பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்539

 

அண்ட ரறிதற் கரியதிரு வலகு முதலா மவையேந்தி
யிண்டை புனைந்தசடை முதடியார்க்கன்பர் தம்மை யெதிர்கொண்ட

(இ-ள்.) கொண்டவேடப் பொலிவினொடும் - இதற்கென்று மேற்கொண்ட திருவேடப் பொலிவுடனே; எதிர்ொள்ள - எதிர்கொள்வதற்காக; சொல்லுக் கரசர்பால் தொண்டர் ஈண்டி எழுந்து - திருநாவுக்கரசர் வரும் வழியில் தொண்டர்கள்கூடி எழுந்து சென்று, குலவும்...அவை ஏந்தி - விளங்கும் திருவீதிப் பணிசெய்யும், தேவருமறிவதற்கரிய, திருவலகு முதலியவற்றை எடுத்து ஏந்திக் கொண்டு; இண்டை...கொண்டார் - இண்டைமாலை சூடிய சடைமுடியினையுடைய பெருமானார்க்கு அன்பராகிய அவரை எதிர்கொண்டனர்.

(வி-ரை.) தொண்டர் - சைவத் திருநெறி நான்கிலும் நின்று தொண்டுசெய்யும் அடியார்கள். சைவத் திருநெறித் தொண்டர்கள்.

ஈண்டி - எழுந்து - ஏந்தி - எதிர்கொண்டார் என்று முடிக்க.

ஏந்தி - ஏந்திச் சென்று. ஈண்டி - தொண்டர் பெருமானாகிய வாகீசர் எழுந்தருளுதலால் அதற்கு ஏற்றவாறு பற்பல தொண்டர்களும் கூடிச் சென்றனர்.

கொண்ட வேடப் பொலிவினொடும் - தொண்டர்கள் எஞ்ஞான்றும் நீறும் கண்டிகையும் பூணும் திருவேடத்துடனிருப்பினும் நாயனாரை எதிர் கொள்வதற்காகச் சிறப்பாக மேற்கொண்ட திருவேடப் பொலிவுடன் சென்றனர் என்க.

குலவும் - குலவுதல் - விளங்குதல். "குலாத்தில்லை" (திருவா), "குலாவுபாதம் விளக்கியே" (443). திருவேகம்பர் திருவுலா வரும் பெருவிழா வீதியாதலின் இவ்வாறு சிறப்பித்தார். இதுபற்றியே இத்திருவீதியிற் பணிசெய்யும் திருவலகும் சிறப்புடையதாய் அண்டரும் அறிதற்கரியதென்று விதந்து எடுத்தோதப் பட்டதுமன்றி, நாயனார் எழுந்தருளும்போது வழியெதிர்கொள்ளும் தொண்டர் ஏந்திச் செல்லும் மங்கலப் பொருள்களுள் ஒன்றாயிற்று. என்றும் கூறப்பட்டது.

வீதிப்பணி செய்யும் - திருவலகு என்க. திருவலகு முதலா எடுத்து ஏந்தி - பெருமானது விழாப்பொருள்களான குடை கொடி ஆலவட்டம் முதலியவற்றை ஏந்துதல்போலத் திருவலகினையும் ஒக்க எடுத்தேந்துதல் அந்நாள் வழக்கும் மரபுமாம். இந்நாளில் மக்கள் சிவநெறி ஒழுக்கங் குன்றியபடியால் பிழைபட்ட மன நிலைகொண்டவர்களாய் வேறுவகையாகக் கருதுவரேல் அஃது அவர்தம் இழுக்கேயாம்; சிவாபராதமுமாம். அன்றியும், "பார்வாழத் திருவீதிப் பணி செய்து" (1490) ஒழுகுதலே தமது நியமமாகக் கொண்டொழுகிய நாயனார்க்கு அத்திருப்பணிக்குரிய திருவலகு, எதிர்கொள்ளத்தக்கது, அவரது விருப்பங் கவரத்தக்கதுமாகிய உயர்ந்த மங்கலப்பொருளாமென்பதுமொரு குறிப்பு. "திருவென்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் என்ற அழகு....யாவனொருவன் யாதொரு பொருளைக் கண்டானோ அக்கண்டவற்கு அப்பொருள் மேற் சென்ற விருப்பத்தோடே கூடிய அழகு" என்று உரைத்து, "அலகைத் திருவலகு என்றும் - வரும் இத்தொடக்கத்தன" என்று உதாரணமும் தந்த (திருக்கோவையார் - 1) பேராசிரியர் உரை ஈண்டுக் கருதத்தக்கது.

அண்டர் அறிதற்கரிய - தேவர்கள் யாகாதி பசு புண்ணியப் பலன்களாகிய சுவர்க்கா திபோகங்களை நுகர்ந்து பிறவிக்கே வழிதேடி அலைபவர்களாயும், சரியை முதலிய சிவநெறியொழுகி முத்தியடைதல் வேண்டின் அவர்கள் இந்நிலவுலகத்தில் வந்து அடியார்களை அடைந்து சிவவொழுக்கந் தெரிந்துகொள்ளத் தக்கவர்களாயும், அதுபற்றியே, "மாவா ழகலத்து மான்முதல் வானவர், ஒவாதென்று நிறைந்து" தேவாசிரியன் முன்பினும் சிவபெருமான் திருக்கொயில் வாயிலினும் குழுமி நிற்பவர்களாயும் உள்ளவர்களாதலின் திருவீதிப்பணி செய்யும்