபடி, காஞ்சிவாணர், நாயனாரைச் சூலைதந்து இறைவர் ஈர்ந்து ஆட்கொண்டதனைப் பேரருளாகக் கருதினார்கள் என்பது.

வரப் பெற்றோம் - நாயனார் தம்மிடை எழுந்தருள்வதனைப் பெரும் பேறாகக் கருதினர் என்க.

காலை மலரும் கமலம் போல் - வினைபற்றி எழுந்த உவமம். காலை - ஆகு பெயராய் இங்குக் காலையில் எழும் ஞாயிற்றினையும் உணர்த்தி நின்றது. நாயனாரை ஞாயிறாகவும், காஞ்சிவாணர் முகங்கள் அந்த ஞாயிற்றின் முன்பு மலரும் கமலங்களாகவும் கொள்ள நின்றது.

தழைத்த - எழுச்சி பெற்ற. தழைத்தலாவது ஆனந்த மேலீட்டினாற் கிளர்ச்சி பெறுதல்.

தாங்குவார் - எதிர்கால முற்றெச்சம். தாங்குவாராகி. தாங்குவார் - அலங்கரித்தார் என மேல்வரும்பாட்டுடன் கூட்டி முடிக்க.

ஞாலம் உய்ய - பேர் அருளினால் என்றும், ஞாலம் உய்ய - ஆண்ட என்றும், கூட்டி உரைக்க நின்றது.

காலை மருவும் - சால மகிழ்ந்து - என்பனவும் பாடங்கள்.

318

1584. (வி-ரை.) மாட வீதி - இருபுறமும் மாடங்கள் நிறைந்த. திருவிழா நடைபெறும் வீதியை மாடவீதி என்று வழங்குவதும் மரபு. மாடம் - கோயில் என்றுகொண்டு, கோயிலைச் சுற்றிய வீதி என்பதுமாம். காஞ்சிவாணர் நாயனாாரது வரவைப் பெருவிழாவாகக் கொண்டு மாடவீதிகளின் வழி எதிர்கொள்ள அணிசெய்தனர் என்க.

தோரணங்கள் - கதலி, கமுகு, நிரைத்தல் - இவை நாட்டும் அலங்கார வகை. நிறைகுடம் - தீபம் - மாலை சூழ்ந்த பந்தர் - கொடி இவை எடுக்கும் உபசார வகை.

நிரைத்து - வரிசைபெற அமைத்து.

நிரைத்து - எடுத்து - நிரைத்தல் அங்கங்கும் நிலைபெறும்படி கட்டி அணி செய்தல்; எடுத்தல் - கூடவே எடுத்துச் செல்லுதல். பந்தர் - காம்புகளால் எடுத்துச் செல்லும் கவிகைப் பந்தர். ஆளுடைய பிள்ளையாருக்கு இறைவர் அருளிய முத்துப்பந்தரின் செய்தி இங்கு நினைவுகூரத் தக்கது.

ஆடு - மேல் அசைகின்ற. கொடி - வெண் கொடிகள்.

அலங்கரித்தார் - நிலைபெறுத்தவையும் எடுத்தவையுமாக இவ்வாறு அலங்கரித்தனர்.

அணிநீள் காஞ்சி அலங்கரித்தார் - அணி - முன்னமே அழகு பொருந்தச் செய்யப்பட்டதனை மேலும் நாயனாரது வருகையின் பொருட்டு இவ்வாறு சிறப்பாக அலங்கரித்தனர். நீள் - என்றுமுள்ளது (1162).

இப்பாட்டினாற் காஞ்சிவாணர்கள் எல்லாம் மனங்களிப்பச் செய்த நகர் அணிகள் கூறப்பட்டன. நகரமாந்தர் எல்லாரும் இவ்வாறு களித்து அணிசெய்தார்களாக, அவர்களுக்குள்ளே, தொண்டர்கள் மட்டும் கூடி எதிர்கொள்ளச் சென்றனர், அத்தகுதி வாய்ந்தவர்கள் அவர்களேயாகலான். அது மேற்பாட்டிற் கூறுவார்.

மறுகெல்லாம் - நெருங்கு - நிறை - என்பனவும் பாடங்கள்.

319

1585.

தொண்ட ரீண்டி யெதிர்கொள்ள வெழுந்து சொல்லுக் கரசர்பால்
கொண்ட வேடப் பொலிவினொடுங் குலவும் வீதிப் பணிசெய்யும்